ப. இரவீந்திரன்

இந்திய அரசியல்வாதி

பத்மநாபன் இரவீந்திரன் (Padmanabhan Ravindran, 14 நவம்பர் 1922 - 13 நவம்பர் 1997) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கேரள மாநிலத்தின் தொழில்துறை அமைச்சராகவும், தொழிலாளர் நலத்துறை மற்றும் வனத்துறை அமைச்சராகவும், 1969 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1970 ஆம் ஆண்டு ஆகத்து 3 ஆம் தேதி வரை பதவியில் இருந்தார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் செயலாளராக 1967 ஆம் ஆண்டு முதல் 1969 ஆண்டு வரை இரவீந்திரன் பணியாற்றினார். இரவீந்திரன் அரசியல் காரணங்களுக்காக பல முறை சிறையில் அடைக்கப்பட்டார். சனயுகம் செய்தித்தாள், பிரபாதம் அச்சகம் மற்றும் பதிப்பகம் ஆகிய நிறுவனங்களின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக இருந்தார். இவர் கேரள மாநிலத்தில் அவர் சார்ந்த கட்சியை வளர்ப்பதில் பெரும் பங்கு வகித்தார். மேலும் சிறந்த ஒருங்கிணைப்பாளர் என்று இவரைப் பாராட்டி சதானந்தன் விருது வழங்கப்பட்டது.

ப. இரவீந்திரன்
P.Ravindran

പി. രവീന്ദ്രന്‍
Kerala Council of Ministers 1969 Achutha Menon.jpg
இதர அமைச்சர்களுடன் வலது மூலையில் ப. இரவீந்திரன். முதலாவது அச்சுத மேனன் அமைச்சரவையில்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
20 மே 1996 – 13 நவம்பர் 1997
முன்னவர் சி. வி. பத்மராசன்
பின்வந்தவர் என். அனிருதன்
தொகுதி சாத்தன்னூர்
பதவியில்
26 மார்ச் 1987 – 17 சூன் 1991
முன்னவர் சி. வி. பத்மராசன்
பின்வந்தவர் சி. வி. பத்மராசன்
தொகுதி சாத்தன்னூர்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
4 அக்டோபர் 1970 – 25 மார்ச் 1977
முன்னவர் ப. இரவீந்திரன்
பின்வந்தவர் சித்தரஞ்சன்
தொகுதி சாத்தன்னூர்
தொழில்துறை அமைச்சராகவும், தொழிலார் நலத்துறை மற்றும் வனத்துறை அமைச்சர்
பதவியில்
1 நவம்பர் 1969 – 3 ஆகத்து 1970
முன்னவர் மாதை மாஞ்சுரான்
பின்வந்தவர் பேபி ஜான்
தொகுதி சாத்தன்னூர்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
6 மார்ச் 1967 – 1 நவம்பர் 1969
முன்னவர் இல்லை
பின்வந்தவர் ப. இரவீந்திரன்
தொகுதி சாத்தன்னூர்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
22 பிப்ரவரி 1960 – 26 செப்டம்பர் 1962
முன்னவர் தகவல் இல்லை
பின்வந்தவர் ப. இரவீந்திரன்
தொகுதி இரவிபுரம்
பதவியில்
5 ஏப்ரல் 1957 – 31 சூலை1959
முன்னவர் ப. இரவீந்திரன்
பின்வந்தவர் ஆர். எசு. உண்ணி
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1954–1957
முன்னவர் இல்லை
பின்வந்தவர் ப. இரவீந்திரன்
தொகுதி பரவூர்,
(தற்போது சாத்தன்னூர்)
பதவியில்
1951–1954
முன்னவர் ப. இரவீந்திரன்
பின்வந்தவர் இல்லை
தொகுதி பரவூர்,
(தற்போது சாத்தன்னூர்)
தனிநபர் தகவல்
பிறப்பு பத்மநாபன் ரவீந்திரன்
நவம்பர் 14, 1922(1922-11-14)
நெடுங்கோலம் அருகில் பரவூர், திருவிதாங்கூர், பிரித்தானிய இந்தியா
(தற்போது கேரளா, இந்தியா)
இறப்பு 13 நவம்பர் 1997(1997-11-13)
அரசியல் கட்சி இந்தியப் பொதுவுடைமைக் கட்சி CPI-flag.PNG
வாழ்க்கை துணைவர்(கள்) கே. சாவித்ரிகுட்டி
பிள்ளைகள் 1 மகள்
பெற்றோர் பத்மநாபன் (தந்தை)
இருப்பிடம் நெடுங்கோலம், சாத்தன்னூர்
கல்வி சட்டங்களில் இளையர்

இவர் 1951 மற்றும் 1954 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றத் தேர்தலில், பரவூர் தொகுதிலிருந்து (தற்போது சாத்தன்னூர்), இந்தியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் போட்டியிட்டு, சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பரவூர் தொகுதி கலைக்கப்பட்ட பிறகு, இரவிபுரம் தொகுதியிலிருந்து 1957 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும், 1960 ஆம் ஆண்டு இடைத்தேர்தலிலும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சாத்தன்னூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, 1967, 1970, 1987 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு, கேரள சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் 1997 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி, சாத்தன்னூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது காலமானார்.

சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர்கள் வரலாறுதொகு

ஆண்டு தொகுதி போட்டி வேட்பாளர் முடிவு வித்தியாசம்
1951 பரவூர் குஞ்சுகிருட்டிணன், (இந்திய தேசிய காங்கிரசு) வெற்றி 7,790[1]
1954 பரவூர் கோபாலப்பிள்ளை, (இந்திய தேசிய காங்கிரசு) வெற்றி 3,878
1957 இரவிபுரம் வி. குஞ்சு சங்கரப்பிள்ளை, (பிரஜா சோசலிச கட்சி) வெற்றி 10,360[2]
1960 (இடைத்தேர்தல்) இரவிபுரம் பாசுக்கரப் பிள்ளை, (பிரஜா சோசலிச கட்சி) வெற்றி 1,859[3]
1967 சாத்தன்னூர் எசு. தங்கப்பன் பிள்ளை, (கேரள காங்கிரசு) வெற்றி 11,209[4]
1970 சாத்தன்னூர் எசு. தங்கப்பன் பிள்ளை, (கேரள காங்கிரசு) வெற்றி 13,948[5]
1987 சாத்தன்னூர் சி.வி. பத்மராசன், (இந்திய தேசிய காங்கிரசு) வெற்றி 2,456[6]
1991 சாத்தன்னூர் சி.வி. பத்மராசன், (இந்திய தேசிய காங்கிரசு) தோல்வி 4,511[7]
1996 சாத்தன்னூர் சி.வி. பத்மராசன், (இந்திய தேசிய காங்கிரசு) வெற்றி 2,115[8]

மேற்கோள்கள்தொகு

  1. "Election to the Travancore-Cochin Legislative Assembly-1951 and to the Madras Assembly Constituencies in the Malabar Area". Government of Kerala. p. 37. 2020-10-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-04-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "Kerala Assembly Election - 1957". Elections.in. 2018-12-10 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Kerala Assembly Election - 1960". Elections.in. 2018-12-10 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Kerala Assembly Election - 1967". Elections.in. 2018-12-10 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Kerala Assembly Election - 1970". Elections.in. 2018-12-10 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Kerala Assembly Election - 1987". Elections.in. 2018-12-10 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Kerala Assembly Election - 1991". Elections.in. 2018-12-10 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Kerala Assembly Election - 1996". Elections.in. 2018-12-10 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._இரவீந்திரன்&oldid=3349913" இருந்து மீள்விக்கப்பட்டது