பொன்பரப்பி குடிக்காடு கிராமம்

அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

பொன்பரப்பி குடிக்காடு கிராமம் தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சியும் செந்துறை வட்டத்துக்குட்பட்ட வருவாய் கிராமமும் ஆகும்.[4][5]

பொன்பரப்பி குடிக்காடு
—  ஊராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் அரியலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி. இரத்தினசாமி, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

பெயர்க்காரணம்

தொகு

சோழர்கள் காலத்திற்கு பிறகு 18ம் நூற்றாண்டுகளில் இந்த ஊரில் 'பொன்பரப்பியனான வனகோபரன்'என்னும் சோழர்கள் பரம்பரையிலிருந்து வந்து ஆட்சி செய்து வந்த சிற்றரசன் நினைவாக 'பொன்பரப்பி' என்றும், 'சோழ மன்னர்களால் குடியமர்த்தப்பட்ட சோழப்பரம்பரையினர்கள் வாழும் பகுதி' என்ற பொருளில் குடிக்காடு என்றும் இவ்வூரின் பெயர் அமைந்துள்ளது.[சான்று தேவை]

பள்ளிகள்

தொகு

பொன்பரப்பி குடிக்காடு கிராத்தில் ஒரு மேல்நிலை பள்ளியும், இரண்டு தொடக்கநிலைப் பள்ளிகளும் அமைந்துள்ளன.

கோவில்கள்

தொகு

இக்கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவற்றில் மிகப்பழமையானது பொன்பரப்பி சொர்ண்புரீஸ்வரர் சிவாலயமாகும். பொன்பரப்பி சொர்ண்புரீஸ்வரர் சிவாலயம் காலத்தால் மிகவும் தொன்மை வாய்ந்தது. இது இராஜேந்திர சோழன் காலத்தில் கட்டபட்டக் கோவில்.

பொன்பரப்பி -குடிக்காடு கிராமத்திலிருந்து சேடகுடிக்காடு என்ற கிராமத்திற்கு செல்லும் வழியில் குட்டையபட்டி என்னுமிடத்தில் காத்தியாயி அல்லது காத்தாயி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் சோழர்கள் ஆட்சி காலத்தில் உள்ளூர் மக்களால் கட்டப்பட்டக் கோவில். கி.பி. 1535ம் ஆண்டு காத்தியாயி அம்மன் திருக்கோவில் பொன்பரப்பி குடிக்காடு கிராமத்தில் நிறுவபட்டு இன்று அக்கோவில் புதுபிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திகொண்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2015-09-30.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-09-30.