பொகாரோ எஃகு நகரத் தொடருந்து நிலையம்

பொகாரோ எஃகு நகரத் தொடருந்து நிலையம் (Bokaro Steel City railway station)(நிலையக் குறியீடு:- BKSC ) என்பது தென்கிழக்கு இரயில்வேயின் ஆத்ரா பிரிவின் கீழ் கோமோ-முரி மற்றும் அட்ரா-பொகாரோ எஃகு நகரக் கிளைப் பாதையில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது இந்தியாவின் சார்கண்டு மாநிலத்தில் பொகாரோ மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஜாரியா தங்கச் சுரங்கத்தின் விளிம்பில் அமைந்துள்ளது. இந்நிலையம் பொகாரோ எஃகு நகரம் மற்றும் சுற்றியுள்ள சுரங்க-தொழில்துறை பகுதிக்குச் சேவை செய்கிறது.

பொகாரோ எஃகு நகரம்
இந்திய இரயில்வே நிலையம்
பொகாரோ எஃகு நகரத் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்பாலிதிக், பொகாரோ ஸ்டீல் சிட்டி, சார்க்கண்டு
இந்தியா 23°39′24″N 86°05′08″E / 23.6568°N 86.0855°E / 23.6568; 86.0855
ஏற்றம்240 மீட்டர்கள் (790 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்கிழக்கு தொடருந்து மண்டலம் (இந்தியா)
நடைமேடை3
இருப்புப் பாதைகள்7
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலையான, தரைத்தளம்
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலைசெயலில்
நிலையக் குறியீடுBKSC
மண்டலம்(கள்) தென்கிழக்கு தொடருந்து மண்டலம் (இந்தியா)
கோட்டம்(கள்) Adra
வரலாறு
திறக்கப்பட்டது1961; 64 ஆண்டுகளுக்கு முன்னர் (1961)
மின்சாரமயம்1986–89
அமைவிடம்
பொகாரோ எஃகு நகரத் தொடருந்து நிலையம் is located in சார்க்கண்டு
பொகாரோ எஃகு நகரத் தொடருந்து நிலையம்
பொகாரோ எஃகு நகரத் தொடருந்து நிலையம்
சார்க்கண்டில் அமைவிடம்


வரலாறு

தொகு

இந்த தொடருந்து நிலையம் மற்றும் இதைச் சுற்றியுள்ள பகுதிகள் முன்பு அசாரிபாக் மாவட்டத்தில் உள்ள மராபரி என்று அழைக்கப்பட்டன. சுற்றியுள்ள பகுதிகள் இன்றும் மராபாரி என்று அழைக்கப்படுகின்றன. பொகாரோ எக்கு ஆலையின் கட்டுமானத்துடன், தொடருந்து நிலையம் பொகாரோ எக்கு நகரத் தொடருந்து நிலையம் என மறுபெயரிடப்பட்டது.[1][2]

இப்பகுதியில் முன்னர் அமைக்கப்பட்ட இரயில் பாதைகளில் 1906-இல் திறக்கப்பட்ட கிழக்கிந்திய இரயில்வே நிறுவனத்தின் முக்கிய பாதையில் இது அமைந்துள்ளது. கோமோ மற்றும் பர்ககானா இடையே நிலக்கரி சுரங்கத்திற்காக இந்நிலையம் தொடங்கப்பட்டது.[3] 1927-இல் கோமோ-பர்ககானா பாதை செயல்பாட்டில் வந்தது. வங்காள நாக்பூர் இரயில்வே நாக்பூரிலிருந்து அசன்சோல் வரை பாதையை உருவாக்கி 1891-இல் சரக்கு போக்குவரத்தினைத் தொடங்கியது.[4] இந்த பாதை 1907-இல் கோமோக் வரை பின்னர் நீட்டிக்கப்பட்டது. மொகூடா-சந்திரபுர இணைப்பு[4] 1913-இல் செயல்பாட்டில் வந்தது.

143 கிலோமீட்டர்கள் (89 mi) நீளமான சந்திரபுரா-முரி-ராஞ்சி-ஹாட்டியா பாதை 1957-இல் தொடங்கப்பட்டு 1961-இல் நிறைவடைந்தது.[5]

தூரம்

தொகு

பொகாரோ எக்கு நகரத் தொடருந்து நிலையத்திலிருந்து நகர மையப்பகுதிக்குப் பயணிக்க 20 நிமிடங்கள் ஆகும். பொகாரோ எக்கு நகர தொடருந்து நிலையம் மற்றும் நகர மையத்திற்கிடையே பயண தூரம் 20 கி.மீ.

மின்மயமாக்கல்

தொகு

பொகாரோ பகுதியில் உள்ள ரயில் பாதைகள் (பொகாரோ எக்கு நகர் உட்பட) 1986-89-இல் மின் மயமாக்கப்பட்டன.[6]

  • பொகாரோ எக்கு நகரத் தொடருந்து நிலையத்தில் 5 இரட்டை படுக்கைகள் கொண்ட ஓய்வு அறைகள் மற்றும் நான்கு படுக்கைகள் கொண்ட தங்குமிடம் உள்ளது.
  • நடைபாதை 1-இல், இந்தியத் தொடருந்து கழகத்தின் புதிய உணவு நிலையம் உள்ளது. [7]
  • பொகாரோ நிலையத்தில் முழுமையாக குளிரூட்டப்பட்ட மேல் வகுப்பு காத்திருப்பு கூடம் மற்றும் நடைபாதை எண்.1-இல் சாதாரண இரண்டாம் வகுப்பு காத்திருப்பு கூடம் உள்ளது.
  • நடைபாதை எண்.1ல் சைவ மற்றும் அசைவ உணவகம்.
  • நடைபாதை எண்.1க்கு அருகில் உள்ள சரக்கு முனையம்
  • அனைத்து தளங்களிலும் திறன் பேசி சார்ஜிங் வசதி.
  • அனைத்து தளங்களிலும் குளிர்ந்த நீர் வசதி

தொடருந்து

தொகு

விரைவு தொடருந்து

  • 20839/40 ராஞ்சி ராஜதானி விரைவுவண்டி
  • 22823/24 புவனேஸ்வர் ராஜதானி விரைவுவண்டி
  • 12019/20 ஹவுரா-ராஞ்சி சதாப்தி விரைவுவண்டி
  • 12831/32 தன்பாத்-புவனேஸ்வர் கரிப் ரத் விரைவுவண்டி
  • 02832/31 புவனேசுவரம் - தன்பாத் சிறப்பு விரைவுவண்டி
  • 12365/66 ராஞ்சி-பாட்னா ஜன சதாப்தி விரைவுத் தொடருந்து
  • 12801/02 பூரி-புது தில்லி புருசோத்தம் விரைவுவண்டி
  • 12875/76 பூரி-தில்லி ஆனந்த் விஹார் நீலாச்சல் எக்ஸ்பிரஸ்
  • 22805/06 புவனேசுவரம்-புது தில்லி விரைவுவண்டி
  • 13351/52 தன்பாத்-ஆலப்புழா விரைவுவண்டி
  • 18103/04 டாடாநகர்-அமிர்தசரசு ஜாலியன் வாலாபாக் விரைவுவண்டி
  • 12817/18 ஹதியா-டெல்லி ஆனந்த் விஹார் டெர்மினல் ஜார்கண்ட் ஸ்வர்ண ஜெயந்தி விரைவுவண்டி
  • 12825/26 ராஞ்சி-புது தில்லி ஜார்க்கண்ட் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி
  • 12365/66 பாட்னா-ராஞ்சி ஜன் சதாப்தி விரைவுவண்டி
  • 17005/06 ரக்சால்-ஹைதராபாத் விரைவுவண்டி
  • 17007/08 தர்பங்கா-செகந்திராபாத் விரைவுவண்டி
  • 18609/10 ராஞ்சி-மும்பை eல். டி. டி. விரைவுவண்டி
  • 18621/22 ஹதியா-பாட்னா பாட்லிபுத்ரா விரைவுவண்டி
  • 18623/24 ஹதியா–பாட்னா–இஸ்லாம்பூர் விரைவுவண்டி
  • 18625/26 ஹதியா–பாட்னா–பூர்னியா கோர்ட் விரைவுவண்டி
  • 18627/28 ராஞ்சி-ஹவுரா நகரிடை விரைவுவண்டி
  • 15027/28 ஹதியா-கோரக்பூர் மௌரியா விரைவுவண்டி
  • 03357/58 தன்பாத் - கோயம்புத்தூர் விரைவுவண்டி
  • 18618/19 ராஞ்சி-கோடா இன்டர்சிட்டி விரைவுவண்டி
  • 15660/61 காமாக்யா-ராஞ்சி விரைவுவண்டி
  • 13425/26 சூரத்-மால்டா நகர விரைவுவண்டி
  • 13303/04 தன்பாத்-ராஞ்சி நகரிடை விரைவுவண்டி
  • 13403/04 ராஞ்சி-பாகல்பூர் வனஞ்சல் விரைவுவண்டி
  • 18603/04 ராஞ்சி-பாகல்பூர் விரைவுவண்டி
  • 18605/06 ராஞ்சி-ஜெய்நகர் விரைவுவண்டி
  • 13319/20 தும்கா-ராஞ்சி இன்டர்சிட்டி விரைவுவண்டி
  • 18019/20 ஜார்கிராம் - தன்பாத் மெமு விரைவுவண்டி

பயணிகள் ரயில்

  • 58014/15 பொகாரோ எஃகு நகர-ஹவுரா விரைவு பயணிகள் வண்டி
  • 63591/92 பொகாரோ எஃகு நகர-அசன்சோல் மெமு
  • 63595/96 பொகாரோ எஃகு நகர-அசன்சோல் மெமு
  • 58033/34 பொகாரோ எஃகு நகர-ராஞ்சி பயணிகள் வண்டி
  • 53341/42 தன்பாத்-முரி வண்டி
  • 68019/20 ஜார்கிராம்-சந்திரபுரா மெமு
  • 53061/62 பர்தாமன்-ஹதியா பயணிகள் வண்டி
  • 53335/36 தன்பாத்-ராஞ்சி பயணிகள் வண்டி

மேற்கோள்கள்

தொகு
  1. "Bokaro's Robinson Crusoe, almost". The Telegraph, 14 February 2012. Archived from the original on 18 February 2012. பார்க்கப்பட்ட நாள் 20 April 2013.
  2. "Bokaro". Glorius India. பார்க்கப்பட்ட நாள் 20 April 2013.
  3. "Indian Railway History Timeline". Archived from the original on 14 July 2012. பார்க்கப்பட்ட நாள் 2008-08-26.
  4. 4.0 4.1 "Major events in formation of S.E.Railway". Archived from the original on 1 April 2013. பார்க்கப்பட்ட நாள் 20 April 2013.
  5. Moonis Raza & Yash Aggarwal (1986). Transport Geography of India: Commodity Flow and the Regional Structure of Indian Economy. Concept Publishing Company, A-15/16 Commercial Block, Mohan Garden, New Delhi – 110059. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7022-089-0. பார்க்கப்பட்ட நாள் 20 April 2013.
  6. "History of Electrification". IRFCA. பார்க்கப்பட்ட நாள் 20 April 2013.
  7. "South Eastern Railway:Amenities at Stations".