பேச்சு:வாஞ்சிநாதன்

வாஞ்சிநாதன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

//இந்தியர்கள் நடத்திவந்த சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனியை இந்தியர்கள் நடத்தக் கூடாதென்று தடுத்தது

Untitled

தொகு

வெள்ளையர் அரசாங்கம். இதற்காகப் பாடுபட்டு வந்த வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது. இக்காரணங்களினால் திருநெல்வேலி கலெக்டராக இருந்த ஆஷ் துரையைக் கொல்ல வாஞ்சி முடிவு செய்தார்.// என இக்கட்டுரையில் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால்,
(1) வாஞ்சிநாதன், ஆஷைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டபொழுது தன்னுடைய சட்டைப்பையில் வைத்திருந்த கடிதத்தில் இவ்வாறு குறிக்கவில்லை;
(2) வ.உ.சி. தன்னுடைய சுயசரிதையில் தன்னைக் கைது செய்ததைக் கண்டிப்பதற்காகவே ஆஷை, வாஞ்சிநாதன் கொன்றதாகக் குறிக்கவில்லை. மாறாக அச்செய்தியைச் சொன்ன மருத்துவருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதோடு முடித்துக்கொள்கிறார்.
(3) வ.உ.சி.யின் அணுக்கராக இருந்த பரலி சு. நெல்லையப்பர், தான் எழுதிய வ.உ.சிதம்பரம் பிள்ளை சரித்திரத்திலும் இக்கருத்தைக் கூறவில்லை.
(4) ஆஷ் கொலைவழக்கு ஆவணங்களிலும் இக்கருத்து இல்லை.
இவ்வாறு அகச்சான்றுகள் எதுவும் இல்லாத செய்தியை இக்கட்டுரை தாங்கி இருக்கிறது. எனவே இப்பகுதியை நீக்க வேண்டும்.--அரிஅரவேலன் (பேச்சு) 11:29, 9 ஆகத்து 2012 (UTC)Reply

வ.உ.சி யை கைது செய்ததால் கொலை செய்யவில்லை, 5ம் ஜார்ஜின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் சனாதான தருமத்தை காக்கும் பொருட்டும் ஆஷ் துரையை வாஞ்சி கொன்றான் [1] [2] [3] [4]. இன்னும் ஒரு வாரம் பொருத்திருந்து வேறு விதமான ஆதாரம் கிடைக்கவில்லையெனில் மாற்றிவிடலாம். --குறும்பன் (பேச்சு) 17:46, 28 ஆகத்து 2012 (UTC)Reply
அங்ஙனமே செய்யலாம்.--அரிஅரவேலன் (பேச்சு) 07:18, 29 ஆகத்து 2012 (UTC)Reply
போதிய ஆதாரங்கள் இதுவரை யாராலும் கொடுக்கப்படாததால் அப்பகுதியை நீக்கியிருக்கிறேன்.--பொன்னிலவன் (பேச்சு) 09:25, 10 செப்டெம்பர் 2012 (UTC)Reply

தி இந்து செய்தி

தொகு

@Uksharma3: தமிழ் இந்துவில் வெளிவந்த செய்தி முழுக்க முழுக்கத் தவறானது. அதனை அவர்கள் நீக்கியும் விட்டார்கள். அப்படியிருக்க அதனைப் பற்றி இங்கு கட்டுரையில் எழுதி இந்துவுக்கும் ஜெயமோகனுக்கும் விளம்பரம் தேட வேண்டுமா? அதனை நீக்கக் கோருகிறேன்.--Kanags \உரையாடுக 09:23, 20 ஆகத்து 2017 (UTC)Reply

செய்தி நீக்கப்படவில்லை. அச்சிலே வந்த ஒரு செய்தியை நீக்குவது எங்ஙனம்? அவர்கள் நேற்று வருத்தம் தெரிவித்துச் செய்தி வெளியிட்டுள்ளதை இப்போதுதான் பார்த்தேன். அதனையும் கட்டுரையில் சேர்த்துள்ளேன். இணையத்தில் கூட இன்னமும் இருக்கிறது. ஒரு செய்தித்தாளில் இடம்பெற்ற நிகழ்வை ஆவணப்படுத்துவதில் என்ன தவறு? இந்து, ஜெயமோகன் இரண்டு தலைப்பிலும் தமிழ் விக்கியில் கட்டுரைகளே இருக்கின்றன. அப்படியிருக்க இன்னொரு கட்டுரையில் அந்தப் பெயர்கள் இடம்பெறுவது எவ்வாறு விளம்பரம் ஆகும் எனத் தெரியவில்லை. நான் எழுதிய தகவலை நீக்க வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நிர்வாகி என்ற முறையில் நீக்க வேண்டும் என நீங்கள் கருதினால் நீங்களே அதனைச் செய்யலாம். --UKSharma3 உரையாடல் 09:45, 20 ஆகத்து 2017 (UTC)Reply
இணையத்தில் வந்த கட்டுரை நீக்கப்பட்டு விட்டது. அது கிடக்க, பொய்யான ஒரு தகவலைத் தெரிவித்து அதனைப் பின்னர் பிழையென்று கூறியதை விக்கிப்பீடியாவில் தெரிவிக்க வேண்டுமா? எதற்காக? இந்து பத்திரிகையின் கட்டுரையில் இதனைத் தெரிவித்தாலும் பரவாயில்லை. (ஆனால், அதுவும் தேவையற்றது). இவ்விவகாரம் ஏனைய கட்டுரைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கக் கூடாது.--Kanags \உரையாடுக 10:08, 20 ஆகத்து 2017 (UTC)Reply
இணையக் கட்டுரை இங்கே இப்போதும் இருக்கிறது. பலமான எதிர்பு கிளம்பியதால் தான் தி இந்து வருத்தம் தெரிவித்தது. இல்லாவிட்டால் தவறான இந்தச் செய்தி வாஞ்சிநாதனுக்குக் களங்கம் விளைவித்திருக்கும். உள் நோக்கம் இல்லை என செய்தித்தாள் கூறினாலும், அதை நம்புவது கடினம். இப்படியான முயற்சிகள் நடக்கின்றன என்பதை ஆவணப்படுத்துவதற்காகவே இத்தகவலைச் சேர்த்தேன். இந்தக் கட்டுரையில் இடம் பெறலாமா கூடாதா என்பது பற்றி விக்கிக் கொள்கைக்கு ஏற்ப நீங்கள் முடிவு செய்யுங்கள். நான் கட்டுரையாளன் தான். எது இடம்பெறலாம் என்பதை நிர்வாகிகள் தான் தீர்மானிக்க வேண்டும். மேற்கோள் பக்கங்கள் இருக்கின்றன. அவற்றை வைத்து யாரும் வேண்டுமானால் இந்துப் பத்திரிகைப் பக்கத்தில் சேர்க்கலாம் தானே.--UKSharma3 உரையாடல் 13:21, 20 ஆகத்து 2017 (UTC)Reply
தவறான செய்தி எனத் தெரிந்த பிறகும் அதைக் கட்டுரையில் இணைப்பது தேவையற்றதாகக் கருதுகிறேன். எனவே அதை நீக்கப் பரிந்துரைக்கிறேன்.--இரா. பாலாபேச்சு 13:12, 21 ஆகத்து 2017 (UTC)Reply
செய்தி வெளியிட்ட இந்து பத்திரிக்கையே உறுதியாக தவறான செய்தி என தெரிந்த பிறகும் அதைக் கட்டுரையில் இணைப்பது தேவையற்றதாகக் கருதுகிறேன். எனவே அதை நீக்கப் பரிந்துரைக்கிறேன்--Arulghsr (பேச்சு) 13:25, 21 ஆகத்து 2017 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வாஞ்சிநாதன்&oldid=4061655" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வாஞ்சிநாதன்" page.