பேச்சு:யமன் (இந்து மதம்)
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Theni.M.Subramani in topic கடோபநிசத்
பொது வழக்கு
தொகுஎமன் என்று எழுதுவதும், பேசுவதும் பொது வழக்கில் இருக்கிறதே?? யமன் என்பதை முதன்மைப்படுத்த வேண்டுமா?--ரவி 20:49, 4 பெப்ரவரி 2008 (UTC)
- ஆம். எல்லா இடங்களிலும் அப்படித்தான் பார்த்துள்ளேன். இந்த தளத்தில் இன்று திருப்பள்ளி எழுச்சி கேட்டுக்கொண்டிருந்தேன். பெருவன் என்ற சொல்லை ஆண்டிருந்தார். அதுவும் எமனைக் குறிப்பதா? -- சுந்தர் \பேச்சு 02:13, 6 பெப்ரவரி 2008 (UTC)
இரண்டும் சரி சமமான அளிவிலேயே பயன்படுத்துப்படுகிறது என நினைக்கிறேன். யமனுக்கு கூகிளில் 3500 முடிவுகளும் எமனுக்கு கூகிளில் 6500 முடிவுகளும் வருவதில் இருந்து ஒரளவுக்கு இரண்டும் பரவலான பயன்பாட்டில் உள்ளதை அறியலாம். βινόδ வினோத் 08:38, 6 பெப்ரவரி 2008 (UTC)
மீண்டும் கூகுளா ;) --ரவி 09:08, 6 பெப்ரவரி 2008 (UTC)
கடோபநிசத்
தொகு- மனிதனின் இறப்புக்குப் பின் நடக்கும் செயல்கள் குறித்த தகவல்களாக எமனும் நசிகேதனும் பேசிக் கொள்ளும் உரையாடல்கள் வடிவில் கடோபநிசத் எனும் பெயரில் இந்து சமயத்தில் சொல்லப்பட்டுள்ளது என நினைக்கிறேன். இக்கட்டுரையில் குணவியல்புகள் எனும் உள்தலைப்பின் கீழ் கதா உநிடத்தில் யமன் மிகச்சிறந்த ஆசிரியராக என்று குறிப்பிடப்படுகிறதே... இது கடோபநிசத்தில் யமன் மிகச் சிறந்த ஆசிரியராக... என்பதுதான் சரியாக இருக்குமென நினைக்கிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 12:50, 28 சூலை 2011 (UTC)