மடத்துப்பட்டி

மடத்துப்பட்டி என்ற கிராமம் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுக்கா, அரிமளம் ஒன்றியத்தில் உள்ளது. இந்த கிராமம் மூன்று ஊராட்சியில் (சமுத்திரம் ஊராட்சி, துறையூர் ஊராட்சி, கும்மங்குடி ஊராட்சி) உள்ளது. தேனிபட்டி புதுப்பட்டியில் இருந்து அரிமளம் வழி புதுகை சாலையில் அமைந்த இக்கிராமம், அரிமளம் தேனிபட்டி வழிதடத்தில் 5 கி.மீ மத்தியில் உள்ளது.

மடத்துப்பட்டி
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் எம். அருணா, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இவ்வூரின் சிறப்பு இப்பகுதியின் மத்திய கிராமம் ஆகும். இங்கு வாணியசெட்டியார், கொல்லர், வல்லம்பர், வெள்ளாளர், நாடார் சமூகத்தினர் வசிக்கின்றனர். தச்சுப்பட்டறை, எண்ணை உற்பத்தி, கை மரம் அறுவை பட்டறை, பனை வேலைபாடு, கைவினைப் பொருட்கள், இயந்திர நெல் அரவைக்கூடம், விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்கள் இக்கிராமத்தில் உள்ளன.

மடத்தூரணி பிள்ளையார், வெற்றிவடிவேலன், இடும்பர், மடத்து வினாயகர் கிராம தெய்வங்கள் ஆகும். இங்கு பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. காப்புகட்டி பத்துநாள் மண்டகபடி நடைபெறும். உத்திரத்தன்று காவடி எடுப்பு, அன்னதானம் சிறப்பாக நடைபெறும். மூன்றாம் நாள் இடும்பர் பூசை நடைபெறும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மடத்துப்பட்டி&oldid=2202673" இலிருந்து மீள்விக்கப்பட்டது