பேச்சு:வங்கதேசம் (புராதனம்)
புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் இதில் வங்கதேசமும் ஒன்று ஆனால் ஏற்கனவே உள்ள வங்க தேசம் என்ற கட்டுரை இன்றைய வங்காள தேசத்தைக் குறிக்கிறது. இந்த வங்கதேசமென்ற கட்டுரை வங்காளத்தைப் பற்றியது அல்ல, இதன் எல்லை காசியிலிருந்து இன்றைய கொல்கத்தா வரையிலுமே எனவே வங்காளதேசம் என்ற கட்டுரையின் முந்தைய கட்டுரைப் பெயரான வங்கதேசம் என்று இருப்பதால் இந்த வங்கதேசம் என்ற கட்டுரையை சேமிக்க இயலவில்லை எனவே வங்கதேசம் என்ற பெயரில் கட்டுரை அமைய உதவவும்--Yokishivam (பேச்சு) 03:02, 15 திசம்பர் 2013 (UTC)
- வங்கதேசம் என்பது இந்தியாவின் மேற்கு வங்காளம், பங்களாதேஷ் இரண்டும் சேர்ந்த பகுதியே! பின்னரே, பிரிவினையின் காரணமாக இரண்டும் பிரிந்தன. நீங்கள் சொல்வதைக் கொண்டு நோக்குகையில், வங்கதேசம் என்ற தலைப்பில் இந்த கட்டுரை இருக்க வேண்டும். அப்படித்தானே? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 03:50, 15 திசம்பர் 2013 (UTC)
- வங்கதேசம் என்று இன்று வழங்கப்படுவது வங்காளதேசம் மட்டுமே. இதனால் அந்நாட்டுக்கே அது வழிமாற்றாக இருக்க வேண்டும். புராதன தேசத்திற்கு வங்கதேசம் (புராதனம்) என்ற தற்போதுள்ள தலைப்பே சிறந்தது என எனக்குப் படுகிறது. அல்லது வங்கதேசம் (இந்தியா) எனவும் தலைப்பிடலாம். இந்த 56 தேசங்களைப் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரைகள் உண்டா?--Kanags \உரையாடுக 03:53, 15 திசம்பர் 2013 (UTC)
- வங்காளதேசம் கட்டுரையில் முதல் வரிகளில் இணைப்புக் கொடுத்துள்ளேன். இனிக் குழப்பம் இருக்காது. வங்கதேசம் (இந்தியா) என்ற தலைப்புப் பற்றியும் சிந்தியுங்கள்.--Kanags \உரையாடுக 04:07, 15 திசம்பர் 2013 (UTC)
இன்றைய தேசமா?
தொகுயோகிசிவம், உங்கள் 56 கட்டுரைகளிலும் முதல் வரிகளில் பரவி இருக்கிற தேசம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இதன் படி, இப்போதும் இப்பிரதேசம் நடைமுறையில் உள்ளது என விளங்கிக் கொள்கிறேன். நான் விளங்கிக் கொண்டது சரிதானா?--Kanags \உரையாடுக 04:19, 15 திசம்பர் 2013 (UTC)
தவறுக்கு வருந்துகிறேன்
தொகுவணக்கம்!கனக்ஸ் 56 கட்டுரைகளிலும் முதல் வரிகளில் பரவி இருக்கிற தேசம் என்பது தவறுதான், எனது வயதொத்த நண்பர்கள் பேசிக்கொள்ளும் போது இந்த 56 தேசங்களைப்பற்றி வியாக்கியானம் செய்வதுண்டு. அப்போதெல்லாம் இதுபற்றி எந்த தகவலும் கிடைக்காது. சமீபத்தில் இணையத்தில் தேடிய போதும் கிடைத்தபாடில்லை. இந்த 56 கட்டுரைகளிலும், பரவி இருந்த என்றிருந்தால் சரியாகுமென்று எண்ணுகிறேன். ஏனென்றால் 56 தேசங்களில் பெரும்பாலான தேசங்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் மாவட்டங்களாக உள்ளது. (உ.ம்) இதே வங்கதேசத்தின் கொல்கத்தா அன்று பௌண்ட்ர தேசம் எனவே குழப்பத்தை தவிர்க்க வங்கதேசம்(புராதனம்) என்றே இருக்கட்டுமே!!!--Yokishivam (பேச்சு) 08:35, 15 திசம்பர் 2013 (UTC)