மகா வீர சக்கரம்
மகா வீர சக்கரம் (Maha Vir Chakra, MVC) எதிரிப்படைகளிடம் மிக உயர்ந்தளவு வீரதீரத்தையும் தன்னலமற்ற தியாகத்தையும் காட்டிய இந்தியப் படைவீரர்களுக்கான இந்திய இராணுவத்தின் இரண்டாவது மிக உயரிய விருதாகும். இவ்விருது போர்க்களத்தில் தரையிலோ, கடலிலோ வானிலோ வீரமரணம் அடைந்த படைவீரர்களுக்கும் மறைவிற்கு பின்னால் வழங்கக்கூடியதாம். இந்தி மொழியில் மகாவீர் என்பது தமிழில் பெரும் வீரர் என்ற பொருளில் வழங்கும்.
விருதின் தோற்றம்
தொகுவிருது பதக்கம் தரமான வெள்ளியில் வட்டவடிவில் அமைந்துள்ளது. முகப்பில் ஐந்து முனை முத்திரை நட்சத்திரத்தின் நடுவில் வட்டமான தங்கமுலாமிட்ட அரசு இலச்சினை இருக்குமாறு புடைச்செதுக்கப் பட்டுள்ளது. பதக்கத்தின் பின்புறம் நடுவில் இரு தாமரை மலர்களுடன் தேவநாகரி மற்றும் ஆங்கில எழுத்துருக்களில் "மகா வீர சக்கரா" என்று புடைச் செதுக்கப்பட்டுள்ளது. இந்த விருது படைவீரரின் இடது மார்பில் 3.2 செ.மீ அகலமுள்ள அரை வெள்ளை அரை செம்மஞ்சள் வண்ண நாடாவுடன், செம்மஞ்சள் வண்ணம் இடது தோளிற்கு அண்மையில் இருக்குமாறு குத்தப்படுகிறது.[1]
விருது பெற்றோர் தங்கள் பெயரின் விகுதியில் எம்.வி.சி என்று போட்டுக் கொள்ளலாம்.
வரலாறு
தொகுஇதுவரை 155க்கும் மேற்பட்ட வீரச்செயல்கள் அடையாளம் காணப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளனர். ஒரே போரில் மிக கூடுதலான மகாவீரப் பதக்கங்கள் 1971ஆம் ஆண்டில் நடந்த இந்தியப் பாக்கித்தான் போரில் வழங்கப்பட்டன; அப்போது பதினோரு விருதுகள் இந்திய வான்படைக்கு வழங்கபட்டது.
மகா வீர சக்கரம் பெற்றவர்களுக்கு இரண்டாம் முறையாகப் பெறுபவர்களுக்கு ஆடைப்பட்டயம் வழங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தங்கள் பெயர் விகுதியில் MVC(Bar) என்று போட்டுக்கொள்ளலாம். 1965ஆம் ஆண்டு முதன்முறையாக இவ்விதியின்படி இருவருக்கு வழங்கப்பட்டது. இந்நாள்வரை ஆறுமுறை முதல் ஆடைப்பட்டயம் வழங்கப்பட்டுள்ளது: விங் கமாண்டர் ஜக்மோகன் நாத் (1962 & 1 செப்டம்பர் 1965), மேஜர் ஜெனரல் ராஜிந்தர் சிங் (19 மார்ச்சு 1948 & 6 செப்டம்பர் 1965), அருண் ஸ்ரீதர் வைத்யா (16 செப்டம்பர் 1965 & 5 திசம்பர் 1971), விங் கமாண்டர் பத்மநாப கௌதம் (6 செப்டம்பர் 1965 & 5 திசம்பர் 1971 (மறைவிற்குப்பின்னர்)), கர்னல் செவாங் ரின்ச்சென் (சூலை 1948 & 8 திசம்பர் 1971), மற்றும் பிரிகேடியர் சான்ட் சிங் (2 நவம்பர் 1965 & சனவரி 1972). இரண்டாம் ஆடைப்பட்டயங்கள் வழங்கப்பட்டவரில்லை.
மேற்கோள்கள்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- List of Awardees, Awards given on 26th January 2011, India பரணிடப்பட்டது 2020-04-06 at the வந்தவழி இயந்திரம்
- Writeups on Maha Vir Chakra winners
- Official Citations, Photos of MVC Awardees of the Indian Air Force பரணிடப்பட்டது 2006-03-16 at the வந்தவழி இயந்திரம்
- Recipients of Mahavir Chakra from Indian Navy பரணிடப்பட்டது 2011-02-25 at the வந்தவழி இயந்திரம்
- Recipients of Mahavir Chakra from Indian Army