மனோர், பால்கர் மாவட்டம்
மனோர் (Manor) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இது மும்பை-தில்லியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 79 மீது உள்ளது. மேலும் இது சூரியா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது மும்பைக்கு வடக்கே 88 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
மனோர் | |
---|---|
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் மனோரின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 19°45′N 72°55′E / 19.75°N 72.92°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | பால்கர் |
தோற்றுவித்தவர் | சூரியா ஆற்றின் கரையின் மர வணிகர்கள் |
ஏற்றம் | 20 m (70 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 10,421 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 401403 |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 2,206 வீடுகளைக் கொண்ட மனோர் ஊரின் மொத்த மக்கள் தொகை 10,421 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 5,322 மற்றும் 5,099 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 958 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 1367 - 13.12% ஆகும். சராசரி எழுத்தறிவு 85.70 % ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 63.78%, இசுலாமியர்கள் 31.32%, பௌத்தர்கள் 1.45%, சமணர்கள் 2.88% , கிறித்துவர்கள் 0.21% மற்றும் பிறர் 0.38% ஆக உள்ளனர்.[1]