அனாபத்மிசு
பைகுலசு சிம்பிளக்சு (ஆண்)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சிபிக்சு, 1824
மாதிரி இனம்
பைகுலசு கிரைசோக்ளோரோசு[1]
வான் சிபிக்சு, 1824
சிற்றினங்கள்

உரையினை காண்க

பைகுலசு (Piculus) என்பது மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படும் மரங்கொத்திகள் குடும்பமான பிசிடேவில் உள்ள பறவைகளின் பேரினமாகும்.

வகைப்பாட்டியல் தொகு

பைகுலசு பேரினம் 1824ஆம் ஆண்டில் செருமனிய இயற்கை ஆர்வலர் ஜோஹன் பாப்டிஸ்ட் வான் இசுபிக்சால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பேரினத்தின் மாதிரி இனம் 1923ஆம் ஆண்டில் அமெரிக்க பறவையியலாளர் ஹாரி சி. ஓபர்ஹோல்ஸர் என்பவரால் தங்க-பச்சை மரங்கொத்தி (பைகுலசு கிரைசோக்ளோரோஸ்) முன்மொழியப்பட்டது.[2] மரங்கொத்திகள் என்று பொருள்படும் லத்தீன் வார்த்தையான பிகஸின் சுருக்கமே இந்த பொதுவான பெயர்.

மரங்கொத்தி துணைக்குடும்பமான பிக்கினேயின் ஒரு பகுதியாக இந்த பேரினம் உருவாக்கப்பட்டது. மேலும் யூரேசியா மற்றும் அமெரிக்காவில் காணப்படும் திரைகோபசு பேரினத்துடன் ஒரு சகோதர உறவைக் கொண்டுள்ளது. பைகுலசு பேரினம் பிசினி இனக்குழுவுடன் சேர்ந்தது. இது கொலப்ட்சு, பைகுலசு, முல்லரிபைகசு, திரையோகோபசு மற்றும் செலியசு ஆகிய ஐந்து பேரினங்களைக் கொண்ட ஒரு கிளையினை உடையது.[3]

இந்த பேரினத்தில் ஏழு சிற்றினங்கள் உள்ளன.[4]

படம் விலங்கியல் பெயர் பொதுப் பெயர் பரவல்
  பைகுலசு சிம்ப்ளக்சு செம்பழுப்பு இறகு மரங்கொத்தி கோசுட்டா ரிகா, ஹோண்டுராஸ், நிகரகுவா மற்றும் பனாமா. முன்பு வெண்தொண்டை மரங்கொத்தியின் துணையினமாகக் கருதப்பட்டது.
  பைகுலசு காலோப்டெரசு பட்டை கன்ன மரங்கொத்தி பனாமா. முன்பு வெண்தொண்டை மரங்கொத்தியின் துணையினமாகக் கருதப்பட்டது.
  பைகுலசு லிட்டே லிட்டா மரங்கொத்தி மேற்கு கொலம்பியா மற்றும் வடமேற்கு எக்குவடோர்
  பைகுலசு லுகோலேமசு வெண்தொண்டை மரங்கொத்தி அமேசான் படுகை, பிரேசில், முக்கியமாக எக்குவடோர், பெரு மற்றும் பொலிவியா
  பைகுலசு பிளாவிகுலா மஞ்சள்-தொண்டை மரங்கொத்தி பிரேசில் மற்றும் ஒட்டுமொத்த அமேசான் வடிநிலமும் குயனாக்கள், பொலிவியா, கொலம்பியா, ஈக்வடார், பிரெஞ்சு கயானா, கயானா, பெரு, சுரிநாம் மற்றும் வெனிசுவேலா
  பைகுலசு கிரைசோக்ளோரோசு தங்கப் பச்சை மரங்கொத்தி அர்ஜென்டினா, பொலிவியா, பிரேசில், ஈக்வடார், பிரெஞ்சு கயானா, கயானா, பராகுவே, பெரு மற்றும் சுரினாம் ஆகிய நாடுகளில் உள்ள அமேசான் வடிநிலம்
  பைகுலசு அருலென்டசு மஞ்சள் புருவ மரங்கொத்தி பிரேசில், அர்ஜென்டினா, பராகுவே.

முன்பு இங்கு வகைப்படுத்தப்பட்டிருந்த மற்ற ஐந்து சிற்றினங்கள் இப்போது கொலாப்டசு பேரினத்தில் உள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. "Picidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-26.
  2. Harry C. Oberholser (1923). "Chloronerpes Swainson versus Piculus Spix". Proceedings of the Biological Society of Washington 36: 201–202. https://biodiversitylibrary.org/page/34510730. 
  3. Shakya, S.B.; Fuchs, J.; Pons, J.M.; Sheldon, F.H. (2017). "Tapping the woodpecker tree for evolutionary insight". Molecular Phylogenetics and Evolution 116: 182–191. doi:10.1016/j.ympev.2017.09.005. பப்மெட்:28890006. https://www.researchgate.net/publication/319596154. 
  4. Gill, Frank; Donsker, David, eds. (2019). "Woodpeckers". World Bird List Version 9.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 6 August 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைகுலசு&oldid=3935008" இலிருந்து மீள்விக்கப்பட்டது