பொய்க்கலவி
பொய்க்கலவி என்பது விலங்குகளின் பாலுறவுச் செற்பாட்டையொத்த நிகழ்வுகளைக்குறிக்கும். ஆனால் இவற்றின்போது மெய்யான கலவியேதும் ஏற்படாது. பொதுவாக மகரந்தக்காவி யொன்று மலருடன் உடலுறவுகொள்ளமுயலுவதையே இவ்வாறு குறிப்பர். சில மலர்கள் இதற்கென பெண் இணையைப்போன்ற தோற்றத்தைக் கொண்டு தக்கவாறு வேதிக்குறிப்புகளையும் தொடுவணர்வையும் தருமாறு அமைந்துள்ளன.[1] இவ்வகையான போலியொப்புருபெறுதலை பௌயன்னிய போலியொப்புரு என்பர்.[2]
மந்தாரைகள் பொதுவாக பொய்க்கலவியின் துணையுடன் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை புல்லியிதழ்களிழோ, அல்லியிதழ்களிலோ அமைந்திருக்கும் சுரப்பிகளிலிலிருந்து பூச்சிகளின் பாலுணர்வு மணமிகளைப்போன்ற சுரப்பிகளை வெளியிடுகின்றன. தேனீ, குளவி போன்ற மகரந்தக்காவிகள் இவற்றினால் கவரப்பட்டு மலர்களுடன் உறவாடுகின்றன. அப்போது மகரந்தம் ஒரு மலரிலிருந்து மற்றொரு மலருக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. இதனால் மகரந்தச்சேர்க்கை ஏற்பட்டு செடி இனப்பெருக்கம் செய்கிறது.
பொதுவாக மகரந்தக்காவிப்பூச்சிகளுக்கு இதனால் பெரிய இழப்பெதுவும் இல்லையெனினும் சில மகரந்தக்காவிகள் அதிகமான விந்தை இதில் வீணாக்குவதால் அவற்றின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது. ஆகையால் அவை தங்கள் பெண்ணினத்தை அடையாளங்காணுவதில் கூர்ப்படைகின்றன. அதேவேளை மலர்களும் ஒப்புருவாக வளர்கின்றன.[3]
விந்தும் முட்டையும் உடலுக்கு வெளியே இணைசேரும் விலங்குகள் சிலவற்றில் ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபடுவதுபோல இறுகப்பற்றித் தழுவி உறவாடுவதையும் பொய்க்கலவி என்பர். குறிப்பாகத் தவளைகளில் இவ்வாறான தழுவலுறவின்போது ஒரே நேரத்தில் ஆணின் விந்தும் பெண்ணின் முட்டையும் வெளிப்பட்டு சேர்ந்து கருவாகின்றன.[4] இதே போல் சில நட்சத்திர மீன் இனங்களிலும் நடைபெறுவதுண்டு.[5]
சில பறவையினங்களில் ஆணும் பெண்ணுமோ அல்லது ஒருபால் பறவைகளுமோ ஒன்றின்மேலேறி அமர்வதை பொய்க்கலவி என்பர்.[6]
குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ van der Pijl, Leendert; Dodson, Calaway H. (1966). "Chapter 11: Mimicry and Deception". Orchid Flowers: Their Pollination and Evolution. Coral Gables: University of Miami Press. pp. 129–141. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87024-069-2. இணையக் கணினி நூலக மைய எண் 310489511.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - ↑ Pasteur, G (1982). "A Classificatory Review of Mimicry Systems". Annual Review of Ecology and Systematics 13: 169. doi:10.1146/annurev.es.13.110182.001125.
- ↑ Gaskett, A. C.; Winnick, C. G.; Herberstein, M. E. (2008). "Orchid Sexual Deceit Provokes Ejaculation". The American Naturalist 171 (6): E206. doi:10.1086/587532. பப்மெட்:18433329.
- ↑ pseudocopulation. (2007). In Encyclopædia Britannica. Retrieved October 19, 2007, from Encyclopædia Britannica Online: http://www.britannica.com/eb/article-9061690
- ↑ Run, J. -Q.; Chen, C. -P.; Chang, K. -H.; Chia, F. -S. (1988). "Mating behaviour and reproductive cycle of Archaster typicus (Echinodermata: Asteroidea)". Marine Biology 99 (2): 247–253. doi:10.1007/BF00391987. பன்னாட்டுத் தர தொடர் எண்:0025-3162. https://archive.org/details/sim_marine-biology_1988-09_99_2/page/247.
- ↑ Barrows, Edward M. (2001). Animal-behavior desk reference: a dictionary of animal behavior, ecology, and evolution. Boca Raton: CRC Press. p. 148. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-2005-4.