சிம்னோரிசு
சிம்னோரிசு (Gymnoris) என்பது தொல்லுலகச் சிட்டுக் குடும்பத்திலுள்ள குருவிகளின் பேரினமாகும். இப்பேரினத்தில் உள்ள 3 சிற்றினங்கள் ஆப்பிரிக்காவில் உள்ளன. மற்றொரு இனமான மஞ்சள்-தொண்டை சிட்டு துருக்கி முதல் இந்தியா வரை பரவி காணப்படுகிறது.
சிம்னோரிசு | |
---|---|
மஞ்சள்-தொண்டை சிட்டுக்குருவி (சிம்னோரிசு சாந்தோகோலிசு) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பிளைத், 1845
|
இனங்கள் | |
கட்டுரையில் |
இந்த பேரினமானது இங்கிலாந்து விலங்கியலாளரான எட்வர்டு பிலைத்தால் 1845இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பேரினம் மஞ்சள்-தொண்டை சிட்டை மாதிரி இனமாக வைத்து அறிமுகப்படுத்தப்பட்டது.[1][2] சிம்னோரிசு என்ற பெயரானது பண்டைய கிரேக்க வார்த்தைகளான கும்னோசு ("வெற்று") மற்றும் ரினோசு ("நாசி") ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.[3]
இப்பேரினத்தில் நான்கு சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[4]
படம் | அறிவியல் பெயர் | சாதாரண பெயர் | பரவல் |
---|---|---|---|
சிம்னோரிசு சூப்பர்சிலாரிசு | மஞ்சள் தொண்டை புதர் சிட்டுக்குருவி | தென்-நடு மற்றும் தெற்கு ஆப்பிரிக்கா | |
சிம்னோரிசு டெண்டேட்டா | சகேல் புதர் சிட்டுக்குருவி | மேற்கில் மவுரிடானியா மற்றும் கினியா முதல் கிழக்கில் எரித்ரியா மற்றும் தென்மேற்கு அரேபிய தீபகற்பம் வரை | |
சிம்னோரிசு பிர்கிடா | மஞ்சள் புள்ளி புதர் சிட்டுக்குருவி | சகேல் மற்றும் ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதி | |
சிம்னோரிசு சாந்தோகோலிசு | மஞ்சள்-தொண்டைச் சிட்டு | தெற்கு ஆசியா |
இந்த இனங்கள் சிலநேரங்களில் பெட்ரோனியா பேரினத்தின் கீழும் வகைப்படுத்தப்படுகின்றன.
உசாத்துணை
தொகு- ↑ Edward Blyth (1845). "Synopsis of the Indian Fringillidae". Journal of the Asiatic Society of Bengal 13 Part 2 (156): 944-963 [948]. https://biodiversitylibrary.org/page/40126041.
- ↑ Dickinson, E.C.; Christidis, L., eds. (2014). The Howard & Moore Complete Checklist of the Birds of the World. Vol. Volume 2: Passerines (4th ed.). Eastbourne, UK: Aves Press. p. 307. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9568611-2-2.
{{cite book}}
:|volume=
has extra text (help) - ↑ Jobling, J.A. (2018). del Hoyo, J.; Elliott, A.; Sargatal, J.; Christie, D.A.; de Juana, E. (eds.). "Key to Scientific Names in Ornithology". Handbook of the Birds of the World Alive. Lynx Edicions. பார்க்கப்பட்ட நாள் 8 May 2018.
- ↑ Gill, Frank; Donsker, David, eds. (2018). "Old World sparrows, snowfinches, weavers". World Bird List Version 8.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 8 May 2018.