பேச்சு:வாணியாறு அணை

கட்டுரையில் இந்த அணை தருமபுரி மாவட்டத்தில் உள்ளது என்றும் பகுப்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அணைகள் என்றும் முரணாக உள்ளது. சரிசெய்து உதவவும்.--Booradleyp1 (பேச்சு) 14:42, 5 சனவரி 2015 (UTC)Reply

இது தருமரி மாவட்டத்தின் பெரிய அணைகளுல் ஒன்று, என்று 2010ல் [1] ஆங்கில இந்து நாளேட்டில் வந்துள்ளதால் இது கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தது அல்ல --குறும்பன் (பேச்சு) 15:15, 5 சனவரி 2015 (UTC)Reply
சரிசெய்ததற்கு நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:53, 6 சனவரி 2015 (UTC)Reply
வாணியாற்றணை என்றல்லவா இருக்கவேண்டும்??? --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 05:00, 6 சனவரி 2015 (UTC)Reply

சேர்த்தெழுதினால் நீங்கள் கூறியது போலும் பிரித்து எழுதினால் வாணியாறு அணை என்றும் வரும். இது தவறல்லென்பது என் கருத்து. --குறும்பன் (பேச்சு) 17:02, 10 சனவரி 2015 (UTC)Reply

இந்த அணை எனது ஊரின் அருகில் தான் அமைந்துள்ளது. இதனை வாணியாறு அணை என்று தான் அழைக்கிறோம். கட்டுரையின் தலைப்பை மாற்றவேண்டிய அவசியம் இல்லை என்பது எனது கருத்து. பகுப்பை நீக்குகிறேன். சத்தியராஜ் (பேச்சு) 05:44, 25 செப்டம்பர் 2015 (UTC)
அணை பற்றிய விவரங்களை இங்கு பார்க்கவும். --சத்தியராஜ் (பேச்சு) 05:55, 25 செப்டம்பர் 2015 (UTC)
தமிழ்நாடு அரசு என இருக்கும்போது, வாணியாறு அணை என இருப்பதில் தவறில்லை. ஆயினும், பிரித்தெழுதினாலும் வாணியாற்று அணை என்றே வர வேண்டும். காட்டுத்தீ என்பதைக் காடு தீ என எழுதலாமா? --மதனாகரன் (பேச்சு) 09:34, 25 செப்டம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வாணியாறு_அணை&oldid=1923631" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வாணியாறு அணை" page.