மத்தூர் வடை
மத்தூர் வடை (Maddur vada) என்றும் மத்தூர் வடே அழைக்கப்படுவது (கன்னடம்: ಮದ್ದೂರು ವಡೆ (உச்சரிப்பு இது "ma-ddur vah-DAA", "மா-ddur vah-டே") தென்னிந்தியத் தின்பண்ட வகைகளுள் ஒன்றாகும். உலக புகழ்பெற்ற இந்த சிற்றுண்டி தென்னிந்தியா மாநிலமான கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் உள்ள மத்தூர் நகரத்திலிருந்து பெயர் பெற்றது. மத்தூர் பெங்களூரு மற்றும் மைசூர் நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த இரண்டு நகரங்களையும் கடந்து செல்லும் தொடருந்துகளில் விற்கப்படும் மத்தூர் வடையினை நாம் சுவைக்கலாம். இது அரிசி மாவு, ரவை மற்றும் மைதா மாவு ஆகியவற்றை அடிப்படையாகவும், நறுக்கப்பட்ட வெங்காயம், கறிவேப்பிலை, அரைத்த தேங்காய் மற்றும் பெருங்காயம் கலந்து தயாரிக்கப்படுகிறது. வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையினை சிறிது அளவு எண்ணெய்யில் பொரித்த பின் தண்ணீரில் கலந்து மென்மையான மாவைத் தயாரிக்க வேண்டும். ஒரு சிறிய அளவு மாவை எடுத்துத் தட்டி தங்க-பழுப்பு நிறமாக மாறும் வரை எண்ணெய்யில் வறுத்தெடுக்கப்படவேண்டும்.[1]
மேலும் காண்க
தொகு- கர்நாடகா உணவு
மேற்கோள்கள்
தொகு- ↑ "Memories are made of Maddur vada". www.thehindu.com. http://www.thehindu.com/life-and-style/food/memories-are-made-of-maddur-vada/article17751361.ece. பார்த்த நாள்: 25 June 2017.
2. https://m.timesofindia.com/city/bengaluru/This-vade-makes-Maddur-special/articleshow/14739302.cms