மன்காபூர் (Mankapur) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கில் அமைந்த பூர்வாஞ்சல் பகுதியில் உள்ள கோண்டா மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். மன்காபூரில் மன்வார் ஆறு பாய்கிறது.

மன்காபூர்
மன்காபூர் is located in உத்தரப் பிரதேசம்
மன்காபூர்
மன்காபூர்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கோண்டா மாவட்டத்தில் மன்காபூரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°02′N 82°14′E / 27.03°N 82.23°E / 27.03; 82.23
நாடுஇந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்கோண்டா
ஏற்றம்
1,000 m (3,000 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்9,461
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி, உருது
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
271302,271308
தொலைபேசி குறியீடு05265
வாகனப் பதிவுUP-43

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 10 வார்டுகளும், 1490 குடும்பங்களும் கொண்ட மன்காபூர் பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை 9,461 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 4,977 மற்றும் 4,484 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 901 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 1165 (12%) ஆகும். இதன் சராசரி எழுத்தறிவு 84.6% ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 400 மற்றும் 0 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 79.25%, இசுலாமியர்கள் 19.54% மற்றும் பிறர் 0.49% ஆக உள்ளனர்.[1] இங்கு இந்தி, அவதி, உருது பேசுகின்றனர்.

போக்குவரத்து

தொகு

மன்காபூர் தொடருந்து சந்திப்பு நிலையம் 4 நடைமேடைகளைக் கொண்டது. இந்த சந்திப்பு நிலையத்தின் வழியாக அன்றாடம் 62 தொடருந்துகள் நின்று செல்கிறது. அதில் 43 விரைவு வண்டிகள், 4 பயணியர் வண்டிகள், 14 அதிவிரைவு வண்டிகள் மற்றும் 2 அந்த்யோதயா விரைவுவண்டிகளும் அடங்கும். கோண்டா, அயோத்தி, லக்னோ மற்றும் கோரக்பூர், தில்லி, பெங்களூரு, மும்பை, சாப்ரா நகரங்களை இருப்புப் பாதைகளுடன் இணைக்கிறது.[2]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்காபூர்&oldid=3440408" இலிருந்து மீள்விக்கப்பட்டது