மகாராசா நரிந்தர் சிங்
நரிந்தர் சிங் (Narinder Singh) பிரித்தானிய இந்தியாவில் 1845 ஆம் ஆண்டு முதல் 1862 ஆம் ஆண்டு வரை பாட்டியாலா சுதேச அரசின் அரசராக இருந்தார். விக்டோரியா மகாராணியின் விருது பெற்ற முதல் இந்திய நட்சத்திர வரிசை உள்ளூர் ஆட்சியாளர் என்ற சிறப்புக்கு உரியவராக இருந்தார். கானிங் பிரபு பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்தபோது நரிந்தர் சிங் இந்திய சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1]
சுயசரிதை
தொகு1824 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி பாட்டியாலாவின் அரசர் கரம் சிங்கிற்கு மகனாகப் பிறந்தார். 1846 ஆம் ஆண்டு சனவரி மாதம் 18ஆம் தேதி தனது இருபத்தி மூன்று வயதில் நரிந்தர் சிங் பாட்டியாலாவின் அரசராக பதவி ஏற்றார்.[2] இவரது ஆட்சியில் தான் மோதி பாக் அரண்மனை 5 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது..[3]
1857 ஆம் ஆண்டில் இந்திய சிப்பாய்க் கிளர்ச்சியின் போது, கிழக்கிந்திய கம்பெனிக்கு இவர் உதவி புரிந்தார். மேலும் இவரது சேவைகள் கணக்கிட முடியாத மதிப்புள்ளவை என்று கானிங் பிரபுவால் பின்னர் ஒப்புக்கொள்ளப்பட்டார்.[4]
1862 ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி தனது 39 வது வயதில் நரிந்தர் சிங் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார். இவருக்குப் பிறகு இவரது பத்து வயது மகன் மொகிந்தர் சிங் பாட்டியாலாவின் அரசராகப் பதவி ஏற்றார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Indian India. India, Director of Public Relations, Chamber of Princes, 1945.
- ↑ Bhagata Siṅgha. A History of the Sikh Misals. India, Publication Bureau, Punjabi University, 1993.
- ↑ Sandhu, Jaspreet Kaur. Sikh Ethos: Eighteenth Century Perspective. India, Vision & Venture, 2000.
- ↑ Nijjar, Bakhshish Singh. History of the United Panjab. India, Atlantic Publishers and Distributors, 1996.
- ↑ Singh, Gur Rattan Pal. The Illustrated History of the Sikhs, 1947-78: Containing Chapters on PEPSU, AISSF, Evolution of the Demand for Sikh Homeland, and the Princess Bamba Collection. India, Gur Rattan Pal Singh, 1979.