மக்கேமக்கே

சூரியக் குடும்பத்தின் ஒரு குறுங்கோள்

மக்கேமக்கே (Makemake, சின்னம்: 🝼;[6] சிறுகோள் வரிசை எண் 136472 மக்கேமக்கே) என்பது ஒரு குறுங்கோள் ஆகும். இது கைப்பர் பட்டை பகுதியில் உள்ள பொருள்களில் சற்று பெரியது. இது புளூட்டோவில் 2/3 பங்கு அளவு உடையது. இதற்கு இயற்கைத் துணைக்கோள் கிடையாது என்பதால், இதன் திணிவை நம்மால் அளவிட முடியும். இது மிகவும் குறைந்த சராசரி வெப்பநிலையை உடையது. இதன் வெப்பநிலை சுமார் 30 கெல்வின் ஆகும். எனவே இது மெத்தேன், எத்தேன் மற்றும் நைட்ரசன் பனிக்கட்டிகளால் மூடப்பட்ட மேற்பரப்பை கொண்டிருக்கும் எனக் கருதப்படுகிறது.

மக்கேமக்கே  🝼
ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியின் வழியாக மேக்மேக் பார்க்கப்படும் போது அமைப்பு
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்)
 • மைக்கேல் பிரவுன்
 • சாட் ட்ருஜில்லோ
 • டேவிட் ராபினோவிட்ச்
கண்டுபிடிப்பு நாள் 31 மார்ச் 2005
பெயர்க்குறிப்பினை
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் (136,472) மக்கேமக்கே
வேறு பெயர்கள்2005 ஃப்ஒய்9
காலகட்டம்ஜூலியன் நாள் 2457000.5 (9 டிசம்பர் 2014)
சூரிய சேய்மை நிலை52.840 வானியல் அலகு
சூரிய அண்மை நிலை 38.590 வானியல் அலகு
அரைப்பேரச்சு 45.715 வானியல் அலகு
மையத்தொலைத்தகவு 0.15586
சுற்றுப்பாதை வேகம் 309.09 ஜூலியன் ஆண்டு
சராசரி சுற்றுப்பாதை வேகம் 4.419  கிமீ/நொடி
சராசரி பிறழ்வு 156.353°
சாய்வு 29.00685°
Longitude of ascending node 79.3659°
Argument of perihelion 297.240°
சிறப்பியல்பு
பரிமாணங்கள்
 • (1434 × 1422) ± 14[1]
 • (1502±45) × (1430±9) கிமீ [2]
சராசரி ஆரம்
 • 715±7 கிமீ[1]
 • 739±17 கிமீ[2]
 • 710±30 கிமீ[3]
தட்டையாதல் 0.05
புறப் பரப்பு ≈ 6,900,000 கிமீ 2
கனஅளவு ≈ 1.7×109 கிமீ 3
அடர்த்தி 1.4–3.2 கி/செமீ 3[1]
விண்மீன்வழிச் சுற்றுக்காலம் 7.771±0.003 h[4]
எதிரொளி திறன்0.81+0.01
−0.02
[1]
வெப்பநிலை 32–36 கெல்வின் [2]
நிறமாலை வகைB−V=0.83, V−R=0.5[5]

மைக்கேல் பிரவுனின் தலைமையிலான குழுவினால், மக்கேமக்கே, 31 மார்ச் 2005 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் 29 ஜூலை 2005 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆரம்பத்தில், இதை 2005 FY9 என பெயரிட்டார்கள், அதன்பின் சிறுகோள் வரிசை எண் 136472 கொடுக்கப்பட்டது. ஜூலை, 2008 இல் உலகளாவிய வானியல் ஒன்றியம் இதற்கு குறுங்கோள் அங்கீகாரத்தைக் கொடுத்தது.

மேற்கோள்கள்

தொகு
 1. 1.0 1.1 1.2 1.3 M.E. Brown, 2013, "On the size, shape, and density of dwarf planet Makemake"
 2. 2.0 2.1 2.2 எஆசு:10.1038/nature11597
  This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand (ESO 21 November 2012 press release: Dwarf Planet Makemake Lacks Atmosphere)
 3. T.L. Lim; J. Stansberry; T.G. Müller (2010). ""TNOs are Cool": A survey of the trans-Neptunian region III. Thermophysical properties of 90482 Orcus and 136472 Makemake". Astronomy and Astrophysics 518: L148. doi:10.1051/0004-6361/201014701. Bibcode: 2010A&A...518L.148L. 
 4. A. N. Heinze and Daniel deLahunta, The rotation period and light-curve amplitude of Kuiper belt dwarf planet 136472 Makemake (2005 FY9), The Astronomical Journal 138 (2009), pp. 428–438. எஆசு:10.1088/0004-6256/138/2/428
 5. எஆசு:10.1051/0004-6361/200913031 10.1051/0004-6361/200913031
  This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
 6. JPL/NASA (2015-04-22). "What is a Dwarf Planet?". Jet Propulsion Laboratory. பார்க்கப்பட்ட நாள் 2022-01-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்கேமக்கே&oldid=3697445" இலிருந்து மீள்விக்கப்பட்டது