மங்களா அணை (Mangla Dam), பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் அமைந்த மிர்பூர் மாவட்டத்தில் உள்ள மங்கள் கிராமத்தில் பாயும் ஜீலம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இது வேளாண்மை, குடிநீர் மற்றும் நீர் மின் சக்தி போன்ற பல்நோக்கங்களுக்கு பயன்படும் உலகின் 6வது பெரிய அணையாகும். இது பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத் நகரத்திற்கு தென்கிழக்கில் 108 கிலோமீட்டர்கள் (67 mi) தொலைவில் அமைந்துள்ளது.

மங்களா அணை
Aerial photograph of the Mangla Dam, அண். 2012
மங்களா அணை is located in பாக்கித்தான்
மங்களா அணை
பாகிஸ்தானின் மங்களா அணையின் அமைவிடம்
நாடுபாகிஸ்தான்
அமைவிடம்மங்களா, மிர்பூர் மாவட்டம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தான்
புவியியல் ஆள்கூற்று33°08′31″N 73°38′42″E / 33.142083°N 73.645015°E / 33.142083; 73.645015
நிலைசெயல்பாட்டில் உள்ளது
கட்டத் தொடங்கியது1961
திறந்தது1967
கட்ட ஆன செலவு1.5 பில்லியன் அமெரிக்க டாலர்
உரிமையாளர்(கள்)பாகிஸ்தான் அரசு
இயக்குனர்(கள்)நீர் & மின்சக்தி மேம்பாட்டு வாரியம்
அணையும் வழிகாலும்
வகைநீர் தேக்கும் அணை
தடுக்கப்படும் ஆறுஜீலம் ஆறு
உயரம்147 m (482 அடி)
நீளம்3,140 m (10,302 அடி)
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்மங்களா ஏரி
மொத்தம் கொள் அளவு9.12 km3 (7,390,000 acre⋅ft)
நீர்ப்பிடிப்பு பகுதி33,334 km2 (12,870 sq mi)
மேற்பரப்பு பகுதி250 km2 (97 sq mi)
மின் நிலையம்
சுழலிகள்8 x 100 MW
2 x 135&nbsp: மெகா வாட்
நிறுவப்பட்ட திறன்1,070 மெகா வாட் மின் திறன் (நடைமுறையில்)
1,310&nbsp:மெகா வாட் மின் திறன் (திட்டமிட்டது)[1]

நவம்பர் 1961ல் இந்த அணையின் கட்டுமானப் பணி துவங்கப்பட்டு, 1967ஆம் ஆண்டில் முடிவுற்றது. உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியால் கட்டப்பட்ட இவ்வணைக்கான மொத்தச் செலவு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.[2]

அணையின் விளக்கம்

தொகு

ஜீலம் ஆறு பாயும் மங்களா எரிக்கரையில் அமைந்த மங்களா அணை 3,140 மீட்டர் (10,302 அடி) நீளம் மற்றும் 147 மீட்டர் (482 அடி) உயரம் கொண்டது. இதன் மொத்த நீர் கொள்ளவு 9.12 km3 (7,390,000 acre⋅ft) ஆகும். இதன் நீர் பிடிப்பு பரப்பளவு 33,334 km2 (12,870 sq mi) ஆகும். இந்த அணை மூலம் நாள் ஒன்றுக்கு 1,070 மெகா வாட் மின் சக்தி உற்பத்தி செய்யக்கூடிய நீர் மின் நிலையங்கள் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Mangla Refurbishment Project". nation.com.pk. 24 May 2022. பார்க்கப்பட்ட நாள் 2023-07-20.
  2. "Water Dams: Mangla பரணிடப்பட்டது 2013-07-30 at the வந்தவழி இயந்திரம்". Water & Power Development Authority.this project included Mr Iqbal Hussein and some other workers who did this work with much hardworking. Retrieved 10 August 2013.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mangla Dam
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்களா_அணை&oldid=4089475" இலிருந்து மீள்விக்கப்பட்டது