மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில்
ஏரிகாத்த ராமர் கோயில் (Eri-Katha Ramar Temple), சென்னை – திண்டிவனம் நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம் பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. ராமபிரான் சீதையை மீட்க இலங்கை செல்லும் போது விபண்டக முனிவரின் ஆசிரமத்தில் சில நாட்கள் தங்கியிருந்தார். முனிவரின் வேண்டுதல்படி, அயோத்தி திரும்பும்போது சீதையுடன் கல்யாண கோலத்தில் காட்சி தந்தார். விபண்டக முனிவர் கோயில் கருவறையிலேயே உள்ளார். சுவாமி சன்னதிக்கு வலப்புறம் ஜனகவல்லித் தாயார் சன்னதி உள்ளது. திருமழிசை ஆழ்வார் மற்றும் இராமானுஜர் இக்கோயில் தலத்திற்கு தொடர்புடையவர்கள்.[1]
ஏரி காத்த ராமர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 12°29′11″N 79°53′28″E / 12.48639°N 79.89111°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | செங்கல்பட்டு மாவட்டம் |
அமைவு: | மதுராந்தகம் |
கோயில் தகவல்கள் | |
வரலாறு | |
அமைத்தவர்: | பல்லவர்கள், சோழர்கள் |
பெயர்க் காரணம்
தொகுபிரித்தானிய இந்தியப் பேரரசு காலத்தில், மதுராந்தகம் பகுதியில் அடை மழை பெய்து வெள்ளம் சூழ்ந்தது. மதுராந்தகம் ஏரி உடைந்து விடும் சூழ்நிலை வந்தது. மக்கள் அங்குள்ள கோயிலில் குடிகொண்ட கோதண்டராமரிடம் வேண்ட, மதுராந்தகம் ஏரி மழை வெள்ளத்திலிருந்து காக்கப்பட்டதாகவும் அது முதல் அக்கோயிலுக்கு ஏரி காத்த ராமர் கோயில் என்று பெயராயிற்று என்பது மரபு வரலாறு.