பேச்சு:முல்லைப் பெரியாறு அணைப் போராட்டம்

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Surya Prakash.S.A.
இது தமிழக செய்தி ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இரு தரப்பு வாதங்களையும் சமநிலையில் வைப்பது தேவையானது.--மணியன் 11:31, 15 திசம்பர் 2011 (UTC)Reply
மணியன் சொல்வது சரியானது. இதில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு, கேரளாவின் நிலைப்பாடு போன்றவைகளும் இடம் பெற வேண்டும். இக்கட்டுரையை நான் தொடங்கிய போது இருவேறு நிலைகளையும் இங்கு குறிப்பிட வேண்டும் என்று விரும்பினேன். அதற்குள் மற்றொரு பயனர் சில மாற்றங்களைச் செய்து விட்டார். நான் இது குறித்து முழுமையான கட்டுரையை உருவாக்கிவிட்டு மொத்தமாக அப்படியே உள்ளீடு செய்து விடலாம் என இருக்கிறேன். அதுவரை இப்படியே தொடரட்டும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 12:57, 15 திசம்பர் 2011 (UTC)Reply
இக்கட்டுரையின் தொடக்கப்பகுதியில் (Lead section) மேலும் முன்னேற்றம் தேவை. அப்பகுதி எத்தகவலையும் கூறவில்லை. வெறும் அணையைப் பற்றியே கூறுகிறது. அப்பகுதியில் அணைப்போராட்டம் தொடர்பான தகவல்கள் தரப்படவேண்டும். --சூர்யபிரகாசு உரையாடுக... 14:37, 15 திசம்பர் 2011 (UTC)Reply

"நடுவண்/மத்திய அரசு" -> "ஒன்றிய அரசு" தொகு

இக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண்/மத்திய அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை "ஒன்றியம்" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு "ஒன்றிய அரசே". ஆதலால், "நடுவண்/மத்திய அரசு" என வரும் இடங்களை "ஒன்றிய அரசு" என மாற்றியுள்ளேன் - பத்மாக்சி (உரையாடுக) 11:42, 24 சூன் 2017 (IST)

Return to "முல்லைப் பெரியாறு அணைப் போராட்டம்" page.