பெர்லின்

செருமனியின் தலைநகரம் மற்றும் மாநிலம்
(பேர்லின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெர்லின் இடாய்ச்சுலாந்து நாட்டின் தலைநகராகும். மேலும் இது இடாய்ச்சுலாந்தின் மிகப்பெரிய நகரமுமாகும். இந்நகரத்தில் மொத்தம் 3.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகும். பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் இருந்து இந்நகரம் உள்ளது. இது கிழக்கு இடாய்ச்சுலாந்தில் போலந்து எல்லையிலிருந்து 110 கிலோமீட்டர் மேற்காக அமைந்துள்ளது.இது ஸ்ப்ரீ நதிக் கரையில் அமைந்துள்ளது.இந்த நகரத்தின் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு காடுகளாலும் பூங்காவினாலும் தோட்டங்களாகவும் ஆறுகள் மற்றும் ஏரிகளாகாவும் அமைந்துள்ளது.

பெர்லின்
Clockwise:Charlottenburg Palace, Fernsehturm Berlin, Reichstag building, Berlin Cathedral, Alte Nationalgalerie, Potsdamer Platz and Brandenburg Gate.
பெர்லின்-இன் கொடி
கொடி
பெர்லின்-இன் சின்னம்
சின்னம்
ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஜேர்மனியிலும் பெர்லினின் அமைவிடம்
ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஜேர்மனியிலும் பெர்லினின் அமைவிடம்
Countryஜெர்மனி
அரசு
 • Governing MayorKlaus Wowereit (SPD)
 • Governing partiesSPD / CDU
 • Votes in Bundesrat4 (of 69)
பரப்பளவு
 • City891.85 km2 (344.35 sq mi)
ஏற்றம்
34 m (112 ft)
மக்கள்தொகை
 (9 மே 2011)[1]
 • City32,92,365
 • அடர்த்தி3,700/km2 (9,600/sq mi)
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
Postal code(s)
10115–14199
Area code(s)030
ஐஎசுஓ 3166 குறியீடுDE-BE
வாகனப் பதிவுB (for earlier signs see note)[2]
GDP/ Nominal€ 101.4 billion (2011) [3]
NUTS RegionDE3
இணையதளம்berlin.de

பெர்லின் நகரம் மருத்துவத்திலும் மருத்துவத் தொழில்நுட்பத்திலும் நீண்ட பாரம்பரியத்தை கொண்ட ஒரு நகரம் ஆகும். மருத்துவத்துறையில் பெர்லின் நகர மருத்துவ நிபுணர்கள் பாரிய ஆதிக்கம் செலுத்தினர். உதாரணமாக செல்லுலார் நோயியலின் தந்தை என ருடொள்வ் விர்ச்சொவ் அழைக்கப்பட்டார். அதேவேளை ராபர்ட் கொக் ஆந்த்ராக்ஸ், வாந்திபேதி, காச நோய் போன்ற நோய்களுக்குத் தடுப்பூசி கண்டுபிடித்தார்.

வரலாறு

தொகு

12 முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை

தொகு

பெர்லின் நகரத்தில் மக்கள் வசித்ததற்கான மிகப்பழைய ஆதாரங்களாக ஏறத்தாழ 1192ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகக் கணிக்கப்படும் மரத்தாலான கூரை வளை ஒன்றும் 1174ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகக் கணிக்கப்படும் மரத்தாலான வீட்டின் பாகங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. இன்றைய பெர்லின் பகுதியில் நகரங்கள் இருந்தமை குறித்த மிகப்பழைய குறிப்புகள் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.மேலும் பெர்லினின் மைய பகுதியில் அமைந்நுள்ள ஃபிஷெரின்சல்( Fischerinsel ), காலின்( Cölln ) எனும் இரண்டு பகுதிகளை பற்றி 1237ம் ஆன்டிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

17 முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை

தொகு

முப்பதாண்டு போரின்(1618-1648) முடிவில் பெர்லின் பேரழிவிற்கு உள்ளானது. அதிலிருந்த மூன்றில் ஒரு பகுதி வீடுகள் சேதமடைந்தன அல்லது அழிக்கப்பட்டன். மேலும் நகரம் அதன் மொத்த மக்கள் தொகையில் பாதியை இழந்தது. அதன் பின் பெருமளவு குடியேற்றங்கள் நடந்தது. அதன்பின் 19 ஆம் நூற்றாண்டின் போது தொழிற்புரட்சியின் போது பெர்லின் மாற்றம் அடைந்தது. இதனால் நகரின் பொருளாதாரம் மற்றும் மக்கள் அதிகரித்து, பெர்லின் இடாய்ச்சுலாந்தின முக்கிய ரயில், பொருளாதார மையமாக ஆனது.

20 ஆம் நூற்றாண்டு

தொகு

முதல் உலகப்போருக்குப் பின் 1920 ஆம் ஆண்டு கிரேட்டர் பெர்லின் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி பெர்லினை சுற்றியுள்ள புறநகர் நகரங்கள், கிராமங்கள், மற்றும் தோட்டங்களில் இணைக்கப்பட்டு பெர்லின் விரிவாக்கப்பட்டது. இந்த விரிவாக்கத்திற்குப் பிறகு, பெர்லின் 4 மில்லியன் மக்கள் தொகை கொண்டதாக மாறியது.

1945ல் இரண்டாம் உலகப்போருக்குப் பின் பெர்லின் இரண்டாக பிரிக்கப்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு பெர்லின் எனப்பட்டது. பின்னர் 1990 இல் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டது.

புவியியல்

தொகு

பெர்லின் இடாய்ச்சுலாந்து நாட்டின் தலைநகராகும். மேலும் இது இடாய்ச்சுலாந்தின் மிகப்பெரிய நகரமுமாகும். இந்நகரத்தில் மொத்தம் 3.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகும். பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் இருந்து இந்நகரம் உள்ளது. இது கிழக்கு இடாய்ச்சுலாந்தில் போலந்து எல்லையிலிருந்து 110 கிலோமீட்டர் மேற்காக அமைந்துள்ளது.

சுகாதார வசதிகள்

தொகு

பெர்லின் நகரம் மருத்துவத்திலும் மருத்துவதொழில்நுட்பத்திலும் நீண்ட பாரம்பரியத்தை கொண்ட ஒரு நகரம் ஆகும். மருத்துவத்துறையில் பெர்லின் நகர மருத்துவநிபுணர்கள் பாரிய ஆதிக்கம் செலுத்தினர். உதாரணமாக செல்லுலார் நோயியலின் தந்தை என ருடொள்வ் விர்ச்சொவ் அழைக்கப்பட்டார். அதேவேளை ராபர்ட் கொக் ஆந்த்ராக்ஸ், வாந்திபேதி, காச நோய் போன்ற நோய்களுக்குத் தடுப்பூசி கண்டுபிடித்தார்.

காலநிலை

தொகு

கோடைகாலம் சூடானதும் ஈரப்பதன் அதிகமுடையதுமாகக் காணப்படுகின்றது. கோடைகாலத்தில் சராசரி உயர் வெப்பநிலை 22-25 பாகை செல்சியஸ் ஆகக் காணப்படுகின்றது. மேலும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-25 பாகை செல்சியஸ் ஆகும். சராசரி மழையளவு 22 அங்குலமாக(568 மிமீ) உள்ளது. அவற்றில் ஐந்தில் நான்கு பங்கு பனிப்பொழிவாக விழுகிறது. [4]

தட்பவெப்ப நிலைத் தகவல், பெர்லின்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 15.0
(59)
17.0
(62.6)
23.0
(73.4)
30.0
(86)
33.0
(91.4)
36.0
(96.8)
38.8
(101.8)
35.0
(95)
32.0
(89.6)
25.0
(77)
18.0
(64.4)
15.0
(59)
38.8
(101.8)
உயர் சராசரி °C (°F) 2.9
(37.2)
4.2
(39.6)
8.5
(47.3)
13.2
(55.8)
18.9
(66)
21.8
(71.2)
24.0
(75.2)
23.6
(74.5)
18.8
(65.8)
13.4
(56.1)
7.1
(44.8)
4.4
(39.9)
13.4
(56.1)
தினசரி சராசரி °C (°F) 0.5
(32.9)
1.3
(34.3)
4.9
(40.8)
8.7
(47.7)
14.0
(57.2)
17.0
(62.6)
19.0
(66.2)
18.9
(66)
14.7
(58.5)
9.9
(49.8)
4.7
(40.5)
2.0
(35.6)
9.6
(49.3)
தாழ் சராசரி °C (°F) −1.5
(29.3)
−1.6
(29.1)
1.3
(34.3)
4.2
(39.6)
9.0
(48.2)
12.3
(54.1)
14.7
(58.5)
14.1
(57.4)
10.6
(51.1)
6.4
(43.5)
2.2
(36)
−0.4
(31.3)
5.9
(42.6)
பதியப்பட்ட தாழ் °C (°F) -26.1
(-15)
-25.0
(-13)
-13.0
(8.6)
-4.0
(24.8)
-1.0
(30.2)
4.0
(39.2)
7.0
(44.6)
7.0
(44.6)
0.0
(32)
-7.0
(19.4)
-9.0
(15.8)
-24.0
(-11.2)
−26.1
(−15)
மழைப்பொழிவுmm (inches) 42.3
(1.665)
33.3
(1.311)
40.5
(1.594)
37.1
(1.461)
53.8
(2.118)
68.7
(2.705)
55.5
(2.185)
58.2
(2.291)
45.1
(1.776)
37.3
(1.469)
43.6
(1.717)
55.3
(2.177)
570.7
(22.469)
சராசரி மழை நாட்கள் (≥ 1.0 mm) 10.0 8.0 9.1 7.8 8.9 7.0 7.0 7.0 7.8 7.6 9.6 11.4 101.2
சூரியஒளி நேரம் 46.5 73.5 120.9 159.0 220.1 222.0 217.0 210.8 156.0 111.6 51.0 37.2 1,625.6
ஆதாரம்: World Meteorological Organization (UN),[5] HKO[6]

பொருளாதாரம்

தொகு

2009 ஆம் ஆண்டில், பெர்லின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.7% வளர்ச்சி பெற்றது. (ஒட்டுமொத்த இடாய்ச்சுலாந்து -3,5%) மேலும் மொத்த உற்பத்தி € 90 பில்லியன் யூரோ ஆக இருந்தது ($117 பில்லியன்). பெர்லினின் பொருளாதாரத்தில் 80% சேவைத்துறை மூலம் வருகின்றது. அதன் வேலையின்மை விகிதம் செப்டம்பர் 2011 இல் 15 ஆண்டுகளில் குறைந்தபட்ச அளவான 12.7% ஐ (இடாய்ச்சுலாந்து சராசரி: 6.6%) அடைந்து நிலையாக இருக்கிறது.

நிறுவனங்கள்

தொகு

சீமென்ஸ், பார்ச்சூன் குளோபல், 500 தனியார் மற்றும் 30 இடாய்ச்சுலாந்து DAX நிறுவனங்கள் பெர்லினைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகின்றது. அரசுக்குச் சொந்தமான ரயில்வே பேர்லின் தலைமையிடமாக, டச்ஷி பான்( Deutsche Bahn) நிறுவனங்களின் தலைமையகம் பெர்லினில் உள்ளது. மேலும் நகரில் பல இடாய்ச்சுலாந்து மற்றும் சர்வதேச நிறுவனங்களின் வர்த்தக அல்லது சேவை மையங்கள் உள்ளன. பெர்லின் டைம்லர் கார்கள் உற்பத்தி மற்றும் பி.எம்.டபில்யு (BMW) பேர்லினில் மோட்டார் சைக்கிள்கள் தொழிற்சாலைகளின் தலைமையிடமாக உள்ளது. தலைமையிடமாக முக்கிய மருந்து நிறுவனங்கள் உள்ளன, இடாய்ச்சுலாந்தின் இரண்டாவது மிகப்பெரிய விமான நிறுவனமான "ஏர் பெர்லின்"-ன் தலைமையிடமாக உள்ளது.

போக்குவரத்து

தொகு

பெர்லினின் போக்குவரத்து உள்கட்டமைப்பு மிகவும் சிக்கலான பலவிதமான போக்குவரத்து முறைகளை உடையது.

நீர் வழிப்பாதை

தொகு

979 பாலங்களுடன் உடைய நகர நீர்வழிதடங்களின் மொத்த நீளம் 197 கிலோமீட்டர்.

சாலைகள்

தொகு

பெர்லினின் வழியாக செல்லும் சாலைகளின் நீளம் 5.334 கிலோமீட்டர் (3,314 மைல்கள்) ஆகும். 2006 ஆம் ஆண்டில், 1,416 மில்லியன் மோட்டார் வாகனங்கள் நகரம் பதிவு செய்யப்பட்டன. 2008ம் ஆண்டு பேர்லின் 1000 குடியிருப்பாளர்களுக்கு 358 கார் என்ற விகிதத்தில் இடாய்ச்சுலாந்து மற்றும் முக்கிய ஐரோப்பிய நகரங்களின் குறைந்த தனிநபர் கார்கள் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது.

ரயில் பாதைகள்

தொகு

நீண்டதூர ரயில் பாதைகள் பெர்லினை இடாய்ச்சுலாந்தின் முக்கிய நகரங்களுடனும் மற்ற அனைத்து அண்டை ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல நகரங்களுடனும் இணைக்கின்றது.

விமான நிலையங்கள்

தொகு

பெர்லினில் இரண்டு வர்த்தக விமான நிலையங்கள் உள்ளன.இதில் தெகல்(Tegel) விமான நிலையம் நகர எல்லைக்குள் உள்ளது, மற்றும் ஷ்கானிஃப்ல்டு(Schönefeld) விமான நிலையம் பெர்லினின் தென்கிழக்கு எல்லைக்கு வெளியே பிராண்டன்பேர்க் மாநிலத்தில் அமைந்துள்ளது.

மிதிவண்டி பாதை

தொகு

பெர்லின் அதன் மேம்பட்ட சைக்கிள் பாதையின் அமைப்புக்காக பிரபலமானது. பெர்லினில் 1000 குடியிருப்பாளர்களுக்கு 710 மிதிவண்டிகள் உள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நகரில் சுற்றி தினசரி 500,000 மிதிவண்டிகள் ஓடுகின்றது. 2009 ல் இது மொத்த போக்குவரத்தில் 13% ஆகும்.

சகோதர நகரங்கள்

தொகு

பெர்லின் 17 நகரங்களுடன் அதிகாரப்பூர்வ கூட்டுறவு வைத்துள்ளது. பெர்லின் முதன்முதலில் லாஸ் ஏஞ்சல்ஸ் உடன் 1967 ஆம் ஆண்டு சகோதர நகரங்களுக்கான உடன்படிக்கையிட்டது.அதன் பின்னர் படிப்படியாக இது விரிவுபடுத்தப்பட்டது.அவை

ஆண்டு நகரம் நாடு
1967 லாஸ் ஏஞ்சல்ஸ் ஐக்கிய அமெரிக்கா
1987 பாரிஸ் பிரான்சு
1988 மாட்ரிட் ஸ்பெயின்
1989 வியன்னா ஆஸ்திரியா
1989 இசுதான்புல் துருக்கி
1991 வார்சா போலந்து
1991 மாஸ்கோ ரஷ்யா
1991 புடாபெஸ்ட் ஹங்கேரி
1992 பிரஸ்சல்ஸ் பெல்ஜியம்
1993 சகார்த்தா இந்தோனேசியா
1993 தாசுக்கண்டு உஸ்பெகிஸ்தான்
1993 மெக்சிக்கோ நகரம் மெக்சிக்கோ
1993 பெர்ன் சுவிச்சர்லாந்து
1994 பெய்சிங்கு சீனா
1994 தோக்கியோ சப்பான்
1994 ஏரசு அர்ஜென்டீனா
1995 பிராகா செ குடியரசு

இணைப்புகள், மேற்கோள்கள்

தொகு
  1. "Ergebnisse Zensus 2011". Statistische Ämter des Bundes und der Länder (in German). 31 May 2013. Archived from the original on 5 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 31 May 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  2. Prefixes for vehicle registration were introduced in 1906, but often changed due to the political changes after 1945. Vehicles were registered under the following prefixes: "I A" (1906 – April 1945; devalidated on 11 August 1945); no prefix, only digits (from July to August 1945), "БГ" (=BG; 1945–46, for cars, lorries and busses), "ГФ" (=GF; 1945–1946, for cars, lorries and busses), "БM" (=BM; 1945–47, for motor bikes), "ГM" (=GM; 1945–1947, for motor bikes), "KB" (i.e.: Kommandatura of Berlin; for all of Berlin 1947–48, continued for West Berlin until 1956), "GB" (i.e.: Greater Berlin, for East Berlin 1948–53), "I" (for East Berlin, 1953–90), "B" (for West Berlin from 1 July 1956, continued for all of Berlin since 1990).
  3. "Bruttoinlandsprodukt (nominal) in BERLIN seit 1995" (PDF) (in German). 30 March 2010. Archived from the original (PDF) on 12 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 15 May 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  4. "Climate figures". World Weather Information Service. http://www.worldweather.org/016/c00059.htm. பார்த்த நாள்: 18 August 2008. 
  5. "World Weather Information Service – Berlin". Worldweather.wmo.int. 5 October 2006. பார்க்கப்பட்ட நாள் 7 April 2012.
  6. "Climatological Normals of Berlin". Hong Kong Observatory. Archived from the original on 19 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 20 May 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்லின்&oldid=4084533" இலிருந்து மீள்விக்கப்பட்டது