ப. ரா. தியோதர்

பேராசிரியர் பி. ஆர். தியோதர் (B. R. Deodhar) (11 செப்டம்பர் 1901 - 10 மார்ச் 1990) இவர் ஒரு இந்திய இந்தியப் பாரம்பரிய இசைப் பாடகரும், இசைக்கலைஞரும், இசைக் கல்வியாளரும் ஆவார். பாரம்பரிய இந்துஸ்தானி இசையின் கயல் -பாணியின் பாடகராக இருந்தார்.

ப. ரா. தியோதர்
பிறப்புசெப்டம்பர் 11, 1901(1901-09-11)
மீரஜ், மகாராட்டிரம்
இறப்பு10 மார்ச்சு 1990(1990-03-10) (அகவை 88)
மும்பை, மகாராட்டிரம்
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)பாடகர், இசைக்கலைஞர், இசைப் பயிற்சியாளர்
இசைத்துறையில்1920கள்–1980கள்

இவருக்கு 1964ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் என்ற கௌரவம் வழங்கப்பட்டது. இது இந்தியாவின் இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான தேசிய அகாதமியான சங்கீத நாடக அகாடமி வழங்கிய மிக உயர்ந்த கௌரரவமாகும். அதன்பிறகு 1976ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசு பத்மசிறீ விருது வழங்கியது .

ஆரம்பகால வாழ்க்கையும், பயிற்சியும்தொகு

தியோதர் 1901 செப்டம்பர் 11 அன்று மகாராட்டிராவின் சாங்குலி மாவட்டத்தில் மீரஜில் பிறந்தார். [1] பிரபல பாடகரும் கல்வியாளருமான விஷ்ணு திகம்பர் பலூசுகரின் (1872-1931) குருவும், குவாலியர் கரானாவின் பாலகிருட்டிணபுவா இச்சல்கரஞ்சிகரின் சீடரான நீல்காந்த் புவா அலுர்மத்துடன் தனது இசை பயிற்சியைத் தொடங்கினார். [2] அதன்பிறகு, கிராணா கரானாவின் பலூசுகரின் மற்றொரு சீடரான அப்துல் கரீம் கான், விநாயக்ராவ் பட்வர்தன் ஆகியோரின் கீழும் பயிற்சி பெற்றார். பின்னர் இவர் கந்தர்வ மகாவித்யாலயாவில் சேர்ந்தார். அங்கு இவர் நிறுவனத்தின் நிறுவனர் விஷ்ணு திகம்பர் பலூசுகரின் முன்னணி சீடரானார். தியோதர், முறையான கல்வியையும் தொடர அனுமதிக்கப்பட்டார். மெட்ரிகுலேசனுக்குப் பிறகு உயர் கல்வியையும் பயின்றார். பின்னர் இளங்கலையையும், மேற்கத்திய பாரம்பரிய இசையையும் பயின்றார். [3]

பின்னர், ஆக்ரா கரானாவைச் சேர்ந்தவர்கள், ஜெய்ப்பூர் கரானாவைச் சேர்ந்த மோகன்ராவ் பக்கேலர், சாரங்கி- கலைஞர்கள் மஜீத் கான், இனாயத் கான், கணபத்ராவ் தேவாசுகர், கோகலே கரானாவின் பண்டிட் சதாசிவ்புவா ஜாதவ், குவாலியர் கரானாவின் சிந்தே கான் உள்ளிட்ட பல்வேறு மரபுகளைச் சேர்ந்த முன்னணி இசைக்கலைஞர்களிடமிருந்து இவர் தனது இசைக் கல்வியைத் தொடர்ந்தார். இந்தூர் கரானாவின் பிங்கார் முராத் கான் மற்றும் மிக முக்கியமாக, பாட்டியாலா கரானாவின் படே குலாம் அலி கான் போன்றவர்களுடன் பல ஆண்டுகளாக தொடர்பு கொண்டிருந்தார். மேலும் அவரது இந்துஸ்தானி இசையில் ஒரு முக்கியமான இசை செல்வாக்கு பெற்றார். இவ்வாறு, இவர் பல மரபுகளின் பாணிகளையும், கரானாக்களையும் தனது பாடலில் இணைத்துள்ளார். மேலும் இது ஒரு இசைக்கலைஞராக இவரது வாழ்க்கைக்கு வழிவகுத்தது. காலப்போக்கில், இவர் இசையமைப்பையும், இவர் தொடர்புபடுத்திய அனைத்து மரபுகளிலிருந்தும் அரிய ராகங்களையும் சேகரித்தார். [3]

தொழில்தொகு

கரானா பாரம்பரியத்திலிருந்து விலகி மும்பையில் தியோதர் இசைப்பள்ளியை நிறுவினார்.

சங்கீத கலா விகார் என்ற இந்தி இசை மாத இதழையும் நடத்தி வந்தார். மேலும் இசை மற்றும் இசைக்கலைஞர்கள் பற்றிய பல புத்தகங்களையும் வெளியிட்டார்.

1964 ஆம் ஆண்டில், சங்கீத நாடக அகாதமி தனது சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் என்ற கௌரவத்தை இவருக்கு வழங்கியது. [4] இதைத் தொடர்ந்து 1976 ஆம் ஆண்டில் இந்திய அரசு பத்மசிறீ விருதினை வழங்கியது . [5]

இவரது குறிப்பிடத்தக்க சீடர்களில், பாடகர் குமார் கந்தர்வன், சரஸ்வதி ரானே, இலட்சுமி கணேசு திவாரி ஆகியோர் அடங்குவர் . 1993 ஆம் ஆண்டில், 19 ஆம் நூற்றாண்டின் இந்திய இசைக்கலைஞர்களின் சுயசரிதைகளை உள்ளடக்கிய "சங்கீத கலா விகார்" என்பதில் வெளிவந்த இவரது கட்டுரைகள் "பில்லர்ஸ் ஆப் இந்துஸ்தானி மியூசிக்" என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டன . [6]

இறப்புதொகு

இவர் மார்ச் 10, 1990 அன்று மும்பையில் காலமானார். [1]

படைப்புகள்தொகு

குறிப்புகள்தொகு

நூலியல்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._ரா._தியோதர்&oldid=3099980" இருந்து மீள்விக்கப்பட்டது