பொது அஞ்சல் அலுவலகம், சென்னை

சென்னை பொது அஞ்சல் அலுவலகம் (General Post Office, Chennai), சென்னையின், ஜார்ஜ் டவுன், இராஜாஜி சாலையில் 1884 ல் கட்டப்பட்ட ஒரு பழைய கட்டிடத்தில் செயல்படுகிறது. சென்னைக் கடற்கரை புறநகர் ரயில் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள சென்னைப் பொது அஞ்சல் அலுவலகம் சுமார் 23.33 கி.மீ (9.01 சதுர மைல்) பரப்பளவை கொண்டுள்ளது. மேலும், சுமார் 220,000 மக்களுக்கு உதவுகிறது. இது துணை அல்லது கிளை அலுவலகங்கள் ஏதும் கொண்டிருக்கவில்லை.[1]

பொது அஞ்சல் அலுவலகம், சென்னை
1905இல் பொது அஞ்சல் அலுவலகம், சென்னை
Map
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிஇந்தோ சரசனிக் பாணி
முகவரிஇராஜாஜி சாலை, ஜார்ஜ் டவுன், சென்னை
நகரம்சென்னை
நாடுஇந்தியா
ஆள்கூற்று13°5′34″N 80°17′28″E / 13.09278°N 80.29111°E / 13.09278; 80.29111
கட்டுமான ஆரம்பம்1874
துவக்கம்1884
செலவு 680,000
கட்டுவித்தவர்பொது அஞ்சல் அலுவலகம்
உயரம்125 அடிகள் (38 m)
பரிமாணங்கள்
பிற பரிமாணங்கள்352 அடிகள் (107 m) long, 162 அடிகள் (49 m) broad
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை3
தளப்பரப்பு55,000 சதுர அடிகள் (5,100 m2)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)இராபர்ட் சிசோலம்
வலைதளம்
www.chennaipost.gov.in/chennaigpo.aspx

வரலாறு தொகு

1712 இல், ஆளுநர் ஆரிசன் (1711-1717) முதல் கிழக்கிந்திய நிறுவனத்தின் அஞ்சல் சேவையானது டாக் ரன்னர் (அஞ்சல் எடுத்துச் செல்பவர்) மூலம் சென்னையிலிருந்து வங்காளத்திற்கு அஞ்சல் எடுத்துச் செல்வதிலிருந்து தொடங்கியது. 1736 வாக்கில், ஒரு அஞ்சல் அமைப்பு முறையின் தேவை சற்று அதிகமாகவே இருந்தது. 1774இல், தனியார் கடிதங்களுக்குக் கட்டணம் வசூலிக்கும் முறை தொடங்கியது. 1785 மற்றும் 1786 ஆம் ஆண்டுகளில் ஜான் பிலிப் பர்ல்டன் மற்றும் தோமஸ் லீவின் ஆகியோர் சென்னை கிழக்கிந்தியா நிறுவனத்தின் அஞ்சல் விதிகளை ஏற்படுத்துவதற்கும் அஞ்சல் வலையமைப்பை உருவாக்குவதற்கும் ஒரு அதிகார அரசு ஊழியர்களின் கடிதங்களுக்கு இலவசமாகவும், நிறுவனத்தின் ஊழியர்களின் கடிதங்களுக்கு கட்டணம் விதிக்கவும் ஆலோசிக்கப்பட்டது.[2] அரசு இந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்டு, சென்னையின் முதல் பொது அஞ்சல் அலுவலகம் ஆளுநர் சர் அர்கிபால்ட் காம்ப்பெல் (1786-1790) என்பவர் தலைமையில் நிறுவியது. இவர் இருபால் அனாதை ஆசிரமங்களையும் (செயின்ட் ஜார்ஜ் பள்ளி) உருவாக்கியவர். சென்னையில் பொது அஞ்சல் அலுவலகம் முதன்முதலில் 1786 சூன் 1 அன்று, கடல் வாயிலுக்கு வெளியே, புனித ஜார்ஜ் கோட்டை சதுக்கத்தில் திறக்கப்பட்டது. முதல் பொதுத் தலைமை அஞ்சல் அலுவலராக சர் அர்கிபால்ட்டின் என்பவரும், செயலாளரக ஏ.எம். காம்ப்பெல் என்பவரும் நியமிக்கப்பட்டனர். இராபர்ட் மிட்ஃபோர்டு துணை தலைமை அஞ்சல் அலுவலராக நியமிக்கப்பட்டார். இந்த அஞ்சல் அலுவலகத்திற்கு ஒரு எழுத்தர், ஐந்து அஞ்சல் பிரிப்பவர்கள், அலுவலக உதவியாளர் மற்றும் பத்து அஞ்சல் எடுத்துச் செல்பவர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டது. பின்னர், காம்பெல்லுக்குப் பின்னர், ஆலிவர் கோல்ட் சென்னையின் முதல் பொதுத் தலைமை அஞ்சல் அலுவலராக நியமிக்கப்பட்டார். இந்திய-சார்செனிக் பாணியில் புதிய கட்டிடத்தை நிறைவு செய்தவுடன், சென்னைஅஞ்சல் அலுவலகம் 1884 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அதன் சொந்த கட்டித்திற்கு இடம் பெயர்ந்தது. பிரித்தானிய கட்டிட வடிவமைப்பாளர் இராபர்ட் சிசோலம் என்பவர் இதனை வடிவமைத்திருந்தார்.[3]

செயல்படும் நேரம் தொகு

சென்னை பொது அஞ்சல் நிலையம் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 8:00 மணி முதல் இரவு 8.30 வரை செயல்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில், இது 10:00 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகிறது. வேகப்பதிவு, பதிவு இடுகை, சிப்பமிடுதல், காப்பீடு, இ-பில்லிங் மற்றும் மின்னஞ்சல் இடுகை போன்ற வசதிகள் உள்ளன. சென்னை பொது அஞ்சல் நிலையம் 24 மணி நேர தந்தி அலுவலகத்தைக் கொண்டுள்ளது. தற்போது இந்தியாவில் தந்தி சேவை 2013 ஆம் ஆண்டு ஜூலை 15 முதல் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.[4][5]

மேலும் பார்க்க தொகு

குறிப்புகள் தொகு

  1. "Chennai GPO". Chennai Post. Archived from the original on 9 நவம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 10 Mar 2012.
  2. "History of Tamil Nadu Postal Circle". Tamil Nadu Postal Circle. பார்க்கப்பட்ட நாள் 11 Mar 2012.
  3. Soman, Sandhya; A. Selvaraj (6 November 2011). "City's postal history in ruins". The Times of India (Chennai: The Times Group) இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103155522/http://articles.timesofindia.indiatimes.com/2011-11-06/chennai/30366431_1_heritage-building-post-office-chief-postmaster. பார்த்த நாள்: 11 Mar 2012. 
  4. https://www.mobigyaan.com/telegraph-services-to-be-discontinued-in-india-from-july-15
  5. https://thediplomat.com/2013/06/india-sends-its-last-telegram-stop/

வெளி இணைப்புகள் தொகு