மஞ்சள் குங்கும விழா

மஞ்சள் குங்கும விழா (Haldi Kumkum) என்பது கால்தி குங்குமம் அல்லது கால்தி குங்கும் விழா என்று இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு இந்து சமய விழாவாகும். இதில் திருமணமான பெண்கள் மஞ்சள் மற்றும் குங்குமத்தினை தங்களுக்குத் திருமணம் முடிந்ததன் அடையாளமாகவும், தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும் பரிமாறிக் கொள்கிறார்கள்.[1]

இந்த விழா இந்திய மாநிலங்களான மகாராட்டிரா, கர்நாடகா, தெலங்காணா, ஆந்திரப் பிரதேசம், கோவா ஆகியவற்றில் குறிப்பாகப் பிரபலமாக உள்ளது. தமிழ்நாட்டில், இது ஆடிப் பெருக்கு அல்லது ஆடி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இது தமிழ் மாதமான ஆடியின் 18வது நாளில் (சூலை நடுப்பகுதி முதல் ஆகத்து நடுப்பகுதி வரை) கொண்டாடப்படும் ஒரு இந்து தமிழ் பண்டிகையாகும். திருமணமான பெண்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் புதிய அறிமுகமானவர்களை மகிழ்ச்சி மற்றும் வேடிக்கையான சூழ்நிலையில் சந்திக்க அழைக்கிறார்கள். இத்தகைய சந்தர்ப்பங்களில், வளையல்கள், இனிப்புகள், பதார்த்தங்கள், பூக்கள், வெற்றிலை மற்றும் காய்களுடன் தேங்காய்களை வழங்குகின்றனர். சிற்றுண்டிகளில் கைரிச்சே பன்கே (மாம்பழச்சாறு ) மற்றும் கடலைப் பருப்பில் செய்யப்பட்ட சிற்றுண்டி ஆகியவை அடங்கும்.[2]

இந்த விழா சிரவண மாதம், தீபாவளி மற்றும் சங்கராந்தி மாதங்களில் வெள்ளிக்கிழமைகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடத்தப்படுகிறது.

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Rege, Sharmila (2006). Writing Caste, Writing Gender: Narrating Dalit Women's Testimonies. Zubaan. p. 148. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-89013-01-7.
  2. https://timesofindia.indiatimes.com/topic/haldi-kumkum-festival
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_குங்கும_விழா&oldid=3849212" இலிருந்து மீள்விக்கப்பட்டது