போபாரா (Popara, (சிரில்லிக் எழுத்துக்கள்: попара, கிரேக்கம்: παπάρα‎, papara,[1] துருக்கியம்: papara[2]) என்ற உணவு, ரொட்டியைக் கொண்டு தயாரிக்கப்படும் பல்கேரிய உணவு வகைகளில் ஒன்றாகும். இவ்வுணவில் பயன்படும் ரொட்டியானது பழைய ரொட்டியாகவும், அதன் மேற்புறம் தடிமனாகவும் இருக்கும். இதனை பால் அல்லது தேநீர் அல்லது நீர் ஆகிய ஏதாவது ஒன்றில் அமுக்கித் தருவர். பெரும்பாலும் சர்க்கரை, தேன், வெண்ணெய், பாலாடைக் கட்டி ஆகியவைகள் சேர்க்கப்படுகின்றன. இந்த உணவினை செய்வது எளிமையாகும்.[3] இவ்வுணவை அதிகமாக பல்காரியா, கிரேக்கம் (நாடு), செர்பியா, பொசுனியா எர்செகோவினா, வடக்கு மக்கெதோனியா, துருக்கி, மொண்டெனேகுரோ ஆகிய நாடுகளில் உண்பர். இது செர்பியாவின் ஏழை மக்கள் உணவு ஆகும்.[சான்று தேவை]

போபாரா
Popara
Попара
மாற்றுப் பெயர்கள்Pоpara
பரிமாறப்படும் வெப்பநிலைமுதன்மை உணவு
பகுதிபால்கன் குடா
முக்கிய சேர்பொருட்கள்ரொட்டி, சர்க்கரை அல்லது தேன், நீர் அல்லது பால், பாலாடைக் கட்டி, kaymak

மேற்கோள்கள் தொகு

  1. "What do poor people in Serbia eat". Quara. பார்க்கப்பட்ட நாள் 9 ஏப்பிரல் 2024.
  2. "Konyanın Yöresel Yemekleri". Archived from the original on 2010-08-20. பார்க்கப்பட்ட நாள் 9 ஏப்பிரல் 2024.
  3. https://www.instructables.com/Intro-54/
"https://ta.wikipedia.org/w/index.php?title=போபாரா&oldid=3932577" இலிருந்து மீள்விக்கப்பட்டது