மசூர் மௌலானா

மசூர் மௌலானா (S. Z. M. M. Moulana, 31 சனவரி 1932 - 4 டிசம்பர் 2015) இலங்கை முஸ்லிம் அரசியல்வாதியும், முன்னாள் மேலவை, மற்றும் மாகாண சபை உறுப்பினரும், பேச்சாளரும் இலக்கியவாதியும் ஆவார்.

மசூர் மௌலானா
பிறப்பு(1932-01-31)31 சனவரி 1932
மருதமுனை, அம்பாறை மாவட்டம், இலங்கை
இறப்புதிசம்பர் 4, 2015(2015-12-04) (அகவை 84)
கொழும்பு, இலங்கை
தேசியம்இலங்கைச் சோனகர்
பணிஆசிரியர்
அறியப்படுவதுஅரசியல்வாதி
சமயம்இசுலாம்
பெற்றோர்செய்யது ஐதுறுஸ் மௌலானா செயின் மௌலானா இஸ்மாலெப்பை போடியார், செயினம்பு

வாழ்க்கைக் குறிப்பு தொகு

மசூர் மௌலானா கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டம் மருதமுனை என்ற ஊரில் செய்யது ஐதுறுஸ் மௌலானா செயின் மௌலானா இஸ்மாலெப்பை போடியார், செயினம்பு ஆகியோருக்குப் பிறந்தார். மருதமுனை அல்மனார் மகா வித்தியாலயம், மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம், மட்டக்களப்பு மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகள் கல்வி கற்றார். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றினார்.

அரசியலில் தொகு

மசூர் மௌலானா தனது 17வது அகவையில் தந்தை செல்வாவின் அரசியல் செயல்பாட்டில் ஈடுபாடு ஏற்பட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியில் சேர்ந்தார்.[1] 1956 இல் கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தமிழ் தலைவர்களுடன் இணைந்து கலந்து கொண்டார்.[2] தமிழரசுக் கட்சியின் சார்பில் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[2]

மார்ச் 1960 நாடாளுமன்றத் தேர்தலில் கல்முனை தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு மு. ச. காரியப்பரிடம் தோற்றார்.[3] பின்னர் சூலை 1960,[4] 1965 தேர்தல்களிலும்[5] போட்டியிட்டார்.

1966 முதல் 1974 வரை கரவாக வடக்கு கிராமசபைத் தலைவராக இருந்து செயல்பட்டார்.[1] பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து 1988ல் நடைபெற்ற இலங்கையின் முதலாவது வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அக்கட்சியின் மூலம் தெரிவான ஒரேயோரு உறுப்பினராக மாகாண சபை சென்றார்.[6]

அதன் பின்னர் இலங்கை முசுலிம் காங்கிரசில் இணைந்து கல்முனை மாநகர முதல்வராகவும் பணியாற்றினார்.[6]

மறைவு தொகு

மசூர் மௌலானா தனது 84 வது அகவையில் 2015 டிசம்பர் 4 வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் கொழும்பில் காலமானார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "தமிழ் - முஸ்லிம் உறவுப் பாலம் மசூர் மௌலானா காலமானார்". தமிழ்வின். 4 டிசம்பர் 2015. Archived from the original on 2015-12-06. பார்க்கப்பட்ட நாள் 5 திசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. 2.0 2.1 "செனட்டர் மசூர் மௌலானா காலமானார்". புதிது. 4 டிசம்பர் 2015. Archived from the original on 2015-12-06. பார்க்கப்பட்ட நாள் 5 திசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2015-12-05.
  4. "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-12-05.
  5. "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2015-12-05.
  6. 6.0 6.1 "அல்ஹாஜ் மசூர் மௌலானா காலமானார்". அததெரண. 4 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 5 திசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மசூர்_மௌலானா&oldid=3566109" இலிருந்து மீள்விக்கப்பட்டது