மஞ்சள்-தொண்டை சிட்டுக்குருவி
தொண்டை சிட்டுக்குருவி | |
---|---|
இந்தியாவின் நாக்பூரில் மஞ்சள் தொண்டை சிட்டுக்குருவி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | சி. சாந்தோகோலிசு
|
இருசொற் பெயரீடு | |
சிம்னோரிசு சாந்தோகோலிசு புரூட்டன், 1838 | |
வேறு பெயர்கள் [2] | |
|
மஞ்சள் தொண்டை சிட்டுக்குருவி அல்லது மஞ்சள் தொண்டை சிட்டு (ஆங்கிலப்பெயர்: Yellow-throated sparrow, அறிவியல் பெயர்: சிம்னோரிசு சாந்தோகோலிசு (Gymnoris xanthocollis) என்பது தெற்காசியாவில் காணப்படும் ஒரு சிட்டுக்குருவி சிற்றினமாகும்.
விளக்கம்
தொகுஉண்மையான சிட்டுக்குருவிகள் என அழைக்கப்படும் பேரினத்தில் உள்ள பொதுவான மற்ற சிட்டுக்குருவிகளை விட இச்சிட்டுக்குருவிக்கு கூர்மையான அலகு அமைந்துள்ளது. அதேபோல் மற்ற சிட்டுக்குருவிகளை போல் இதற்கு சிறகுகளில் கீற்றுக்கோடுகள் காணப்படுவதில்லை.
இயல்பு
தொகுஏப்ரல் முதல் ஜூலை வரை இவற்றின் இனப்பெருக்க காலம்; மரப் பொந்துகளில் கூடு கட்டுகின்றன. பெரும்பாலும் மரப்பொந்துகளை உருவாக்கும் மரங்கொத்தி போன்ற பறவைகள் உருவாக்கிய பொந்துகளிலேயே இவை கூடுகட்டும். இவை கட்டடங்களில் உள்ள பொந்துகளையும் பயன்படுத்தும். கூடானது பெரும்பாலும் பெண்குருவிகளாலேயே கட்டப்படும். ஆனால் சில நேரங்களில் ஆண்குருவிகளும் உதவி செய்யும்.[3] பெண் சிட்டுக்குருவி மட்டுமே முட்டைகளை அடைகாக்கும். சில நேரங்களில் பகல் பொழுதின் வெப்பமான சமயங்களில் கூட்டை விட்டு வெளியே செல்லும்.[4] முட்டைகளிலிருந்து சுமார் 12 முதல் 14 நாட்களுக்குப் பிறகு குஞ்சுகள் பொரிக்கும்.[5][6]
சிட்டுக்குருவிகள் தாழ்வான புதர்களில் கூட்டமாக அடையும். சில கூட்டங்கள் வலசை போகும் தன்மையுடையவை; மழையின் அளவைப் பொறுத்து அவை இடம் பெயரும்.[3][7]
இவை பெரும்பாலும் தானியங்களை உண்ணும். சில நேரங்களில் பூச்சிகள், தேன் மற்றும் சிறு பழங்களையும் உண்ணும். இலுப்பை போன்ற மரங்களின் மலர்களின் இதழ்களையும் இவை எப்போதாவது உண்ணும்.[8] ஆதண்டை போன்றவற்றின் மலர்களுக்கு இவை செல்லும்போது இவற்றின் நெற்றியில் மகரந்தத் தூள்கள் ஒட்டிக்கொள்கின்றன.[3]
பரவல்
தொகுமஞ்சள் தொண்டை சிட்டுக்குருவியானது துருக்கி முதல் ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது; இலங்கையில் வழி தவறிய பறவையாக காணப்படுகிறது. மேலும் மியான்மரின் பகுதிகளிலும் இது காணப்படுவதாக கருதப்படுகிறது.[9] இது காடு, தோட்டங்கள் மற்றும் திறந்தவெளி புதர் வாழ்விடங்களில் காணப்படுகிறது.
அகத்தூண்டுதல்
தொகுசலீம் அலி (1896-1987) தான் பறவையியலுக்கு அறிமுகம் செய்துகொள்ள இந்த உயிரினம் தான் தூண்டுகோலாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார். ஒரு சிறுவனாக இருந்த பொழுது சலீம் அலி ஒரு சிட்டுக்குருவியை சுட்டு வீழ்த்தினார். அது மற்ற சிட்டுக்குருவிகளில் இருந்து வித்தியாசமாக இருந்தது. அச்சிட்டுக்குருவி எந்த இனம் என்பதை பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்தின் (பி. என். ஹெச். எஸ்.) செயலாளராக இருந்த டபுள்யூ. எஸ். மில்லர்ட் என்பவர் சலீம் அலிக்கு கண்டுபிடித்துக் கூறினார். மேலும் அவர் அங்கிருந்த அருங்காட்சியகத்தில் இருந்த இலக்கியங்கள் மற்றும் திரட்டுக்களை சலீம் அலிக்கு அறிமுகம் செய்தார்.[10] இதன்விளைவாக சலீம் அலி பறவையியலைத் தனது துறையாக தேர்ந்தெடுத்தார். 2003ம் ஆண்டில் பி. என். ஹெச். எஸ். சலீம் அலிக்கு பாராட்டுரை செய்யும் விதமாக வெளியிட்ட ஒரு புத்தகத்திற்கு பெயராக இந்த சிட்டுக்குருவியின் அறிவியல் பெயர்களில் ஒன்றான பெட்ரோனியாவைச் சூட்டியது.[11]
உசாத்துணை
தொகு- ↑ BirdLife International (2019). "Gymnoris xanthocollis". IUCN Red List of Threatened Species 2019: e.T22718294A155508722. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T22718294A155508722.en. https://www.iucnredlist.org/species/22718294/155508722. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Gregory, S. M. S. (2006). "Systematic notes on Asian birds. 57. The authorship of the generic name Gymnoris". Zoologische Mededelingen (Leiden) 80 (5): 185–188. http://www.zoologischemededelingen.nl/80/nr05/a11.
- ↑ 3.0 3.1 3.2 Ali, S.; Ripley, S. D. (1999). Handbook of the Birds of India and Pakistan. Volume 10 (2nd ed.). New Delhi: Oxford University Press. pp. 81–86.
{{cite book}}
: Unknown parameter|lastauthoramp=
ignored (help) - ↑ Misra, M. K. (1990). "Observations on the nesting behaviour of yellow throated sparrow". Newsletter for Birdwatchers 30 (7&8): 4–5. https://archive.org/stream/NLBW30_78#page/n5/mode/1up.
- ↑ Soni, R. G. (1993). "Breeding of Yellow-throated Sparrow". Newsletter for Birdwatchers 33 (3): 51. https://archive.org/stream/NLBW33_3#page/n12/mode/1up/.
- ↑ Soni, R. G. (1993). "Breeding of Yellowthroated Sparrow". Newsletter for Birdwatchers 33 (4): 78. https://archive.org/stream/NLBW33_4#page/n19/mode/1up.
- ↑ Clement, P.; Harris, Alan; Davis, John (1999). Finches and Sparrows. Princeton University Press. p. 469.
- ↑ Bharos, A. M. K. (1992). "Interesting feeding pattern of Yellowthroated Sparrow Petronia xanthocollis (Burton)". Journal of the Bombay Natural History Society 89 (1): 128. https://biodiversitylibrary.org/page/48732578.
- ↑ Robinson, S. M. (1925). "Nesting of the Yellowthroated Sparrow Gymnoris xanthosterna xanthosterna at Kalan, Shan States". Journal of the Bombay Natural History Society 30 (2): 477. https://biodiversitylibrary.org/page/47561886.
- ↑ Daniels, R. J. R. (2008). "Can we save the sparrow?". Current Science 95 (11): 1527–1528. http://www.ias.ac.in/currsci/dec102008/1527.pdf.
- ↑ Daniel, J. C.; Ugra, G. W., eds. (2003). Petronia: Fifty Years of Post-Independence Ornithology in India. A Centenary Dedication to Dr. Salim Ali, 1896–1996. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-566653-4.
மேலும் படிக்க
தொகு- Bhat, G. (1984). Breeding Biology of Indian Yellow-throated Sparrow, Petronia xanthocollis (Burton) – a Grain eating Pest Bird. Ph.D. Thesis. University of Calcutta.
- Bhat, G.; Maiti, B. (1993). "Effects of Nitrofurantoin and Cadmium Chloride on Spermatogenetic Activity in an Avian Pest, the Yellow-throated Sparrow (Petronia xanthocollis Burton )". Journal of the Yamashina Institute for Ornithology 25 (1): 62–67. doi:10.3312/jyio1952.25.62.
- Reddy, V. R. (2006). "Evaluation of bird depredations to important standing crops in southern Telangana zone (STZ), Andhra Pradesh, India". Journal of Ecotoxicology and Environmental Monitoring 16 (5): 417–424.
- Ghose, R. K. (1969). "Behaviour of the Yellowthroated Sparrow Petronia xanthocollis". Newsletter for Birdwatchers 9 (7): 8. https://archive.org/stream/NLBW9#page/n101/mode/1up.
- Mittal, O. P.; Sharma, V. L. (1990). "Studies on karyotypes of two species of Indian birds (Passeriformes: Aves)". Res. Bull. Panjab Univ. 41 (1–4): 93–102.
- Dixit, A. S.; Tewary, P. D. (1989). "Involvement of a circadian rhythm in the photoperiodic ovarian response of the yellow-throated sparrow, Gymnorhis xanthocollis". J. Exp. Biol. 143: 411–418. பப்மெட்:2732664. https://archive.org/details/sim_journal-of-experimental-biology_1989-05_143/page/411.
- Tewary, P. D.; Tripathi, P. M.; Tripathi, B. K. (1985). "Effects of exogenous gonadal steroids and castration on photoperiodic responses of the Yellow-throated Sparrow Gymnorhis xanthocollis (Burton)". Indian J. Exp. Biol. 23: 426–428.
- Tewary, P. D.; Dixit, A. S. (1986). "Photoperiodic regulation of reproduction in subtropical female Yellow-Throated Sparrows (Gymnorhis xanthocollis)". The Condor 88 (1): 70–73. doi:10.2307/1367755. http://sora.unm.edu/sites/default/files/journals/condor/v088n01/p0070-p0073.pdf.
- Venugopal, B. (1997). "Nest relocation by Yellow-throated Sparrow (Petronia xanthocollis)". Indian Journal of Biodiversity 1 (1&2): 174.
- Misra, M. K. (1989). "Breeding behaviour of the Indian Yellow throated Sparrow (Petronia xanthocollis xanthocollis) (Burton)". Zoos' Print Journal 4 (10): 17–18.