மனித தலை

மனித உடலின் மேல்பகுதி

மனிதத் தலை(Human head) மனித உடலின் உச்சியில் அமைந்துள்ளது. மனித உடற்கூறு அமைப்பில் இது உடலின் மேற்பகுதியாக அமைந்து மனித முகத்தைத் தாங்குகிறது. மூளையை உள்ளடக்கியுள்ள மனித தலை மண்டை ஓட்டால் பராமரிக்கப்படுகிறது.

மனித தலை
Human head
லியானார்டோ டாவின்சி வரைந்த மனித தலை
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்கேபுட்டு
MeSHD006257
TA98A01.1.00.001
TA298
FMA7154
உடற்கூற்றியல்

கட்டமைப்பு தொகு

 
மனித தலையின் உடற்கூறியல்

மனித தலை எலும்பு மண்டை ஓட்டைச் சுற்றியுள்ள சதைப்பற்றுள்ள வெளிப்புறப் பகுதியைக் கொண்டுள்ளது. மூளை மண்டை ஓட்டுக்குள் அடைக்கப்பட்டுள்ளது. மனித தலையில் 22 எலும்புகள் உள்ளன. தலை கழுத்தில் உட்கார்ந்துள்ளது, ஏழு கழுத்துசார் முதுகெலும்புகள் இதை ஆதரிக்கின்றன. மனித தலை பொதுவாக 5.1 முதல் 11 பவுண்டு அல்லது 2.3 முதல் 5 கிலோகிராம் எடை கொண்டதாக உள்ளது. 95% சதவீதத்திற்கும் அதிகமான மனிதர்கள் இந்த அளவு கொண்ட வரம்பில் பொருந்துகிறார்கள். மனிதர்களுக்கு அசாதாரணமாக சிறிய அல்லது பெரிய தலைகள் இருக்கும் அபூர்வமான நிகழ்வுகளும் உள்ளன. 2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் வளர்ச்சியடையாத தலைகளுக்கு சிகா வைரசு ஒரு காரணமாக இருந்தது.

முகம் என்பது தலையின் முன்புற பகுதியாக கருதப்படுகிறது. கண்கள், மூக்கு மற்றும் வாய் ஆகியவை முகங்களில் அமைந்துள்ளன. வாயின் இருபுறமும், கன்னங்கள் வாய்வழி குழிக்கு சதைப்பற்றுள்ள எல்லையை வழங்குகின்றன. காதுகள் தலையின் இருபுறமும் அமர்ந்திருக்கும்.

இரத்த வழங்கல் தொகு

உள் மற்றும் வெளிப்புற தலைசார் தமனிகள் மூலம் தலை இரத்த விநியோகத்தைப் பெறுகிறது. இவை மண்டை ஓட்டுக்கு வெளியே ( வெளிப்புற தலைசார் தமனி ) மற்றும் மண்டை ஓட்டிற்கு உள்ளே ( உள் தலைசார் தமனி ) என்ற பகுதியை வழங்குகின்றன. மண்டை ஓட்டின் உள்ளே உள்ள பகுதி முதுகெலும்பு தமனிகளிலிருந்து இரத்த விநியோகத்தைப் பெறுகிறது. இது கழுத்துசார் முள்ளெலும்புகள் வழியாக மேல்நோக்கி செல்கிறது.

நரம்பு வழங்கல் தொகு

 
ததலையின் உணர்ச்சிப் பகுதிகள். ஐந்தாவது நரம்பின் மூன்று பிரிவுகளின் பொதுவான விநியோகம் காட்டப்பட்டுள்ளது. 1918 ஆம் ஆண்டின் கிரேசு உடற்கூறியலில்  இது கூறப்பட்டுள்ளது

பன்னிரெண்டு சோடி மண்டையோட்டு நரம்பான தலைக்குரிய நரம்புக் கட்டுப்பாட்டின் பெரும்பகுதியை வழங்குகின்றன. ஐந்தாவது மண்டையோட்டு நரம்புகள் முக்கோண நரம்பின் கிளைகளால் முகத்திற்கான உணர்தல் வழங்கப்படுகிறது. தலையின் மற்ற பகுதிகளுக்கு உணர்திறன் கழுத்து நரம்புகளால் வழங்கப்படுகிறது.

எந்தெந்த நரம்புகளால் தோலின் எந்த எந்த பகுதிகளுக்கு சேவை செய்யப்படுகிறது என்பதை பற்றி நவீன நூல்கள் உடன்படுகின்றன, ஆனால் சில விவரங்களில் சிறிய வேறுபாடுகள் உள்ளன. கிரேசு அனாடமியின் 1918 ஆம் ஆண்டு பதிப்பில் வரைபடங்களால் குறிக்கப்பட்ட எல்லைகள் இன்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டவைகளாகும் ஆனால் இவை ஒத்ததாக இல்லை.

தலையின் தோல்சார் கண்டுபிடிப்பு பின்வருமாறு:

  • கண் நரம்பு (பச்சை)
  • தாடை நரம்பு (இளஞ்சிவப்பு)
  • கீழ்த்தாடை நரம்பு (மஞ்சள்)
  • கழுத்தின் நரம்புப் பின்னல் (ஊதா)
  • கழுத்து நரம்பின் டார்சல் ராமி எனப்படும் முதுகெலும்பு நரம்பு (நீலம்) மற்றும் பிற, படம் மேல் நெடுவரிசையில் உள்ளவாறு பின்வருவனவற்றைக் காட்டுகிறது.

செயல்பாடு தொகு

தலையில் உணர்ச்சி உறுப்புகள் அமைந்துள்ளன: இரண்டு கண்கள், இரண்டு காதுகள், ஒரு மூக்கு மற்றும் வாயின் உள்ளே நாக்கு என்பவை உணர்ச்சி உறுப்புகளாகும். தலை மூளையையும் கொண்டுள்ளது. இந்த உறுப்புகள் ஒருங்கிணைந்து உணர்ச்சித் தகவலை மூளைக்கு அனுப்புவதன் மூலம் உடலின் செயலாக்க மையமாக செயல்படுகின்றன. இந்த மைய நரம்புத் தொகுதியைக் கொண்டிருப்பதன் மூலம் மனிதர்கள் தகவல்களை விரைவாகச் செயலாக்க முடிகிறது.

சமூகம் மற்றும் பண்பாடு தொகு

மனிதர்களைப் பொறுத்தவரை, தலையின் முன்புறம் (முகம்) வெவ்வேறு நபர்களுக்கு இடையே உள்ள முக்கிய அடையாளம் காணக்கூடிய தனித்துவமான ஓர் அம்சமாகும். ஏனெனில் கண் மற்றும் முடி நிறங்கள், மற்ற உணர்ச்சி உறுப்புகளின் வடிவங்கள் மற்றும் சுருக்கங்கள் போன்றவை இதற்கான காரணமாகும். முகத்தை அடையாளம் கண்டுகொள்வதில் மூளையின் முன்கணிப்பு காரணமாக மனிதர்கள் முகங்களை எளிதில் வேறுபடுத்துகிறார்கள். ஒப்பீட்டளவில் அறிமுகமில்லாத உயிரினங்களைக் கவனிக்கும்போது, எல்லா முகங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத் தெரிகிறது. மனிதக் குழந்தைகள் மானுடவியல் முக அம்சங்களில் நுட்பமான வேறுபாடுகளை அடையாளம் காண உயிரியல் ரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளனர்.[1]

 
போர்னியோ தீவின் பழங்குடி மக்களான தயாக்கு மக்கள் தலைகொய்தல் நடவடிக்கைகளுக்கு அஞ்சுகிறார்கள்

சராசரிக்கும் அதிகமான புத்திசாலித்தனம் உள்ளவர்கள் சில சமயங்களில் கேலிச்சித்திரப் படங்களில் பெரிய தலைகள் கொண்டவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். கூடுதலாக, அறிவியல் புனைகதைகளில், பெரிய தலை கொண்ட வேற்று கிரகவாசிகள் பெரும்பாலும் உயர் புத்திசாலித்தனத்தின் அடையாளமாக கருதப்படுகிறார்கள். சித்தரிப்பு இவ்வாறாக இருந்தபோதிலும், நரம்புமண்டலவுயிரியியலின் முன்னேற்றங்கள், மூளையின் செயல்பாட்டு பன்முகத்தன்மையின் அர்த்தத்தை கொடுக்கிறது. ஒட்டுமொத்த மூளையின் அளவு சிறிதளவே வித்தியாசமானது. இரண்டு மனிதர்களுக்கிடையே உள்ள ஒட்டுமொத்த நுண்ணறிவு வேறுபாடுகளுடன் சிறிது முதல் மிதமான தொடர்பு உள்ளது என்பதாகவும் புரிந்து கொள்ளப்படுகிறது.

மனித மொழியில் பல உருவகங்களுக்கும் ஆகுபெயர்களுக்கும் மனித தலை ஓர் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இடம் சார்ந்தும், முக்கியத்துவம் சார்ந்தும், குணநலன்கள் சார்ந்தும் இந்த உருவகங்களும் ஆகுபெயர்களும் பயன்படுத்தப்படுகின்றன. படுக்கையின் தலைப்பகுதி, மேசையின் தலை, வகுப்பறையின் தலை மாணவன், நிறுவனத்தில் நிறைய நல்ல தலைவர்கள் உள்ளனர் போன்றவற்றை சில உதாரணங்களாகக் கூறலாம். இடம் சார்ந்தும், முக்கியத்துவம் சார்ந்தும், குணநலன்கள் சார்ந்தும் இந்த உருவகங்களும் ஆகுபெயர்களும் பயன்படுத்தப்படுகின்றன.[2]

பண்டைய கிரேக்கர்கள் தங்க விகிதத்தின் அடிப்படையில் பாலியல் கவர்ச்சியை மதிப்பிடுவதற்கான ஒரு முறையைக் கொண்டிருந்தனர், அதில் ஒரு பகுதி தலையின் அளவீடுகளும் அடங்கும்.[3]

தலை கொய்தல் என்பது ஒரு நபரைக் கொன்ற பிறகு அவரது தலையை எடுத்துப் பாதுகாக்கும் செயல்முறையாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஓசியானியா முழுவதும் இது நடைமுறையில் உள்ளது.[4]

தலை கவசம் தொகு

 
வைக்கோல் தொப்பியுடன் ஒரு மனிதன்

நிலை, தோற்றம், மத/ஆன்மீக நம்பிக்கைகள், சமூகக் குழு, குழு இணைப்பு, தொழில் அல்லது ஒய்யாரத் தேர்வுகளை தலைக் கவசம் குறிக்கலாம்.

பல கலாச்சாரங்களில், தலையை மூடிக்கொள்வது மரியாதைக்குரிய அடையாளமாக கருதப்படுகிறது. பெரும்பாலும், புனித தலங்கள் அல்லது பிரார்த்தனை தலங்களுக்குள் நுழையும் போது சிறிதளவு அல்லது முழு தலையையும் மூடி மறைத்துக் கொள்வதும் பின்பற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவில் உள்ள பெண்கள் அடக்கத்தின் அடையாளமாக தலை முடியை மூடிக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய போக்கு 20 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் கடுமையாக மாறியுள்ளது, என்றாலும் உலகின் பிற பகுதிகளில் இன்னும் தொடர்ந்து காணப்படுகிறது. கூடுதலாக, பல மதங்கள் ஆண்கள் குறிப்பிட்ட ஒரு வகை தலை ஆடையை அணிய வேண்டும் என்கின்றன. இசுலாமிய தகியா (தொப்பி), யூத யர்முல்கே அல்லது சீக்கிய தலைப்பாகை போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். இசுலாமியப் பெண்களும் கிறித்துவ கன்னியாசுதிரிகளும் இதே போன்ற பழக்கத்தை கடைபிடிக்கிறார்கள்.

தொப்பி என்பது பல்வேறு நோக்கங்களுக்காக உதவும் ஒரு தலையை மூடும் ஆடையாகும். தொப்பிகளை சீருடையின் ஒரு பகுதியாக அணியலாம் அல்லது கடினமான தொப்பியாக தலையின் பாதுகாப்புக்கான தலை கவசமாகவும் அணியலாம். குளிரை தடுக்கும் ஆடையாகவும் , ஒய்யாரத்திற்கான ஓர் அழகு சாதனப் பொருளாகவும் கூட பயன்படுத்துகிறார்கள். தொப்பிகள் உலகின் சில பகுதிகளில் சமூக தகுதியாகவும் கருதப்படுகிறது. .

மனிதரளவையியல் தொகு

கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் தலையின் அளவை விவரிக்கும் பல விளக்கப்படங்கள் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் 21 வயதைக் கடந்த நிலையிலும் சராசரி தலை சுற்றளவை அளவிடுவதில்லை. வயது வந்தோருக்கான தலை சுற்றளவுக்கான குறிப்பு விளக்கப்படங்கள் பொதுவாக ஒரே மாதிரியான மாதிரிகளையே கொண்டுள்ளன. உயரம் மற்றும் எடையை கணக்கில் எடுத்துக்கொள்ள அவை தவறிவிட்டன. [5]

நியூகேசுட்டில் பல்கலைக்கழகத்தின் பிரித்தானிய ஆய்வில் தலையின் சுற்றளவு ஆண்களுக்கு சராசரியாக 57.2 செமீ என்றும் பெண்களுக்கு 55.2 செமீ என்றும் குறிப்பிட்டு உயரத்தின் விகிதாச்சாரத்தில் இது மாறுபடும் என்றும் மனித தலையின் சராசரி அளவைக் காட்டியது.[6]

கௌடன் நோய்க்குறியை ஏற்படுத்தும் மரபணு மாற்றத்தைக் கொண்டுள்ள நபர்களுக்கு பெருந்தலை இருப்பது சில வகையான புற்றுநோய்க்கான அதிக ஆபத்தின் குறிகாட்டியாக இருக்கலாம். பெரியவர்களின் பெருந்தலை என்பது ஆண்களில் 58 சென்டிமீட்டருக்கும் அதிகமான அளவு என்றும் பெண்களில் 57 சென்டிமீட்டருக்கும் அதிகமான தலை அளவு என்பதையும் குறிக்கிறது.[7][8]

இதையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

மேலும் வாசிக்க தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மனித தலைகள்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • Campbell, Bernard Grant. Human Evolution: An Introduction to Man's Adaptations, 4th edition (ISBN 0-202-02042-8).
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனித_தலை&oldid=3599096" இலிருந்து மீள்விக்கப்பட்டது