பொன்னாக்காணி மாரியம்மன் கோயில்
பொன்னாக்காணி மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், பொன்னாக்காணி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும், கோயம்புத்தூரிலிருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, சுமார் 400 ஆண்டுக்கு முன்பு சுயம்புவாக தோன்றி பதினெட்டு பட்டி கிராமத்திற்கும் படியளக்கும் அன்னையாம் அருள்மிகு பொன்னாக்காணி மாரியம்மன், இக்கோவில் நவம்பர் மாதம் ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் திருவிழா மிகப் பிரபலமானது. [1]
அருள்மிகு பொன்னாக்காணி மாரியம்மன் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கோயம்புத்தூர் |
அமைவிடம்: | பொன்னாக்காணி, சூலூர் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | சூலூர் |
மக்களவைத் தொகுதி: | கோயம்புத்தூர் |
கோயில் தகவல் | |
மூலவர்: | மாரியம்மன் |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
இராசகோபுரம்
தொகுபொன்னாக்காணி மாரியம்மன் இராஜகோபுரத்தின் உயரம் 56 அடி ஆகும். இந்த இராசகோபுரம் கட்டும் பணி 2018 ஆம் ஆண்டு தொடங்கி 2023 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
வழிபாடு
தொகுஇக்கோவிலில் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன. இவ்வூரின் அருகில் உள்ள வையமலை என்னும் மலையில் இருந்து எடுக்கப்படும் மண் திருநீராக வழங்கப்படுகிறது.
இக்கோவிலில் ஐப்பசி மாதம் ஆண்டுக்கு ஒரு முறை மாரியம்மனுக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவிழா புதன்கிழமை வருமாறு 15 நாட்களுக்கு முன்னாலே காப்பு கட்டப்படுகிறது. சனிக்கிழமைமை அன்று கம்பம் ஏற்றி திருவிழாவை தொடங்கி வைப்பர். செவ்வாய்க்கிழமை மதியம் முதல் வியாழன் இரவு வரை இத்திருவிழா பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில் பொன்னாக்காணி மட்டுமல்லாமல் சுற்றுவட்டார 18 கிராமங்களிலிருந்தும் பக்கதர்கள் கலந்துகொள்கின்றனர்.
பூவோடு
தொகுஇக்கோவிலின் சிறப்பாக பூவோடு உள்ளது. திருவிழா முடியும் வரை பூவோட்டில் உள்ள அக்னி எரிந்து கொண்டே இருக்கும். அதில் பக்தர்கள் கண்ணடக்கம் வாங்கி வைத்து வணங்குவர். திருவிழா முடிந்தபின் இவ்வூரின் எல்லையில் உள்ள குளத்தில் போட்டு விடுவர்.
போக்குவரத்து வசதிகள்
தொகுஉக்கடத்திலிருந்து நேரடியாக 37 என்னும் அரசு பேருந்து இயக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)