மதுரா பேடா
மாற்றுப் பெயர்கள்மதுரா கா பேடா & பேரா
பரிமாறப்படும் வெப்பநிலைஇனிப்பு, பிரசாதம்
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிமதுரா, உத்தரப்பிரதேசம்
முக்கிய சேர்பொருட்கள்கோயா, சர்க்கரை, பால்

மதுரா பேடா (Mathura peda) என்பது இந்தியாவின் மதுராவில் உருவான ஒரு வட இந்திய இனிப்பு உணவாகும். வட இந்தியாவில் மாவாவிலிருந்து (கோயா) தயாரிக்கப்படும் இனிப்புகள் மிகவும் பிரபலமானவை. பேடா, மாவா இனிப்பு வகையாகும். மதுரா பேடா இந்தியாவில் மிகவும் பிரபலமானது. மதுரா கா பேடா அல்லது சத்தீஸ்கர் கா கேதா என்பது பழமொழியில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இதன் பொருள் "(பிரபலமானது) மதுராவின் பேடா இனிப்பு மற்றும் சத்தீஸ்கரின் இனிப்பாகும்." மதுரா பேடா இனிப்பு பெயராகவும் செயல்படுகிறது. மதுராவிற்கு வருகை தரும் சுற்றுலாவாசிகளை, மதுரா கே பேடே, மேவா வாட்டி பேடா மற்றும் ஏற்றுமதி தரச் சிறப்புப் பேடா ஈர்க்கின்றன. [1]

கிருஷ்ணர் பிறப்பு விருந்து தொகு

கிருஷ்ணரின் பிறந்த இடமான மதுராவில், மதுரா பேடா கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான பிரசாதமாகப் பயன்படுத்தப்படுகிறது.[2] இவை புதிய மாவா, பால், சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து ஏலக்காய்த் தூளுடன் சமைப்பதால் கூடுதல் சுவை பெறுகின்றது. இந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி திருவிழா பேடா இல்லாமல் முழுமையடையாது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் கிருஷ்ணருக்கு அர்ச்சனை செய்து நோன்பு திறக்க பேடா தயாராகிறது

உலகளாவிய புகழ் தொகு

மதுராவிற்கு வெளியே உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களிலும், மதுரா பேடே மற்ற இந்திய இனிப்புகளான மனேர் கே லட்டு மற்றும் ஆக்ரா கா பேடா போன்றவற்றுடன் பிரபலமான இனிப்பாகும்.[3]

நாட்டுப்புறச் சுவை தொகு

மதுரா டேயின் சுவை இந்திய நாட்டுப்புறக் கதைகளிலும் காணப்படுகிறது. "மதுர கே பேடே மோஹே லவே, கிலாவே ஜி....." (எனக்கு மதுரா கா பேடாவைச் சாப்பிடத் தருகிறார்) என்பது இந்தியாவில் உள்ள மணல் பூசை (வழிபாட்டு) பாடல்களில் பிரபலமான பாடல். [4][5]

புவி-சிறப்பு பிரசாதமாக தொகு

குருசேத்திரத்தின் 48 கோசு பரிக்கிரமாவில் உள்ள குருச்சேத்ர பிரசாதம் (சன்ன லட்டு) போலவே, பிரஜ் பரிக்கிரமாவில் உள்ள மதுரா பேடா புவிசார் சிறப்புப் பிரசாதமாகும்.[6]

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Kavita Kanan Chandra (11 March 2015). "Love and Lord Krishna". Kavita Kanan Chandra. India Currents. Archived from the original on 31 ஜனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 24 January 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Mattoo, Seema (4 September 2015). "What each region prepares for Krishna on his birthday". Times of India. http://timesofindia.indiatimes.com/life-style/food/food-features/What-each-region-prepares-for-Krishna-on-his-birthday/articleshow/48806836.cms. பார்த்த நாள்: 24 January 2016. 
  3. Saransh Goela. India on my Platter. https://books.google.com/books?id=hdoyCwAAQBAJ&pg=PT219&dq=mathura+ke+pede&hl=en&sa=X&ved=0ahUKEwiyvN2O68LKAhXIco4KHeWcA4YQuwUIHjAA#v=onepage&q=mathura%20ke%20pede&f=false. 
  4. Folk-lore, Volume 13. https://books.google.com/books?id=XG0LAAAAIAAJ&q=variety+mathura+ke+pede&dq=variety+mathura+ke+pede&hl=en&sa=X&redir_esc=y. 
  5. Satya Prakash Arya. A Sociological Study of Folklore: Projected Research in Kuru Region (Saharanpur, Muzaffarnagar, Meerut, Bulandshahar, and Bijnor Districts of Western Uttar Pradesh). https://books.google.com/books?id=X8bYAAAAMAAJ&q=variety+mathura+ke+pede&dq=variety+mathura+ke+pede&hl=en&sa=X&redir_esc=y. 
  6. [https://www.tribuneindia.com/news/haryana/chana-laddoo-to-be-kurukshetra-prasadam-49618 Chana laddoo to be ‘Kurukshetra prasadam’, The Tribune, 1 March 2020.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரா_பேடா&oldid=3530219" இலிருந்து மீள்விக்கப்பட்டது