மகாராசா கிசான் பான்
மகாராசா கிசான் பான் (Maharaj Kishan Bhan) (9 நவம்பர் 1947 - 26 ஜனவரி 2020) என்பவர் இந்தியாவினைச் சார்ந்த குழந்தை மருத்துவர் மற்றும் மருத்துவ விஞ்ஞானி ஆவார். இவர் புனேவின் இராணுவ மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டமும் (1969) மற்றும் சண்டிகரில் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.டி பட்டமும் பெற்றார். வயிற்றுப்போக்கு நோய்கள் மற்றும் குழந்தை ஊட்டச்சத்து ஆகிய துறைகளில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பொதுச் சுகாதார முனைவர் பட்ட பின் ஆய்வுகளை மேற்கொண்டார். ஜவஹர்லால் நேரு பட்ட மேற்படிப்பு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஜிப்மர்) தலைவராக பணியாற்றியுள்ளார்.[1]
பிறப்பு | காசுமீர், இந்தியா | 9 நவம்பர் 1947
---|---|
இறப்பு | 26 சனவரி 2020 | (அகவை 72)
வதிவு | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை | மருத்துவ அறிவியல் |
நிறுவனம் | உயிரிதொழில்நுட்பவியல் துறை |
Alma mater |
|
பான், பாரத் பயோடெக் இன்டர்நேஷனலுடன் இணைந்து ரோட்டா தீநுண்மி தடுப்பூசியை உருவாக்கினார். இவர் 2012 வரை இந்திய அரசின் உயிரிதொழில்நுட்பவியல் துறையின் செயலாளராக பணியாற்றினார்.[2] பான்புதிதாக உருவாக்கப்பட்ட BIRACஐ தோன்றக் காரணமாக இருந்தார். இது கல்வியாளர்களுடன் இணைந்து தொழில்துறை தயாரிப்பில் வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி நாட்டில் உற்பத்தி வளர்ச்சியை அதிகரிப்பதாகும். இதற்காக பானுக்கு பி.ஆர்.ஐ.சி-யைச் சேர்ந்த ரேணு சுவரூப்பு மற்றும் ரவி தார் ஆகியோர் உதவினார்கள். இவர் தேசிய மருத்துவ அறிவியல் குழுமத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆவார்.[3] இவருக்கு 1990ஆம் ஆண்டில் மருத்துவ அறிவியல் பிரிவில் இந்தியாவின் மிக உயர்ந்த அறிவியல் விருதான சாந்தி ஸ்வரூப் பட்நகர் விருது வழங்கப்பட்டது.[4] இவர் கொள்கை வகுப்பிற்குப் பொறுப்பானவர் மற்றும் இந்திய அரசு வழங்கிய அனைத்து முக்கிய தேசிய அறிவியல் விருது தேர்வுக்குழுவில் உறுப்பினராக இருந்தார்.[5]
பரிசுகள் மற்றும் கவுரவங்கள்
தொகு- ஜீனோம் வேலி மேம்பாட்டு விருது - பயோ ஆசியா (2013) [6]
- குடிமை பணிக்கான பத்ம பூசண் - 2013.[7]
- குழந்தை ஆராய்ச்சிக்கான போலியன் பரிசு - 2003
- உயிரித்தொழில்நுட்ப தயாரிப்பு மற்றும் செயல்முறை மேம்பாடு மற்றும் வணிகமயமாக்கல் விருது - 2003
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நகர் விருது-1990
- ரான்பாக்ஸி தேசிய விருது - 1990
- தேசிய மருத்துவ அறிவியல் கழகத்தின் எஸ்.எஸ். மிஸ்ரா விருது - 1986
- இந்திய குழந்தை மருத்துவ கழகத்தின் எஸ்.டி அச்சார் தங்கப் பதக்கம் - 1984
மேற்கோள்கள்
தொகு- ↑ "President, JIPMER". Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2021-07-19.
- ↑ "Shaping Technologies into Real Life Programs". Archived from the original on 9 December 2012. பார்க்கப்பட்ட நாள் 17 August 2012.
- ↑ "List of Fellows — NAMS" (PDF). National Academy of Medical Sciences. 2016. பார்க்கப்பட்ட நாள் 19 March 2016.
- ↑ "Full list of winners of the Shanti Swaroop Prize". Archived from the original on 28 October 2011. பார்க்கப்பட்ட நாள் 17 August 2012.
- ↑ "Speakers Bios". Indian Medtech Summit. Archived from the original on 10 டிசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 17 August 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Padma Bhushan Dr MK Bhan to get Genome Valley Excellence Award today - BioSpectrum Asia". Archived from the original on 7 May 2013. பார்க்கப்பட்ட நாள் 22 April 2013.
- ↑ "Padma Awards Announced". Ministry of Home Affairs (India). 25 January 2013. பார்க்கப்பட்ட நாள் 25 January 2013.