மனோரமா சிங்
மனோரமா சிங் (Manorama Singh) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவரது கணவர் சந்திரசேகர் சிங் பீகார் முதல்வராகப் பதவி வகித்தவர் ஆவார். இவர் 1980களில் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினராகப் பீகாரில் உள்ள பங்கா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]
மனோரமா சிங் Manorama Singh | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1984–1985 | |
முன்னையவர் | சந்திரசேகர் சிங் |
பின்னவர் | சந்திரசேகர் சிங் |
தொகுதி | பாங்கா |
பதவியில் 1986–1989 | |
முன்னையவர் | சந்திரசேகர் சிங் |
பின்னவர் | பிரதாப் சிங் |
தொகுதி | பாங்கா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கல்யாண்பூர் கிராமம், முங்கேர் மாவட்டம், பீகார், இந்தியா | 4 மே 1938
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சந்திரசேகர் சிங் |
மூலம்: [1] |
மனோரமா சிங் 1984-ல் பாங்கா மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 1985-ல் இவரது கணவர் தில்லியில் அமைச்சரானபோது தனது பதவியிலிருந்து விலகினார். இவரது கணவர் 1986-ல் இறந்தார். இதனால் மீண்டும் ஒரு இடைத்தேர்தல் 1986-ல் நடத்தப்பட்டது. இவர் 1986ஆம் ஆண்டு நடைபெற்ற பாங்கா மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனதா கட்சியின் ஜார்ஜ் பெர்னாண்டஸை எதிர்த்து 186,237 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[5] ஆனால் 1989, 1991 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தோல்வியடைந்தார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lok Sabha Members Bioprofile". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
- ↑ "Bihar's biwi brigade". The Times of India. 6 October 2013. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
- ↑ Shiri Ram Bakshi; Sita Ram Sharma; S. Gajrani (1998). Contemporary Political Leadership in India: George Fernandes, Defence Minister of India. APH Publishing. pp. 101–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7024-999-3. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
- ↑ India Today. Living Media India Pvt. Limited. 1987. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
- ↑ "Details of Bye Elections from 1952 to 1995". ECI, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.
- ↑ "Banka Lok Sabha Election Result - Parliamentary Constituency".