பேச்சு:மாரடைப்பு

மாரடைப்பு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
மருத்துவம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் மருத்துவம் என்னும் திட்டத்துள் மாரடைப்பு எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மாரடைப்பு எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இதயத்திசு இறப்பு என்னும் தலைப்புடன் இதே பொருளில் கட்டுரை உள்ளது. மயூரநாதன் 09:41, 17 ஜனவரி 2009 (UTC)

என்னால் இதை இதயத்திசு இறப்பு க்கு நகர்த்த \ வழி மாற்ற முடியவில்லை. யாராவது நகர்த்தினால் நலம் --குறும்பன் 16:47, 17 ஜனவரி 2009 (UTC)

மாரடைப்பு (angina) வேறு. இதயத்திசு இறப்பு (infarction) வேறு. இதய அடைப்பு (hear block) என்பதும் வேறு. கூட்டு முயற்சியாக infarction தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அதையே சற்று விரிவாக்க முயற்சிக்கிறேன். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 05:41, 20 பெப்ரவரி 2012 (UTC)

கார்த்திகேயன், மருத்துவ நோக்கில் உள்ள வேறுபாட்டைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. தமிழகத்தில் மாரடைப்பு என்னும் சொல் heart attack என்பதற்கு ஈடாகப் பயன்படுகிறது. எனவே, இது குறித்த விழிப்புணர்வைக் கூட்டும் வகையில் உள்ள தகவலை ஒரே கட்டுரையிலோ தனித்தனிக்கட்டுரைகளாகவோ ஆக்குவது பயன் தரும். நன்றி--இரவி 06:45, 20 பெப்ரவரி 2012 (UTC)

Heart attack என்ற சொல்லை மருத்துவப் புத்தகங்களில் பயன்படுத்துவதில்லை. ஆனால் பொது மக்கள் இதை angina & infarction இரண்டையுமே குறிக்கப் பயன்படுத்துகின்றனர். அது தான் இங்கே பிரச்சினையே. அட்டாக்ல (மாரடைப்பால்) இறந்துட்டார் என்று சொல்லுமிடத்தில் அட்டாக் infarction ஐக் குறிக்கிறது.

எனக்கு 5 அட்டாக் வந்திருக்கு தெரியுமா ? என்று பெருமையுடன் சொல்பவர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். இவ்விடத்தில் அட்டாக் angina வைக் குறிக்கிறது. அட்டாக் மற்றும் மாரடைப்பு இரண்டுமே angina & infarction என்ற இரண்டு பொருள்படக் குழப்பப்படுகின்றன. தமிழ் விக்கியில் இக்குழப்பங்கள் ஓரளவேனும் தவிர்க்கப்பட வேண்டும். (பி.கு - பணி மிகுதியால் இனிவரும் உரையாடல்களில் என்னால் பங்களிக்க இயலாத நிலை உள்ளது. இயன்ற வரை கட்டுரையை விரிவாக்க முயல்கிறேன். மாற்றங்களை என்னைக் கேட்காமலேயே செய்யலாம்) நன்றி!--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 06:58, 20 பெப்ரவரி 2012 (UTC)

கார்த்திகேயன், வேறுபாட்டைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. தற்போதைய கட்டுரையின் தொடக்கம் இதயத்திசு இறப்பு என்கிறது. ஆனால், இதனை மாரடைப்பு என்னும் தலைப்பில் முதன்மைப்படுத்தியுள்ளோம். angina என்பது நெஞ்சு வலி என்று ஆங்கில விக்கி கூறுகிறது. மாரடைப்பு என்பதோ இதய அடைப்பு என்ற பொருளோடு ஒத்து வருகிறது. தமிழ் விக்கியில் இக்குழப்பங்களை ஓரளவேனும் அன்று முற்றிலுமாகவே களைய வேண்டும். இதயத்திசு இறப்பு, நெஞ்சு வலி, மாரடைப்பு அல்லது இதய அடைப்பு என்னும் வரிசையில் முக்கியத்துவம் தந்து அனைத்துத் தகவலையும் ஒரே கட்டுரையில் தரலாம். கூடுதல் தகவல்களை தனித்தனி முதன்மைக்கட்டுரைகளாக ஆக்கலாம். இதைச் செய்து முடித்த பிறகு தலைப்பையும் வழிமாற்றையும் குழப்பம் இல்லாமல் மாற்ற வேண்டும்--இரவி 11:47, 20 பெப்ரவரி 2012 (UTC)

பார்க்க - இதய அடைப்பு--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 13:14, 20 பெப்ரவரி 2012 (UTC)

மரு. பெ. கார்த்திகேயன், நன்றி. இன்னுமொன்று கவனத்தில் எடுக்கவேண்டியது உள்ளது, Heart attack, cardiac arrest இரண்டுமே ஒன்று எனப்

புரிந்துகொள்ளுபவரும் உண்டு. Heart attack ஆல் cardiac arrest வரலாம் என்பதை எங்கேனும் சுட்டிக்காட்டி விளக்குதலும் தேவை எனக்கருதுகிறேன்.

சில தேவையான சொற்பதங்கள் தொகு

(வேறு சொற்பதம் உண்டாயின் குறிப்பிடுங்கள், அனைத்து இதயம் தொடர்பான கட்டுரைகளிலும் பொதுமை பேணப்படுவதற்காக இங்கு குறிப்பிடுகின்றேன்)
  • Atherosclerosis : (தமனிக்) கூழ்மத்தடிப்பு;
  • Ischaemic heart disease: குருதி ஊட்டக்குறை இதய நோய் ;
  • Angina pectoris : மார்பு நெருக்கு (அல்லது மார்பு நெரிப்பு (நெறிப்பு?)
நெருக்கு, (p. 689) [ nerukku, ] கிறேன், நெருக்கினேன், வேன், நெருக்க, v. a. To press, crush, squeeze, bruise, smash, ஒடுக்க.
angina : 1570s, from L. angina "infection of the throat," from Gk. ankhone "a strangling";

probably influenced in Latin by angere "to throttle." Angina pectoris is from 1744, from L. pectoris, gen. of pectus "chest."

  • Myocardial infarction (MI) : சரியாகப் பொருந்தக்கூடிய பெயர் = இதயத்தசை இறப்பு

இதயத்திசு இறப்பு என்பதை விட இதயத்தசை இறப்பு என்பது இன்னும் பொருள் உணர்த்துகின்றது.

  • Acute Coronary Syndrome: திடீர் முடியுருத்தமனி கூட்டறிகுறி அல்லது கடிய முடியுருத்தமனி கூட்டறிகுறி;

மரு. பெ. கார்த்திகேயன் விளக்கியது போல மாரடைப்பு என்பது, angina, MI இரண்டையுமே உணர்த்துகின்றது. மாந்தரும் பொதுவாக இரண்டையுமே மாரடைப்பு என்று கூறுகின்றனர். ஆனால் மாரடைப்பு என்பது நிலையான anginaவைச் சுட்டப் பொருந்தாது எனக் கருதுகிறேன். எனவே, குழப்பத்தைத் தவிர்க்கும் பொருட்டு, 'Angina pectoris' மார்பு நெருக்கு அல்லது மார்பு நெரிப்பு எனவும் Myocardial infarction இதயத்திசு இறப்பு அல்லது இதயத்தசை இறப்பு எனவும் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைக்கின்றேன். இவ்விரண்டு வெவ்வேறு கட்டுரைகளிலும் "மாரடைப்பு" எனப்படும் சொல் இரண்டையும் குறிக்க பொதுமக்களால் பயன்படுத்தப்படுகின்றது எனும் வாக்கியத்தை இட்டால் போதுமானது. கார்த்திகேயன், தங்களின் கருத்தைத் தெரிவியுங்கள். மேலும் திடீர் இரத்தக்குழாய்க் கூட்டறிகுறி என்பதற்கு திடீர் முடியுருத்தமனி கூட்டறிகுறி எனலாம் என்பது எனது பரிந்துரை. மரு. பெ. கார்த்திகேயன், திடீர் இரத்தக்குழாய்க் கூட்டறிகுறி (திடீர் முடியுருத்தமனி கூட்டறிகுறி) எனும் தலைப்பின் கீழ் NSTEMI , UA இரண்டுமே ஏறக்குறைய ஒத்தவை எனினும் இவை இரண்டும் ஒன்று இல்லைதானே.. --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 13:53, 20 பெப்ரவரி 2012 (UTC)

தங்கள் பரிந்துரைகளுக்கு நன்றி மரு. செந்தி. ST-உயர்வு இல்லாத MI மற்றும் நிலையற்ற ஆஞ்சைனா இரண்டும் வெவ்வேறே. விக்கிப்பணிகளில் அவ்வப்போது மட்டுமே ஈடுபட்டு வருவதால் துறைவாரியான கட்டுரைகளில் கலைச்சொல் ஆளுகை குறித்த பரிந்துரை குறித்து கருத்து தெரிவிக்க இயலாத நிலையில் உள்ளேன். என்னால் முடிந்த வரை மருத்துவத்திட்டக் கட்டுரைகளில் பங்களிக்கிறேன். நன்றி!--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 14:05, 9 மார்ச் 2012 (UTC)

\

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மாரடைப்பு&oldid=1071127" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மாரடைப்பு" page.