மங்கோலியத் திரைப்படத்துறை
மங்கோலியத் திரைப்படத்துறை (Cinema of Mongolia) என்பது மங்கோலிய நாட்டில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும். இந்த திரைப்படத்துறை உருசியா நாட்டுத் திரைப்படத்துறையால் பெருதும் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஆசியாவின் பிற பகுதிகளில் உள்ள திரைத்துறையின் வளர்ச்சிகளிலிருந்து வேறுபடுகிறது.
1903 மற்றும் 1913 க்கு இடையில் மங்கோலியாவில் முதல் ஒளிப்பதிவு நிகழ்ச்சிகள் நடந்தன என்று கருதப்படுகிறது. இது இளவரசர் டாக்ஸ் ஓச்சிரின் நம்ன்செரென் மற்றும் தலைநகர் பத்தூர்காவில் உள்ள ஜெப்சுண்டம்பா ஆகியோரின் தனிப்பட்ட ஒளிப்பதிவு நிகழ்வாகும். 1925 ஆம் ஆண்டில் சோசலிசப் புரட்சிக்குப் பின்னர் மங்கோலிய மக்கள் புரட்சிக் கட்சி ஐந்தாவது மாநாட்டில் திரைப்படங்களை வெகுஜன கல்வியின் கருவியாகப் பயன்படுத்த முடிவு செய்தது. 1934 இல் முதல் நிரந்தர திரையரங்கம் 'ஆர்ட்' என்ற பெயரில் தலைநகர் உலான் பத்தூரில் திறக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி மங்கோலியா நாட்டில் 24 திரையரங்குகள் உள்ளன.[1] மற்றும் 1,916,700 ஆம் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Table 8: Cinema Infrastructure - Capacity". UNESCO Institute for Statistics. Archived from the original on 24 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 5 November 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Table 11: Exhibition - Admissions & Gross Box Office (GBO)". UNESCO Institute for Statistics. Archived from the original on 24 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 5 November 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)