மகர்புரா அரண்மனை
மகர்புரா அரண்மனை (Makarpura Palace) என்பது இன்றைய இந்தியாவின் குஜராத்தின் வதோதராவில் உள்ள பரோடா மாநிலத்தின் கெய்க்வாட்சின் அரச அரண்மனை ஆகும். இது இத்தாலிய பாணியில் 1870-ஆம் ஆண்டில் மகாராஜா கெந்தே ராவால் கட்டப்பட்டது. [1] இது அரச குடும்பத்தால் கோடைகால வசிப்பிடமாகவும், வேட்டையாடும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டது. [2] இந்த அரண்மனை இப்போது இந்திய விமானப்படையால் எண்.17 டெட்ரா பள்ளி எனப்படும் பயிற்சிப் பள்ளியாகப் பயன்படுத்தப்படுகிறது.
மகர்புரா அரண்மனை | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
இடம் | வடோதரா, குசராத்து, இந்தியா |
நிறைவுற்றது | 1870 |
வரலாறு
தொகு1866 ஆம் ஆண்டில், பரோடாவின் மகாராஜா, கந்தே ராவ், [3] ஆண்டில் முடிக்கப்பட்ட ஒரு புதிய அரண்மனையைக் கட்டினார் [2] 1856 முதல் 1870 வரை பரோடாவை ஆண்ட கந்தேராவ் II கெய்க்வாட்டின் சகோதரர் மல்கர் ராவ் கெய்க்வாட் இந்த அரண்மனையின் ஒரு பகுதியை அழித்ததாகக் கூறப்படுகிறது. இது 1883-1890 ஆண்டுகளுக்கு இடையில் மகாராஜா சாயாஜிராவ் கெய்க்வாட் III ஆல் விரிவாக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது மற்றும் அதே இத்தாலிய மறுமலர்ச்சி பாணியில் ராபர்ட் ஃபெலோஸ் சிஷோல்ம் (1840-1915) வடிவமைத்தார். [4] இந்த அரண்மனை பல ஆண்டுகளாக இந்திய விமானப்படையின் பயிற்சிப் பள்ளியாக பயன்படுத்தப்பட்டது.
அமைவிடம்
தொகுகந்தேராவ் II கெய்க்வாட் மகர்புராவுக்கு அருகில் உள்ள தானியாவியில் நிறைய நேரம் செலவிட்டார்; அது அப்போது ஷிகர்கானா என்று அழைக்கப்பட்டது. மான் சரணாலயத்திற்கு அருகாமையில் இருப்பதால், அரண்மனைத் தளம் மகர்புராவில் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கட்டமைப்பு மற்றும் நிலப்பரப்பு
தொகுஇந்த அரண்மனை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட மூன்று அடுக்குகளைக் கொண்டது. ஒரு பகுதி இரண்டாம் கந்தேராவ் கெய்க்வாட் என்பவரால் கட்டப்பட்டது, மற்றொரு பகுதி மகாராஜா மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட் என்பவரால் கட்டப்பட்டது. இரண்டு பகுதிகளும் ஒரே மாதிரியானவை. இவை இத்தாலிய மறுமலர்ச்சி கட்டிடக்கலையை பிரதிபலிக்கின்றன. இந்த இரண்டு பகுதிகளும் தரை மற்றும் முதல் தள மட்டங்களில் உள்ள தாழ்வாரங்களால் இணைக்கப்பட்டுள்ளன. இத்தாலிய பாணி பல்வளைவு நீரூற்றுகளுடன் கூடிய ஒற்றை அடுக்குடைய வளைதளத்தால் மூடப்பட்ட வாகனங்கள் உட்புகுந்து சென்று ஒரு வளாகத்திற்குள் செல்லும் அமைப்பு உள்ளது.
இது அலங்கார வளைவுகளைக் கொண்ட பலகணிகள் மற்றும் மரப்படிக்கட்டுகளுடன் நூற்றுக்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்பட்ட செங்கல் அறைகளைக் கொண்டுள்ளது. மேலே செல்ல செல்ல வளைவின் அளவு சிறியதாகிறது.
அரண்மனையின் பின்புறம் படிக்கட்டுகளால் இணைக்கப்பட்ட மற்றும் சஜ்ஜாக்களால் நிழலிடப்பட்ட அடுக்கு மாடிகளைக் கொண்டுள்ளது.
அரண்மனை 130 ஏக்கர் பரப்பளவில் ஜப்பானிய பாணி தோட்டத்தைக் கொண்டுள்ளது. இது அரச தாவரவியல் பூங்காவின் கட்டிடக் கலைஞரான வில்லியம் கோல்ட்ரிங் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. தோட்டத்திற்கு கியூ என்று பெயரிடப்பட்டது மற்றும் நீச்சல் குளம், அன்னங்கள் கொண்ட ஏரி ஆகியவற்றைக் கொண்டிருந்தது. அரசர் அரண்மனைக்கு வருகை தந்த போது அவரை வரவேற்க யானைத் தந்த நீரூற்றுகள் செயல்பட்டன.
ஒரு காலத்தில் வர்ணம் பூசப்பட்ட கூரைகள், பிரமாண்டமான மரப் படிக்கட்டுகள், வெளிப்புறத்தைப் பாதுகாக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பூச்சுகள் கொண்ட , சரவிளக்குகள் மற்றும் மரச் சாமான்களைக் கொண்டிருந்த அரண்மனையின் உட்புறம் தற்போது மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளது. [5]
பிரபலமான கலாச்சாரத்தில்
தொகு1924 ஆம் ஆண்டு பேசாப படமான பிருத்வி வல்லப் அரண்மனையைச் சுற்றி படமாக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Incredible India | Makarpura Palace". பார்க்கப்பட்ட நாள் 2020-12-19.
- ↑ 2.0 2.1 Rags To Uniform.
- ↑ https://m.tribuneindia.com/1998/98sep20/sunday/speaking.htm
- ↑ https://www.bl.uk/onlinegallery/onlineex/apac/photocoll/m/019pho000430s24u00002000.html
- ↑ "Makarpura Palace". பார்க்கப்பட்ட நாள் 2020-12-19.