மணிமல
மணிமல ( Manimala ) என்பது இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள கோட்டயம் மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய நகரம் அல்லது ஒரு கிராமமாகும். இது அருகிலுள்ள நகரமான கஞ்சிரப்பள்ளியிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் (7.5 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. நாட்டுப்புறக் கதைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்திய அரசால்2011ஆம் ஆண்டு முதல் நாட்டுப்புற கிராமமாக அறிவிக்கப்பட்டது.
மணிமல | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°29′00″N 76°45′00″E / 9.483333°N 76.75°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | கோட்டயம் |
பெயர்ச்சூட்டு | மணிமல ஆறு |
அரசு | |
• வகை | ஊராட்சி |
• நிர்வாகம் | மணிமல கிராம ஊராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 37.53 km2 (14.49 sq mi) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 21,504 |
• அடர்த்தி | 525/km2 (1,360/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 686543 |
தொலைபேசி இணைப்பு எண் | 04828 |
வாகனப் பதிவு | கேஎல்-33 கேஎல்-34 |
இணையதளம் | [2] |
நிலவியல்
தொகு90 கிலோமீட்டர் (56 மைல்) நீளமுள்ள மணிமல ஆறு இங்கு பாய்கிறது.[1]குரங்கன்மலை, வருகுன்னு மற்றும் பூவத்தோளிமலை போன்ற மலைகள் மிக முக்கியமான மலைகள் இங்கு அமைந்துள்ளது. பத்தனம்திட்டா மாவட்டத்திலிருந்து பொந்தன்புழா வனப்பகுதி கிராமத்தை இக்கிராமம் பிரிக்கிறது.
காலநிலை
தொகுமணிமல, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் போதுமான மழைப்பொழிவுடன் வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது.[2] இங்கு ஆண்டு சராசரி மழைப்பொழிவு 2820 மிமீ ஆகும். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஈரப்பதம் அதிகரிக்கும். சராசரி ஆண்டு வெப்பநிலை 31.14°C. ஆண்டின் இறுதியில் வெப்பநிலை குறைகிறது.
இந்த ஊரில் கிறிஸ்தவர்கள், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் போன்ற பல்வேறு மத சமூகங்களை உள்ளடக்கி, இணக்கமாகவும் அமைதியாகவும் வாழ்கின்றனர்.
மக்கள்தொகையியல்
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மணிமலையின் மக்கள் தொகை 21053 என்ற எண்னிக்கையில் இருக்கிறது. இதில் 10213 ஆண்களும் மற்றும் 10840 பெண்களும் என இருக்கின்றனர்.[3] பெரும்பான்மையானவர்கள் இயற்கை மீள்மத் தோட்ட உரிமையாளர்களாக உள்ளனர். அவர்களின் முக்கிய வருமானம் இந்தத் தோட்டங்களிலிருந்து வருகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Manimala". www.kerenvis.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2019-01-08.
- ↑ "CLIMATE: MANIMALA", Climate-Data.org. Web: [1].
- ↑ "Manimala Village Population - Kanjirappally - Kottayam, Kerala". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2016-12-02.