மனுக்கா நீள்வட்ட அரங்கம்

மனுக்கா ஓவல் அல்லது மனுக்கா நீள்வட்ட அரங்கம் (Manuka Oval) ஆத்திரேலியத் தலைநகர் கான்பராவின் வணிக மாவட்டமான மனுக்காவை அடுத்த கிரிஃபித் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள துடுப்பாட்ட அரங்கமாகும். ஆத்திரேலியக் காற்பந்தாடப் போட்டிகளின்போது புரவலர் காரணங்களுக்காக இசுடார்டிராக் ஓவல் கான்பரா என அழைக்கப்படுகின்றது.[1] இந்த அரங்கத்தின் கொள்ளளவு 13,550 பேர் ஆகும்;[2] இருப்பினும் சில நேரங்களில் இதைவிடக் கூடுதலானவர்கள் காணலாம்.[3][4]

மனுக்கா ஓவல்

மென்சீசு, பிராட்மன், ஹாக் அமர்மேடைகள் (இடதிலிருந்து வலதாக)
இடம் கிரிஃபித், ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம்
அமைவு 35°19′5″S 149°08′5″E / 35.31806°S 149.13472°E / -35.31806; 149.13472
எழும்பச்செயல் ஆரம்பம் 1926
எழும்புச்செயல் முடிவு 1929
திறவு 1929 (சூழப்பட்டது)
உரிமையாளர் ஆத்திரேலியத் தலைநகர ஆட்புல அரசு
ஆளுனர் டெர்ரிடரி வெனியூசு அண்டு இவென்ட்சு
தரை புற்றரை
முன்னாள் பெயர்(கள்) மனுக்கா வட்டப் பூங்கா (சூழப்படுவதற்கு முன்பாக)
குத்தகை அணி(கள்) கிரேட்டர் வெஸ்டர்ன் சிட்னி ஜெயன்ட்ஸ், (ஆத்திரேலிய காற்பந்து கூட்டிணைவு)
கான்பரா காமெட்சு, (ஃபியூட்ச்சர்சு லீக்)
ஈஸ்ட்லேக் டெமன்சு, (வடகிழக்கு ஆத்திரேலிய காற்பந்துக் கூட்டிணைவு)
ஆ.த.ஆ மெடியர்சு, (மகளிர் தேசிய துடுப்பாட்டக் கூட்டிணைவு)
அமரக்கூடிய பேர் 13,550
பரப்பளவு 179 x 150 மீ

இந்த அரங்கத்தில் கோடைக்காலத்தில் துடுப்பாட்ட விளையாட்டுக்களும் குளிர்காலத்தில் ஆத்திரேலிய காற்பந்தாட்ட போட்டிகளும் ஆடப்படுகின்றன.

சிறப்புக்கூறுகள்

தொகு

அரங்கப் பொறுப்பாளரின் இரண்டு மாடிக் குடியிருப்பு திடலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 1930 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. நீள்வட்ட அரங்கைச்சுற்றிலும் சைப்பிரசு, பாப்புலசு, கருவாலி, எல்ம் மரங்கள் 1920 ஆம் ஆண்டுகளில் நடப்பட்டன.[5] இங்குள்ள புள்ளிப்பலகை, 1901 காலத்து ஜாக் பிங்கிள்டன் புள்ளிப்பலகை, மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கத்திலிருந்து இங்கு கொணரப்பட்டது; அங்கு 1980களில் புதிய இலத்திரனியல் புள்ளிப்பலகை நிறுவப்பட்டப்போது இவ்வாறு மாற்றப்பட்டது. இந்தப் பலகை மனுக்காவில் நிறுவப்பட்ட சமயத்தில் மரணமடைந்த ஆத்திரேலிய துவக்க ஆட்டக்காரரும் அரசியல் விமரிசகரும் எழுத்தாளருமான ஜாக் பிங்கிள்டன் நினைவாக அவ்வரது பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.[3][6]

 
அரங்கப் பொறுப்பாளரின் இல்லம் பின்னணியில் வலதுபுறத்தில் உள்ளது.

மேற்சான்றுகள்

தொகு
  1. "StarTrack secures naming rights of Manuka Oval". Prime Mover Magazine. 16 April 2013. Archived from the original on 26 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 28 April 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Manuka Oval - Overview". பார்க்கப்பட்ட நாள் 24 October 2010.
  3. 3.0 3.1 "Manuka Oval - History". Archived from the original on 17 பிப்ரவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 14 January 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Manuka Oval". Austadiums.com. பார்க்கப்பட்ட நாள் 14 January 2011.
  5. "Manuka Oval ACT". Screenmakers Pty Ltd. Archived from the original on 16 மார்ச் 2011. பார்க்கப்பட்ட நாள் 4 May 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. Growden, Greg (2008). Jack Fingleton : the man who stood up to Bradman. Crows Nest, New South Wales: Allen & Unwin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-74175-548-0.

வெளி இணைப்புகள்

தொகு