மகிசியர் (Mahishya) மேற்கு வங்காளத்தில் விவசாயத்தை பாரம்பரியமாக செய்து வரும் ஒரு இந்து சாதியாகும்.[1] [2] இவர்கள் பிரிக்கப்படாத வங்காளத்தில் மிகப்பெரிய சாதியாக இருந்தனர். [3] இவர்கள் முன்னேறிய வகுப்பினராகக் கருதப்படுகிறார்கள். [4]

கொல்கத்தாவிலுள்ள தக்சிணேசுவர் காளி கோயிலை நிறுவிய மகிசிய குடும்பத்தைச் சேர்ந்த இராணி ராசமணி

இவர்கள் பாரம்பரியமாக வங்காளம் மற்றும் ஒடிசா பகுதியில் வாழ்ந்தனர். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தென்மேற்கு வங்காளத்தில் இவர்கள் மிக முக்கியமான 'நடுத்தர-சாதிக்' குழுவாகவும், கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் மற்றும் தெற்கு 24 பர்கனாக்களில் ஆதிக்க சாதிகளாகவும் கருதப்பட்டனர். இவர்கள் முக்கியமாக தெற்கு வங்காளத்தில் வாழ்கின்றனர். குறிப்பாக பூர்பா மேதினிபூர், மேற்கு மிட்னாபூர் மாவட்டம், ஹூக்லி, தெற்கு 24 பர்கனா மாவட்டம், கிழக்கு வர்த்தமான் மாவட்டம், மேற்கு வர்த்தமான் மாவட்டம் மற்றும் ஹவுரா ஆகிய மாவட்டங்களில் வசிக்கின்றனர்.[5]

புராணம்

தொகு

மனுதரும சாத்திரம் போன்ற பழங்கால நூல்களின்படி, மகிசியர் என்ற சொல் ஒரு சத்திரிய தந்தைக்கும் வைசிய தாய்க்கு பிறந்த ஒருவரைக் குறிக்கிறது. இவர்கள் வானியல் அல்லது வேளாண்மை தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. [6] [7]

வரலாறு

தொகு

இப்போது மகிசியர்கள் என்று அழைக்கப்படும் குழு முதலில் கைபர்தர்கள் அல்லது கைவர்தர்கள் என்று அறியப்பட்டது. எட்டாம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை, கைபர்தாகள் நிர்வாகிகளாகவும், சட்ட அதிகாரிகளாகவும் இருந்தற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. பால ஆட்சியின் போது, பல கைவர்தர்கள், பல பிராமணர்களுடன் மாறி மாறி, அரச சபைகளில் அமைச்சர்களாக செயல்பட்டனர். பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் கைபர்தர்களில் சிலர் சமசுகிருதத்தில் புலமை பெற்றவர்களாகவும் கவிதை இயற்றுபவர்களாகவும் இருந்தனர்.

சுதந்திர இயக்கத்தில் பங்கு

தொகு

தேசியவாத இயக்கத்தில் மகிசியர்கள் முக்கிய பங்கு வகித்த்துள்ளனர். தேசபிரான் பிரேந்திரநாத் சாஸ்மல் [8] 1919 இல் வாரியம் விதித்த வரிகளுக்கு எதிராக மகிசியர்களை வழிநடத்தினார். இது பின்னர் மிட்னாபூரில் ஒத்துழையாமை இயக்கத்துடன் இணைந்தது. அவர் 1920 களில் கொல்கத்தாவின் நஃப்ரத் தந்தை பதவிக்கு சுபாஷ் சந்திர போஸின் போட்டியாளராக இருந்தார். [9] உப்புச் சத்தியாகிரகத்தின் போது (1930-34) தம்லுக் மற்றும் காண்டாய் பகுதிகளில் பிரித்தானிய நிர்வாகத்திற்கு எதிராக இவர்கள் போராட்டம் நடத்தினர்.

சான்றுகள்

தொகு
  1. Society, Indian Anthropological (2005). Journal of the Indian Anthropological Society (in ஆங்கிலம்). The Society. pp. 187–191.
  2. Man and Life (in ஆங்கிலம்). Institute of Social Research and Applied Anthropology. 1992.
  3. Sarma, Jyotirmoyee (1980). Caste Dynamics Among the Bengali Hindus (in ஆங்கிலம்). Firma KLM. p. 119.
  4. Pfeffer, Georg (1997). Contemporary Society: Developmental issues, transition, and change (in ஆங்கிலம்). Concept Publishing Company.
  5. Shikha Mukerjee (March 18, 2021). "From ideologies to caste: The emerging identity politics in West Bengal elections". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-21.
  6. Agarwalla, Shyam. S. (1998). Religion and Caste Politics. Rawat Publications. p. 133. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170334682.
  7. Kumar, Sangeet (2005). Changing Role of the Caste System: A Critique. Rawat Publications. p. 48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8170338816.
  8. ".:: Legacy of Midnapore(Medinipur,Midnapur,Purba Medinipur, Paschim Medinipur,East Midnapore,West Midnapore)::". www.midnapore.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-29.
  9. "mahisyas-and-the-new-caste-question-in-west-bengal-politics".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகிசியர்&oldid=3747107" இலிருந்து மீள்விக்கப்பட்டது