போலேரம்மா
போலேரம்மா ( தெலுங்கு: పోలేరమ్మ ) பிளேக் நோய் மற்றும் பெரியம்மைக்கான இந்து தெய்வம் ஆவார் . [1] [2] அவர் முக்கியமாக ஆந்திர பிரதேச கிராமங்களில் உள்ள மக்களால் வழிபடப்படுகிறாள், [3] மேலும் அந்த பிராந்தியங்களில் சிவனின் மனைவியாகக் கருதப்படுகிறாள். [4]
போலேரம்மா | |
---|---|
வகை | பெண் தெய்வம் |
சகோதரன்/சகோதரி | போத்துராஜு (சகோதரர்) |
விளக்கம்
தொகுகிராமத்தின் பாதுகாவலராக சேவையாற்றுவதாக கூறி போலேரம்மாவை கிராம தெய்வமாக ஆந்திராவின் கிராம மக்கள் வழிபடுகின்றனர். பெரும்பாலும் மண் மற்றும் கற்களால் கட்டப்பட்ட அவளுடைய கோவிலும் சன்னதியும் பொதுவாக கிராமத்தின் எல்லைகளுக்கு வெளியே உள்ளது, அவர் பெரியம்மையை கட்டுப்படுத்திய தெய்வமாகக் கருதப்படுகிறார், மேலும் தமிழ்நாட்டின் மாரியம்மன் என்ற தெய்வத்துடன் தொடர்புடையவர். கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்,மழையின்மையால் ஏற்படும் வறட்சி மற்றும் மக்களின் பொது சுகாதார நலன் ஆகியவற்றை மேற்பார்வையிடுவதாகக் கருதப்படுகிறது. யானாடி மரபுப்படி, அம்மன் வழிபடாதபோது, அவளைப் பின்பற்றுபவர்களுக்கு பெரியம்மை நோய் ஏற்படுகிறது. நோய் குணமடைந்த பிறகு, ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு சிறப்பு குடிசையில் அங்குள்ள சமூக மக்களால் அவள் வணங்கப்படுகிறாள். [5]
புராண பின்னணி
தொகுஆந்திராவின் கிராமப்புறங்களில் உள்ள மக்களால் பின்பற்றுபட்டு வணங்கப்படும் ஏழு சகோதர-பெண் தெய்வங்களில் பொலேரம்மாவும் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் அவருக்கு போத்துராஜு என்ற சகோதரர் இருக்கிறார். [6]
திருவிழா
தொகுபொலேரம்மாவுக்கு நடக்கும் திருவிழா மூன்று நாட்கள் நீடிக்கும். ஒரு எருமை அம்மனுக்கு பிரசாதமாக பலியிடப்பட்டு, அதன் இரத்தத்தை ஒரு தொட்டியில் ஊற்றி, கிராமம் முழுவதும் சிதறடிக்கப்படும் சடங்கு முறையில் உள்ளது [7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Jordan, Michael (2014-05-14). Dictionary of Gods and Goddesses (in ஆங்கிலம்). Infobase Publishing. p. 249. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4381-0985-5.
- ↑ Claus, Peter (2020-10-28). South Asian Folklore: An Encyclopedia (in ஆங்கிலம்). Routledge. p. 381. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-000-10122-5.
- ↑ Jakimowicz, Marta (1988). Metamorphoses of Indian Gods (in ஆங்கிலம்). Seagull Books. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7046-029-9.
- ↑ Walker, Benjamin (2019-04-09). Hindu World: An Encyclopedic Survey of Hinduism. In Two Volumes. Volume I A-L (in ஆங்கிலம்). Routledge. p. 399. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-429-62465-0.
- ↑ Rao, N. Sudhakar (2002). Ethnography of a Nomadic Tribe: A Study of Yanadi (in ஆங்கிலம்). Concept Publishing Company. p. 73. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7022-931-5.
- ↑ Coelho, Gail (2018-10-08). Annotated Texts in Beṭṭa Kurumba (in ஆங்கிலம்). BRILL. p. 319. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-37824-7.
- ↑ Coelho, Gail (2018-10-08). Annotated Texts in Beṭṭa Kurumba (in ஆங்கிலம்). BRILL. pp. 47–48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-37824-7.