மந்தமர்ரி
மந்தமர்ரி (Mandamarri), தென்னிந்தியாவில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள மஞ்செரியல் மாவட்டத்தில் உள்ள நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். இது மாவட்டத் தலைமையிடமான மஞ்செரியல் நகரத்திற்கு வடக்கே 16 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான ஐதராபாத்திற்கு வடகிழக்கே 255 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மந்தமர்ரி | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 18°58′56″N 79°28′52″E / 18.98222°N 79.48111°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | மஞ்செரியல் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | மந்தமர்ரி நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 38.84 km2 (15.00 sq mi) |
ஏற்றம் | 188 m (617 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 52,352 |
• அடர்த்தி | 1,300/km2 (3,500/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 504231 |
தொலைபேசி குறியீடு | (STD) 08736 |
வாகனப் பதிவு | TS 19 |
இணையதளம் | telangana |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 25 வார்டுகளும், 12,864 வீடுகளும் கொண்ட மந்தமர்ரி நகரத்தின் மக்கள் தொகை 52,352 ஆகும். அதில் ஆண்கள் 26,808 மற்றும் பெண்கள் 25,544 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 953 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 7.52% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 73.40% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 92.30%, இசுலாமியர் 5.51%, கிறித்தவர்கள் 1.21% மற்றும் பிறர் 0.98% ஆகவுள்ளனர்.[2]
கனிம வளம்
தொகுமந்தமர்ரியைச் சுற்றிலும் திறந்தவெளி நிலக்கரி சுரங்கங்கள் உள்ளது.
போக்குவரத்து
தொகுமந்தமர்ரி தொடருந்து நிலையம்[3]செகந்திராபாத், நாக்பூர், விஜயவாடா போன்ற நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Urban Local Body Information" (PDF). Directorate of Town and Country Planning. Government of Telangana. Archived from the original (PDF) on 15 June 2016. பார்க்கப்பட்ட நாள் 28 June 2016.
- ↑ Mandamarri Population Census 2011
- ↑ Mandamari (MMZ) Railway Station