போலியோ வைரஸ்

போலியோ தீநுண்மம்
உயிரியல் வகைப்பாடு
வரிசை:
பைகாரானோவைரிலேஸ்
குடும்பம்:
பைகார்னோவைரிடே
பேரினம்:
என்டிரோவைரஸ்
மாதிரி இனம்
என்டிரோவைரஸ் சி

போலியோ வைரஸ் என்ற தீ நுண்மம் இளம்பிள்ளை வாதம் என்ற நோய்க்கு காரணியாக உள்ளது. இது பைகார்னோவைரிடே குடும்பத்தை சார்ந்தது மேலும் இது என்டிரோவைரஸ் சி இன வகை ஆகும்.[1]


போலியோ தீநுண்மம் என்பது ஒற்றை இரைபோ கருவமிலம் என்ற மரபணுத்தொகையுடன் ஒரு புரத உறை சூழப்பட்டது ஆகும். இந்த மரபணுத்தொகை ஒற்றை சுருள் நேர்மறை குணம் கொண்ட இரைபோ கருவமிலம் ஆகும். இதில் சுமார் 7500 கருக்காடிக்கூறுகள் உள்ளன.[2] இந்த தீநுண்மம் சுமார் 30 நானோமீட்டர் விட்ட அளவு உடை பலகோண கோளம் ஆகும். ஏனெனில் இதன் சிறிய மரபணுத்தொகையுடன் ஒரு பலகோண புரத உறை சூழப்பட்டது ஆகும்.[3]


1909 ஆம் ஆண்டுகளில் போலியோ தீநுண்மம் என்ற வைரஸ் நுண்கிருமிகளை முதன்முதலில் கார்ல் லாண்ட்ஸ்டெய்னெர் மற்றும் இர்வின் பொப்பர் ஆகிய இருவரும் இணைந்து படிகப்படுத்தினர் (தீநுண்மம் தனிமைப்படுத்தப்படுதல்).[4] இந்த தீநுண்மத்தின் வடிவத்தை முதன்முதலில் உரோசலிண்டு பிராங்குளின் தலைமையில் பிரிக்பெக் லண்டன் பல்கலைக்கழக குழு [5][6] எக்சு-கதிர் வேறுபாட்டுடன் கண்டனர். இதன் மூலம் போலியோ தீநுண்மம் பலகோண கோள வடிவம் கொண்டது என்று அறிந்தனர்.[7]


1981 ஆம் ஆண்டில் போலியோ தீநுண்மத்தின் மரபணுத் தொகையை இரு வேறு குழுக்கள் வெளியிட்டனர். அவர்கள் முறையே வின்சென்ட் ரகானில்லோ மற்றும் டேவிட் பால்டிமோர் என்பவர்கள் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்திலும்[8] மேலும் நவோமி கிடாமுரா மற்றும் எக்கார்ட் விம்மர் என்பவர்கள் ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்திலும் வெளியிட்டனர்.[9] போலியோ தீநுண்மம் ஒரு எளிய மற்றும் சரியான குணங்களை கொண்டது ஆகும். எனவே இது உயிரியல் துறையில் இரைபோ கருவமிலம் பற்றிய தகவல்கள் மற்றும் தன்மையை அறிந்து கொள்ள ஒரு மாதிரியாக இருக்கிறது.

பிரதி சுழற்சி

தொகு
 
போலியோ தீநுண்மம் பிரதி சுழற்சி [10]

மனித உயிரணு அதன் மேற்பரப்பில் தீநுண்மம் மற்றும் பிறபொருளெதிரி சிடி-155 (பிவிஆர்) ஒட்டுவதன் மூலம் போலியோ தீநுண்மம் தொற்றுக்குள்ளாகிறது. [11][12] [13] போலியோ தீநுண்மம் சிடி-155 பிறபொருளெதிரியை தூண்டுவதால் இந்த தீநுண்மம் மனித செல்லுக்குள் நுழைய அனுமதிக்கிறது.[14][15] போலியோ தீநுண்மம் இரண்டு விதங்களில் மனித உயிரணு மென்சவ்வு வழியாக உட்செல்கிறது. அவைகள் முறையே நீர் துளையிடல் முறையால் உயிரணு மென்சவ்வு வழியாக தீநுண்மத்தின் இரைபோ கருவமிலம் மனித உயிரணுவின் உயிரணுக்கணிகம் பகுதியில் செலுத்தப்படுகிறது. அல்லது தீநுண்மம் பிறபொருளெதிரி ஈர்ப்பின் மூலம் உட்புகும்.[16] தற்போதைய ஆய்வுகளின் படி இரண்டாவது முறையான மனித உயிரணு அதன் மேற்பரப்பில் தீநுண்மம் மற்றும் பிறபொருளெதிரி சிடி-155 (பிவிஆர்) ஒட்டுவதன் மூலம் போலியோ தீநுண்ம நுழைந்த உடனேயே இரைபோ கருவமிலம் மனித உயிரணுவின் உயிரணுக்கணிகத்தில் வெளியிடப்படுகிறது.[17]


போலியோ தீநுண்மம் என்பது ஒற்றை இரைபோ கருவமிலம் என்ற மரபணுத்தொகையுடன் ஒரு புரத உறை சூழப்பட்டது ஆகும். இந்த மரபணுத்தொகை ஒற்றை சுருள் நேர்மறை குணம் கொண்ட இரைபோ கருவமிலம் ஆகும். இதில் சுமார் 7500 கருக்காடிக்கூறுகள் உள்ளன. இது உடனடியாக தீநுண்மத்தின் தூதாறனையாக மாறி மனித உயிரணுவினால் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. இதன் நுழைவால் உயிரணுவின் புரதசேர்க்கை மாற்றப்பட்டு தீநுண்மத்தின் புரதங்கள் உருவாக்கப்படுகிறது.[18]போலியோ தீநுண்மத்தின் தூதாறனை ஐந்து முதன்மை மொழிபெயர்ப்பு செய்யப்படாத பகுதிகள் உள்ளன இவை 700 கருக்காடிக்கூறுகள் அளவு கொண்டு மனித உயிரணுவில் உள்ள தூதாறனையை விட மிகமிக நீளமானவை மற்றும் தனித்துவமான அமைப்பை கொண்டது. தீநுண்மத்தின் இந்த மரபணுத்தொகை பகுதி உள்ளார்ந்த இரைபோசோம் நுழைவு பகுதி என அழைக்கப்படுகிறது. மேலும் இது தீநுண்ம இரைபோ கருவமிலத்தின் நேரடி மொழிபெயர்ப்பு ஆகும். இந்த பகுதியின் மரபணுத்தொகை மாற்றம் தீநுண்மத்தின் புரதம் உருவாதல் தடுக்கப்படுகிறது.[19][20][21] முதன்முதலில் உள்ளார்ந்த இரைபோசோம் நுழைவு பகுதி போலியோ தீநுண்மத்தின் இரைபோ கருவமிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. [22]

மரபணுத்தொகை மாற்றப்பட்ட தீநுண்மம்

தொகு

மரபணுத்தொகை மாற்றப்பட்ட போலியோ தீநுண்மம் புற்றுநோய் சிகிச்சையில் பயண்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.[23]

மேற்கோள்கள்

தொகு
  1. Ryan KJ, Ray CG, eds. (2004). Sherris Medical Microbiology (4th ed.). McGraw Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8385-8529-0.
  2. Hogle J (2002). "Poliovirus cell entry: common structural themes in viral cell entry pathways". Annu Rev Microbiol 56: 677–702. doi:10.1146/annurev.micro.56.012302.160757. பப்மெட்:12142481. 
  3. Goodsell DS (1998). The machinery of life. New York: Copernicus. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-98273-1.
  4. Paul JR (1971). A History of Poliomyelitis. (Yale studies in the history of science and medicine). New Haven, Conn: Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-01324-5.
  5. "Behind the picture: Rosalind Franklin and the polio model". Medical Research Council. 2019-03-14. Archived from the original on 2018-10-30. பார்க்கப்பட்ட நாள் 4 September 2019.
  6. Maddox, Brenda (2003). Rosalind Franklin: The Dark Lady of DNA. London: Harper Collins. p. 296. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-00-655211-0.
  7. Brown, Andrew (2007). J.D. Bernal: The Sage of Science. New York: Oxford University Press. pp. 359–361. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-920565-3.
  8. Racaniello and Baltimore; Baltimore, D (1981). "Molecular cloning of poliovirus cDNA and determination of the complete nucleotide sequence of the viral genome". Proc. Natl. Acad. Sci. U.S.A. 78 (8): 4887–91. doi:10.1073/pnas.78.8.4887. பப்மெட்:6272282. Bibcode: 1981PNAS...78.4887R. 
  9. "Primary structure, gene organization and polypeptide expression of poliovirus RNA". Nature 291 (5816): 547–53. 1981. doi:10.1038/291547a0. பப்மெட்:6264310. Bibcode: 1981Natur.291..547K. 
  10. De Jesus NH (2007). "Epidemics to eradication: the modern history of poliomyelitis". Virol. J. 4 (1): 70. doi:10.1186/1743-422X-4-70. பப்மெட்:17623069. 
  11. Mendelsohn Cl; Wimmer E; Racaniello VR (1989). "Cellular receptor for poliovirus: molecular cloning, nucleotide sequence, and expression of a new member of the immunoglobin superfamily". Cell 56 (5): 855–865. doi:10.1016/0092-8674(89)90690-9. பப்மெட்:2538245. 
  12. "Complexes of poliovirus serotypes with their common cellular receptor, CD155". J Virol 77 (8): 4827–35. 2003. doi:10.1128/JVI.77.8.4827-4835.2003. பப்மெட்:12663789. பப்மெட் சென்ட்ரல்:152153. http://jvi.asm.org/cgi/content/full/77/8/4827?view=long&pmid=12663789. பார்த்த நாள்: 2020-01-06. 
  13. "Entry and release of poliovirus as observed by electron microscopy of cultured cells". J. Virol. 4 (4): 505–13. 1 October 1969. பப்மெட்:4309884. பப்மெட் சென்ட்ரல்:375900. http://jvi.asm.org/cgi/pmidlookup?view=long&pmid=4309884. [தொடர்பிழந்த இணைப்பு]
  14. "Neutralization of poliovirus by cell receptors expressed in insect cells". J. Virol. 64 (10): 4697–702. 1 October 1990. பப்மெட்:2168959. பப்மெட் சென்ட்ரல்:247955. http://jvi.asm.org/cgi/pmidlookup?view=long&pmid=2168959. [தொடர்பிழந்த இணைப்பு]
  15. "Characterization of poliovirus conformational alteration mediated by soluble cell receptors". Virology 197 (1): 501–5. November 1993. doi:10.1006/viro.1993.1621. பப்மெட்:8212594. 
  16. "Poliovirus and poliomyelitis: a tale of guts, brains, and an accidental event". Virus Res 111 (2): 175–93. 2005. doi:10.1016/j.virusres.2005.04.008. பப்மெட்:15885840. 
  17. "Imaging poliovirus entry in live cells". PLOS Biology 5 (7): e183. 2007. doi:10.1371/journal.pbio.0050183. பப்மெட்:17622193. 
  18. "Virus specific protein and a ribo-nucleic acid associated with ribosomes in poliovirus infected HeLa cells". Cold Spring Harb. Symp. Quant. Biol. 27: 271–92. 1962. doi:10.1101/SQB.1962.027.001.026. பப்மெட்:13965389. 
  19. "Initiation of protein synthesis by the eukaryotic translational apparatus on circular RNAs". Science 268 (5209): 415–7. 1995. doi:10.1126/science.7536344. பப்மெட்:7536344. Bibcode: 1995Sci...268..415C. 
  20. "Internal initiation of translation of eukaryotic mRNA directed by a sequence derived from poliovirus RNA". Nature 334 (6180): 320–5. 1988. doi:10.1038/334320a0. பப்மெட்:2839775. Bibcode: 1988Natur.334..320P. 
  21. "A segment of the 5' nontranslated region of encephalomyocarditis virus RNA directs internal entry of ribosomes during in vitro translation". J. Virol. 62 (8): 2636–43. 1 August 1988. பப்மெட்:2839690. பப்மெட் சென்ட்ரல்:253694. http://jvi.asm.org/cgi/pmidlookup?view=long&pmid=2839690. பார்த்த நாள்: 6 ஜனவரி 2020. 
  22. John Carter; Venetia A. Saunders (2007). Virology: Principles and Applications. John Wiley & Sons. p. 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-02386-0.
  23. "Oncolytic polio virotherapy of cancer". Cancer 120 (21): 3277–86. November 2014. doi:10.1002/cncr.28862. பப்மெட்:24939611. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=போலியோ_வைரஸ்&oldid=4170664" இலிருந்து மீள்விக்கப்பட்டது