மணிப்பூரின் நடனங்கள்
மணிப்பூரின் நடனங்கள் ( Dances of Manipur ) என்பது இந்தியாவின் வடகிழக்கை ஒட்டிய மியான்மரின் சில பகுதிகள், மணிப்பூர், அசாம், நாகாலாந்து மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் நிகழ்த்தப்படும் பல்வேறு நடன பாணிகள் ஆகும்.[1] மணிப்புரி நடனங்கள் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடன வடிவங்களை உள்ளடக்கியது. ராஸ் லீலா என்பது இந்திய பாரம்பரிய நடன வடிவங்களில் ஒன்றாகும். நாட்டுப்புற நடன வடிவங்கள் முக்கியமாக உமாங் லாய் போன்ற பழங்கால மெய்தே தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும்,இலாய் அரோபா திருவிழாவின் போது . மணிப்பூரின் பல்வேறு பழங்குடி சமூகங்களின் நடனங்களாக நிகழ்த்தப்பட்டவை.[2][3]
மணிப்புரி நடனம், பொதுவாக, அதன் தனித்துவமான உடைகள், அழகியல், மரபுகள் மற்றும் திறமையுடன் கூடிய ஒரு குழு நிகழ்ச்சியாகும்.[4] மணிப்புரி நடனம் ஒரு சமயக் கலை மற்றும் அதன் நோக்கம் ஆன்மீக விழுமியங்களின் வெளிப்பாடாக உள்ளது.. இந்த நிகழ்ச்சிக் கலையின் அம்சங்கள், மணிப்பூர் மக்களிடையே, குறிப்பாக மெய்தெய் மக்களிடையே, திருவிழாக்கள் மற்றும் திருமணங்கள் போன்ற முக்கிய சடங்குகளின் போது கொண்டாடப்படுகிறது. [2] [5]
மணிப்பூரில் பல நடன வடிவங்கள் உள்ளன. இதில் மாநிலத்தில் வசிக்கும் பல்வேறு சமூகங்களின் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனங்கள் அடங்கும்.
ராஸ் லீலா
தொகுராஸ் லீலா என்பது இந்து சமயத்தின் வைணவத்தை அடிப்படையாகக் கொண்ட, ராதை மற்றும் கிருட்டிணன் ஆகிய இருவரின் காதல் கதைகளை அடிப்படையாகக் கொண்ட நேர்த்தியான நடன நாடகத்தின் நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டது.
மணிப்பூரி ராஸ் லீலா நடனத்தின் வேர்கள், அனைத்து பாரம்பரிய இந்திய நடனங்களைப் போலவே, பண்டைய இந்து சமசுகிருத நூலான காந்தர்வ வேதம் ஆகும். இது தாக்கங்கள் மற்றும் பல்வேறு உள்ளூர் நாட்டுப்புற நடன வடிவங்களுக்கிடையேயான கலாச்சார இணைப்பாக உள்ளது.[6] இடைக்கால சகாப்தத்தில் விஷ்ணு கோவில்கள் இருந்ததற்கான சான்றுகளுடன், இந்த நடன வடிவம் வாய்மொழி பாரம்பரியமாக தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு வாய்மொழியாக அனுப்பப்பட்டது. இந்த மணிப்புரி நடன நாடகம், பெரும்பாலும், கை மற்றும் மேல் உடல் பாகங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அழகும், பாவமும் கொண்ட ஒரு நடிப்பால் நிகழ்த்தப்படுகிறது. [7][8] கோல் என்ற பல இசைக்ருவிகளுடன் கீர்த்தனைகள் பாடி உருவாக்கப்பட்டது. [9] நாட்டிய நாடக நடன அமைப்பு வைணவ பாடல்களின் தொகுப்பு நாடகங்கள் மற்றும் கதைகளைப் பகிர்ந்து கொள்கிறது. இது அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் காணப்படும் முக்கிய கௌடிய வைணவம் தொடர்பான நிகழ்ச்சிக் கலைகளுக்கு ஊக்கமளித்தது.[1]
தௌகல் ஜகோய்
தொகுதௌகல் ஜகோய் என்பது இலாய் அரோபா திருவிழாவின் போது தெய்வங்களுக்கு முன்பாக ஆடப்படும் மெய்தெய் சமூகத்தின் நாட்டுப்புற நடனமாகும். இது கம்பா தோய்பி ஜாகோய் என்றும் அழைக்கப்படுகிறது. பெண் நடனக் கலைஞர்களால் மட்டுமே நிகழ்த்தப்படும் தௌகல் ஜகோயின் மாறுபாடு லீமா ஜாகோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நடனத்தில் பெனா மற்றும் லாங்டன் போன்ற பாரம்பரிய இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. பழங்கால மொய்ராங் இராச்சியத்தில் இயற்றப்பட்ட கம்பா தோய்பி என்ற பழம்பெரும் மெய்தெய் காவியக் கவிதையின் படி, கம்பா, குமான் இளவரசர் மற்றும் தோய்பி, மொய்ராங் இளவரசி எபுதௌ தாங்ஜிங்கின் முன் இந்த நடனத்தை நிகழ்த்தியதாக நம்பப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 James G. Lochtefeld (2002). The Illustrated Encyclopedia of Hinduism: A-M. The Rosen Publishing Group. pp. 420–421. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8239-3179-8.
- ↑ 2.0 2.1 Reginald Massey 2004, ப. 177-180.
- ↑ Saroj Nalini Parratt (1997). The pleasing of the gods: Meitei Lai Haraoba. Vikas Publishers. pp. 14–20, 42–46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788125904168.
- ↑ Saryu Doshi 1989, ப. 19-20, 93-99.
- ↑ Saryu Doshi 1989, ப. vii, 6-7, 25-26.
- ↑ Saryu Doshi 1989, ப. xv-xviii.
- ↑ Farley P. Richmond, Darius L. Swann & Phillip B. Zarrilli 1993, ப. 174-175.
- ↑ Ragini Devi 1990, ப. 176.
- ↑ Saryu Doshi 1989, ப. 78-84.
நூல் பட்டியல்
தொகு- Saryu Doshi (1989). Dances of Manipur: The Classical Tradition. Marg Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85026-09-1.
- Manipuri by R K Singhajit Singh, Dances of India series, Wisdom Tree, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-86685-15-4.
- Devi, Pukhrambam Lilabati (2014). Pedagogic Perspectives in Indian Classical Dance: The Manipuri and The Bharatanatyam. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9382395393.
- Ragini Devi (1990). Dance Dialects of India. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0674-0.
- Natalia Lidova (2014). Natyashastra. Oxford University Press. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/obo/9780195399318-0071.
- Natalia Lidova (1994). Drama and Ritual of Early Hinduism. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1234-5.
- Williams, Drid (2004). "In the Shadow of Hollywood Orientalism: Authentic East Indian Dancing". Visual Anthropology (Routledge) 17 (1): 69–98. doi:10.1080/08949460490274013. http://jashm.press.illinois.edu/12.3/12-3IntheShadow_Williams78-99.pdf. பார்த்த நாள்: 2021-06-01.
- Tarla Mehta (1995). Sanskrit Play Production in Ancient India. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1057-0.
- Reginald Massey (2004). India's Dances: Their History, Technique, and Repertoire. Abhinav Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-434-9.
- Emmie Te Nijenhuis (1974). Indian Music: History and Structure. BRILL Academic. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-03978-3.
- Kapila Vatsyayan (2001). Bharata, the Nāṭyaśāstra. Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1220-6.
- Kapila Vatsyayan (1977). Classical Indian dance in literature and the arts. Sangeet Natak Akademi. இணையக் கணினி நூலக மைய எண் 233639306., Table of Contents
- Kapila Vatsyayan (1974). Indian classical dance. Sangeet Natak Akademi. இணையக் கணினி நூலக மைய எண் 2238067.
- Kapila Vatsyayan (2008). Aesthetic theories and forms in Indian tradition. Munshiram Manoharlal. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8187586357. இணையக் கணினி நூலக மைய எண் 286469807.
- Kapila Vatsyayan. Dance In Indian Painting. Abhinav Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-153-9.
- Wallace Dace (1963). "The Concept of "Rasa" in Sanskrit Dramatic Theory". Educational Theatre Journal 15 (3): 249–254. doi:10.2307/3204783.
- Farley P. Richmond; Darius L. Swann; Phillip B. Zarrilli (1993). Indian Theatre: Traditions of Performance. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0981-9.