பையூரெட்  (Biuret) என்பது C2H5N3O2 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இது கார்பமைல் யூரியா எனவும் அழைக்கப்படுகிறது.  இந்தச் சேர்மமானது, இரண்டு மூலக்கூறுகள் யூரியா குறுக்க வினைபுரிந்து கிடைக்கும் விளைபொருளாகும். மேலும், யூரியாவை அடிப்படையாகக் கொண்ட உரங்களில் இது மாசாகவும் காணப்படுகிறது.  இந்த வெண்ணிறத் திண்மம் சுடுநீரில்  கரையக்கூடியது. இச்சேர்மமானது, முதன் முதலில் கசுடவ் எய்ன்ரிச் வியட்மேன் (1826 - 1899) என்பவரால் அவரது முனைவர் பட்ட ஆராய்ச்சியின் போது (1847) தயாரிக்கப்பட்டது. இவரது கண்டுபிடிப்புகள் பல கட்டுரைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.[2][3][4][5]

பையூரெட்
Skeletal formula of biuret
Ball-and-stick model of the biuret molecule
Space-filling model of the biuret molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-இமிடோடைகார்போனிக் டையமைடு[சான்று தேவை]
முறையான ஐயூபிஏசி பெயர்
(கார்பமோயிலஅமினோ)மெத்தனமைடு[சான்று தேவை]
வேறு பெயர்கள்
  • அல்லோஃபனமைடு[1]
  • கார்பமைல்யூரியா[1]
  • அல்லோஃபனிக் அமில அமைடு[1]
  • அல்லோஃபனிமிடிக் அமிலம்[1]
  • N-கார்பமோயில்அமினோமெதனமைடு[சான்று தேவை]
  • யூரெய்டோபார்மமைடு[1]
  • இமிடோடைகார்போனிக் டையமைடு[சான்று தேவை]
  • டையூரியா[சான்று தேவை]
இனங்காட்டிகள்
108-19-0 Y
3DMet B00969
Beilstein Reference
1703510
ChEBI CHEBI:18138 Y
ChemSpider 7625 Y
EC number 203-559-0
Gmelin Reference
49702
InChI
  • InChI=1S/C2H5N3O2/c3-1(6)5-2(4)7/h(H5,3,4,5,6,7) Y
    Key: OHJMTUPIZMNBFR-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG C06555 Y
ம.பா.த பையூரெட்
பப்கெம் 7913
  • [nH2]:c(:[o]):[nH]:c(:[nH2]):[o]
  • NC(=O)NC(N)=O
UNII 89LJ369D1H N
பண்புகள்
C2H5N3O2
வாய்ப்பாட்டு எடை 103.08 g·mol−1
தோற்றம் வெண்ணிறப் படிகங்கள்
மணம் மணமற்றது
அடர்த்தி 1.467 கி/செமீ3
உருகுநிலை 190 °செ (சிதைவுறுகிறது)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−565.8–−561.6 கிலோ யூல் மோல்−1
Std enthalpy of
combustion
ΔcHo298
−940.1–−935.9 கிலோ யூல் மோல்−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
146.1 யூல் கெல்வின்−1 மோல்−1
வெப்பக் கொண்மை, C 131.3 யூல் கெல்வின்−1 மோல்−1
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word WARNING
H315, H319, H335
P261, P305+351+338
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

"பையூரெட்" என்ற வார்த்தையானது -(HN-CO-)2N- என்ற வேதி வினைக்குழுவைக் கொண்ட கரிமச் சேர்மங்களின் தொகுதியையும் குறிக்கிறது. டைமெதில் பையூரெட்டானது CH3HN-CO-NR'-CO-NHCH3 என்ற அமைப்பிலான சேர்மமாகும். பலவகையான கரிம வழிப்பொருட்கள் இச்சேர்மத்திலிருந்து கிடைக்கப்பெறலாம்.

தயாரிப்பு

தொகு

தாய் சேர்மமானது, யூரியாவை அதன் உருகுநிலைக்கும் அதிகமான வெப்பநிலையில், அதாவது, அம்மோனியா வெளியேறக் கூடிய வெப்பநிலைக்கு வெப்பப்படுத்துவதால் கிடைக்கப்பெறுகிறது:[6]

2 CO(NH2)2 → H2N-CO-NH-CO-NH2 + NH3

இதே போன்ற ஒத்த நிலைகளில் யூரியாவானது வெப்பத்தால் சிதைவுக்குட்படுத்தப்படும் போது, டிரையூரெட் ((H2N-CO-NH)2CO) எனும் சேர்மம் கிடைக்கிறது. பொதுவாக, கரிம பையூரெட்டுகளானது, (ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட H அணுக்களுக்குப் பதிலாக அல்கைல் அல்லது அரைல் தொகுதிகளைக் கொண்ட பையூரெட்டுகள்) சமசயனேட்டுகளில் முப்படியாக்கல் வினை மூலமாகத் தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக, 1,6-எக்சாமெதிலீன் டைஐசோசயடே்டினைக் கூறலாம். இது HDI-பையூரெட் எனவும் அழைக்கப்படுகிறது.

பயன்பாடுகள்

தொகு

பையூரெட்டானது, அசைபோடும் விலங்கினங்களுக்கான தீவனப் பொருட்களில் புரதமல்லாத நைட்ரசன் மூலமாகவும் பயன்படுத்தப்படுகிறது.[7] இத்தகைய தீவனப் பொருட்கள் கால்நடைகளின் குடலிலுள்ள நுண்ணுயிரிகளால் புரதமாக மாற்றப்படுகின்றன.[8] இச்சேர்மம் அதிக விலை மற்றும் குறைவான அளவே மண்ணினால் உட்கொள்ளப்படும் தன்மை ஆகிய காரணங்களால், உரமாகப் பயன்படுத்ததப்படும் நிலையில், யூரியாவோடு ஒப்பிடும் போது இது மிகவும் குறைவாகவே தெரிவு செய்யப்படுகிறது.[9] ஆனால், பையூரெட்டின் இப்பண்பு அம்மோனிய நச்சுத்தன்மையின் ஆபத்தைக் குறைக்கவும் செய்கிறது.[10]

பையூரெட் சோதனை

தொகு

பையூரெட் சோதனையானது, புரதங்கள் மற்றும் புரதக்கூறுகளைக் கண்டறிவதற்கான ஒரு வேதிச் சோதனையாக உள்ளது. இச்சோதனையில், நீல நிறமுடைய பையூரெட் வினைக்காரணியானது புரதங்கள் அல்லது புரதக்கூறுகளைக் கொண்ட மற்ற சேர்மங்களுடன் தொடர்பு கொள்ளும் போது கருநீல (Violet) நிறமாக  மாற்றமடைகின்றது. இந்தச் சோதனையோ, வினைக்காரணியோ பையூரெட்டைக்  கொண்டிருக்கவில்லையெனினும், பையூரெட்டுகளும், புரதங்களும் இந்தச் சோதனைக்கு ஒரே விதமான விளைவைத் தரும் காரணத்தால், சோதனையானது பையூரெட் சோதனை என அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Scifinder, version 2007.1; Chemical Abstracts Service: Columbus, OH; RN 108-19-0 (accessed June 15, 2012)
  2. Wiedemann, G. (1848). "Ueber ein neues Zersetzungsproduct des Harnstoffs [On a new decomposition product of urea]". Annalen der Physik 150 (5): 67–84. doi:10.1002/andp.18491500508. 
  3. Wiedemann, G. (1847). "Neues Zersetzungsproduct des Harnstoffs [New decomposition product of urea]". Journal für Praktische Chemie 42 (3–4): 255–256. https://books.google.com/books?id=WNQPAAAAQAAJ&pg=PA255. 
  4. Wiedemann, G. (1848). "Ueber eine neue, aus dem Harnstoff entstehende Verbindung [On a new compound arising from urea]". Journal für Praktische Chemie 43 (5): 271–280. https://books.google.com/books?id=hgYwAAAAIAAJ&pg=PA271. 
  5. Wiedemann, G. (1848). "Biuret. Zersetzungsprodukt des Harnstoffs [Biuret: decomposition product of urea]". Justus Liebig's Annalen der Chemie 68 (3): 323–326. doi:10.1002/jlac.18480680318. 
  6. Meessen, J. H.; Petersen, H. (2005), "Urea", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a27_333
  7. Beef cattle feed, Encyclopædia Britannica Online
  8. Kunkle, B. (2013). "Florida Cow-Calf Management, 2nd Edition - Feeding the Cow Herd". IFAS Extension, University of Florida. Archived from the original on 2019-05-13. பார்க்கப்பட்ட நாள் 2017-08-04.
  9. Oltjen, R. R.; Williams, E. E.; Slyter, L. L.; Richardson, G. V. (1969). "Urea versus biuret in a roughage diet for steers". Journal of Animal Science 29 (5): 816–822. பப்மெட்:5391979. http://www.journalofanimalscience.org/content/29/5/816. பார்த்த நாள்: 2017-08-04. 
  10. Fonnesbeck, P. V.; Kearl, L. C.; Harris, L. E. (1975). "Feed Grade Biuret as a Protein Replacement for Ruminants. A Review". Journal of Animal Science 40 (6): 1150–1184. http://www.journalofanimalscience.org/content/40/6/1150. [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பையூரெட்&oldid=3565456" இலிருந்து மீள்விக்கப்பட்டது