மணிப்பூர் விலங்கியல் பூங்கா

மணிப்பூர் விலங்கியல் பூங்கா (Manipur Zoological Garden)(வார்ப்புரு:Lang-mni) மணிப்பூரின் ஐரோசெம்பாவில் உள்ள ஒரு விலங்குக் காட்சிச்சாலை ஆகும்.[2] உலகின் முதல் மிதக்கும் தேசியப் பூங்காவான கெய்புல் லாம்சோ தேசியப் பூங்காவிற்குப் பிறகு, உலகின் இரண்டாவது நடனமாடும் மான் சிற்றினமான சங்காய் மான் (செர்வசு எல்தி எல்தி)[2] வாழக்கூடிய இடம் இதுவாகும்[3] இது ஒரு நடுத்தர அளவிலான விலங்கியல் பூங்கா. இது அட்டவணை 1-ல் உள்ள நீர்நில வாழ்வன, பறவைகள், பாலூட்டிகள் மற்றும் ஊர்வன ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இம்மிருகக்காட்சிசாலையில் வளர்க்கப்படும் விலங்குகள் பெரும்பாலும் மணிப்பூரைச் சார்ந்த அகணிய உயிரிகள் ஆகும். இந்தியாவின் மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், சங்காய் மற்றும் பாதுகாப்பு இனப்பெருக்க மையத்திற்கான ஒருங்கிணைந்த உயிரியல் பூங்காவாக அங்கீகரித்தது (Meitei சபெங்).[2]

மணிப்பூர் விலங்கியல் பூங்கா
இரண்டு சங்காய் மான்கள் மணிப்பூர் விலங்கியல் பூங்காவில், இம்பால், மணிப்பூர்
Map
திறக்கப்பட்ட தேதி2 அக்டோபர் 1976
அமைவிடம்இராய்செம்பா, மேற்கு இம்பால் மாவட்டம்
நிலப்பரப்பளவு68 ஹெக்டேர்[1]
உயிரினங்களின் எண்ணிக்கை400

கோடைக் காலத்தில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மிருகக்காட்சிசாலையை பார்வையிடச் சிறந்த நேரம் ஆகும். குளிர்காலத்தில் சிறந்த நேரம், அக்டோபர் முதல் மார்ச் வரை ஆகும். திங்கட்கிழமை விடுமுறை தினமாகும்.[4]

வரலாறு தொகு

 
இந்தியாவின் முத்திரையில் சங்காய் மான் படம்

மணிப்பூர் விலங்கியல் பூங்கா, அக்டோபர் 1976-ல் நிறுவப்பட்டது.[1]

அமைவிடம் தொகு

மணிப்பூர் விலங்கியல் பூங்கா இரோயிசெம்பா நகரில் இம்பால்-காங்சுப் சாலையில் அமைந்துள்ளது. இது இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ளது. இது இம்பாலிலிருந்து 5-6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1][2][5]

அம்சங்கள் தொகு

 
மணிப்பூர் விலங்கியல் பூங்காவில் ஒரு சங்காய் மான்

இந்த மிருகக்காட்சிசாலையின் சிறப்பாக இதன் பார்வையாளர்களுக்கு அழகான சங்காய் மான் ஆகும். புருவம் கொம்புகள் கொண்ட மான் ஆகியவற்றைக் காணும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த மான் உலகின் மிக அரிதான மற்றும் மிகவும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாகும்.[1][2] இந்த மிருகக்காட்சிசாலையானது லம்பேல்பட்டின் மேற்கு மூலையில் பைன் மர மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.[1][5]

பாதுகாப்பு தொகு

 
மணிப்பூர் விலங்கியல் பூங்காவில் ஒரு பச்சை மயில் (பாவோ மியூட்டிகசு).

இங்கு 45 அழிந்து வரும் பாலூட்டிகள், ஊர்வன மற்றும் பறவைகள் அகச்சூழலில் பாதுகாக்கப்படும் மையமாகும். அட்டவணை 1-ல் உள்ள பாலூட்டிகள், ஊர்வன, பறவைகள் மற்றும் நீர்நில வாழ்வன இம்மிருகக்காட்சிசாலையில் வைக்கப்பட்டுள்ளன. மணிப்பூரைச் சேர்ந்த விலங்குகள் இந்த உயிரியல் பூங்காவில் வளர்க்கப்படுகின்றன. சங்காய் மற்றும் மலையாடு பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க ஒருங்கிணைப்பு மைய உயிரியல் பூங்காவாக இந்திய மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தால். இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[2]

மேலும் பார்க்கவும் தொகு

 • இம்பால் அமைதி அருங்காட்சியகம்
 • ஐஎன்ஏ போர் அருங்காட்சியகம்
 • காச்சிங் தோட்டம்
 • கெய்புல் லாம்ஜாவோ தேசிய பூங்கா - இந்தியாவின் மணிப்பூரில் உள்ள உலகின் ஒரே மிதக்கும் தேசிய பூங்கா
 • கொங்கம்பாட் ஆர்கிடேரியம்
 • லோக்டக் நாட்டுப்புற அருங்காட்சியகம்
 • மணிப்பூர் மாநில அருங்காட்சியகம்
 • பும்டி - இந்தியாவின் மணிப்பூரில் மிதக்கும் உயிர்மக்கள்
 • சேக்தா தொல்பொருள் வாழும் அருங்காட்சியகம்
 • யாங்கூபோக்பி-லோக்சாவ் வனவிலங்கு சரணாலயம்

மேற்கோள்கள் தொகு

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 Encyclopaedia Of Manipur (3 Vol.) (in ஆங்கிலம்). 2011. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7835-864-2.
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Singh, Arambam Sanatomba (2021-06-18). Ecotourism Development Ventures in Manipur: Green Skill Development and Livelihood Mission (in ஆங்கிலம்). Walnut Publication. p. 112. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-91145-59-0.
 3. "The world's only floating national park". www.bbc.com.
 4. Singh, Arambam Sanatomba (2021-06-18). Ecotourism Development Ventures in Manipur: Green Skill Development and Livelihood Mission (in ஆங்கிலம்). Walnut Publication. p. 113. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-91145-59-0.
 5. 5.0 5.1 Ghosh, Joydeep (2019-02-28). General Knowledge of Northeast India: For All Psc and Competitive Exams (in ஆங்கிலம்). Educreation Publishing.