மகாராசகடை

கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர்

மகாராசகடை (Maharajakadai) என்பது இந்தியா, தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் ஆகும். இந்த ஊர், கிருட்டிணகிரியிலிருந்து குப்பம் (ஆந்திரா) செல்லும் சாலையில் உள்ளது. இது நாரலப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது. இந்த ஊருக்கு அருகே அங்கணா மாலை உள்ளது. இந்த மலையில் உள்ள கோட்டைக்காகவும் பெருங்கற்கால சின்னங்களுக்காவும் குறிப்பிடப்படுகிறது.

மகாராசகடை
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635 120

பெயர் வரலாறு

தொகு

பருகூருக்கு அடுத்த காரகுப்பம் பகுதியில் விஜயநகரப் பேரரசின் ஹரிஹரர் காலத்திய கல்வெட்டு கிடைத்துள்ளது. அந்தக் கல்வெட்டில் அங்கண நாட்டுப் பால சமுத்திரத்தைச் சேர்ந்த மதுகன் என்ற அதிகாரி குறிப்பிடபட்டுள்ளார் இதில் குறிப்பிடப்பட்டுள்ள அங்கண நாடு பிற்காலத்தில் மகராஜாகடை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளை குறிப்பிடுவதாக இருந்துள்ளது.[1]

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 268 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]


மகாராஜகடை கிராமத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள்
  1. .முனீஸ்வரர் ஆலயம்
  2. .பேட்ராயசுவாமி கோவில்
  3. .விநாயகர் கோவில்
  4. .இராமர் கோவில்
  5. . ஸ்ரீ சேஷாசல ஈஷ்வரர் கோவில்
  6. . பஜனை கோவில்
  7. . பசவண்ண கோவில்
  8. . சாமுண்டிஸ்வரி கோவில்
  9. . அங்காளம்மன் கோவில்
  10. . முத்துராயன் கோவில்
  11. . மாரியம்மண் கோவில்கள்
  12. . முருகர் கோவில்
  13. . பெருமாள் கோவில்
  14. . பள்ளிவாசல்
ஊரில் வசிக்கும் சமூகத்தினர்
  1. . அகமுடிய முதலியார்
  2. . பிரமணர்கள்
  3. . குரும்பர்கள்
  4. . நாயக்கர்கள்
  5. . குயவர்கள்
  6. . மீனவர்கள்
  7. . நாட்டார்கள்
  8. . வன்னியர்கள்
  9. . ஆச்சாரிகள்
  10. . பிள்ளைமார்கள்
  11. . ஆதிதிராவிடர்கள்
  12. . வண்ணார்கள்
  13. . நாவிதர்
  14. . பழங்குடினர்கள்
  15. . முஸ்ஸிம்கள்

இதையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 120. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. "Maharaja Kadai Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாராசகடை&oldid=3672213" இலிருந்து மீள்விக்கப்பட்டது