மனோஜ் யாதவா
மனோஜ் யாதவா (Manoj Yadava) என்பவர் இந்தியக் காவல்துறை அதிகாரி ஆவார். இவர் தற்போதைய அரியானா காவல்துறையின் தலைமை இயக்குநராக உள்ளார்.[1][2] இவர் முன்பு மத்திய உள்துறை அமைச்சகத்தில் உளவுத்துறையின் இணை இயக்குநராகப் பதவி வகித்துள்ளார்.[3]
மனோஜ் யாதவா | |
---|---|
அரியானா காவல் பணி | |
பேட்ஜ் எண் | 19881003 |
Allegiance | இந்தியக் காவல் பணி |
தரம் | காவல்துறையின் தலைமை இயக்குனர் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுயாதவா இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகார் நகரில் பிறந்தார்.[4]
இவரது மகன் ஆதித்யா விக்ரம் யாதவ், இந்திய ஆட்சிப் பணித் தேர்வில், (இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு 2018) 72வது தரம் பெற்று, தற்போது கோஹ்பூர் துணைப் பிரிவு அதிகாரியாக பணியாற்றுகிறார்.[5]
பணி
தொகுயாதவா 1988ல் இந்தியக் காவல் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அரியானாவின் பல மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர்.[4]
இவர் பிப்ரவரி 2003-ல் இந்திய உளவுத்துறையில் சேர்ந்தார்.[6]
பிப்ரவரி 18, 2019 அன்று இவர் அரியானாவின் காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார். 7 சனவரி 2021 அன்று அரியானா அரசு இவரது பதவிக்காலத்தை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்தது.[7]
இவருக்குப் பதிலாக 16 ஆகத்து 2021 அன்று 1988 பிரிவு இந்தியக் காவல் பணி அதிகாரியான பிரசாந்த குமார் அகர்வால் நியமிக்கப்பட்டார்.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Manoj Yadava takes over as new Haryana DGP". The Times of India (in ஆங்கிலம்). February 22, 2019. பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.
- ↑ "18 FIRs, 2 cancelled, 14 pending for investigation and 2 chargesheets filed: Haryana DGP to HC". The Indian Express (in ஆங்கிலம்). 2021-02-04. பார்க்கப்பட்ட நாள் 2021-02-06.
- ↑ "Haryana government names new DGP: '88-batch Manoj Yadava". The Indian Express (in ஆங்கிலம்). 2019-02-19. பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.
- ↑ 4.0 4.1 "Manoj Yadav, IPS officer, appointed as Haryana's DGP". News Nation English (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.
- ↑ "नियुक्तिः हरियाणा के नए डीजीपी बने मनोज यादव, आईबी के अतिरिक्त निदेशक के पद पर हैं तैनात". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-04-19.
- ↑ "Manoj Yadava is Haryana DGP". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.
- ↑ "Haryana govt extends tenure of DGP Manoj Yadava till further orders". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-01-07. பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.