மன்கியாலா தூபி
மன்கியாலா தூபி (Mankiala Stupa) (உருது: مانكياله اسٹوپ) பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில், இசுலாமாபாத் நகரத்திற்கு அருகே உள்ள மன்கியாலா எனும் கிராமத்தில் கிபி இரண்டாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட தூபியாகும்.
மன்கியாலா தூபி | |
---|---|
மன்கியாலா தூபி, பாகிஸ்தான் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | மன்கியாலா கிராமம், இசுலாமாபாத், பாகிஸ்தான் |
புவியியல் ஆள்கூறுகள் | 33°16′N 73°08′E / 33.26°N 73.14°E |
சமயம் | பௌத்தம் |
மாநிலம் | பஞ்சாப் |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | கிபி இரண்டாம் நூற்றாண்டு |
வரலாறு
தொகுபௌத்த ஜாதக கதைகளின் படி, கௌதம புத்தரின் ஒரு பிறப்பான இளவரசன் சத்துவன், மிகவும் பசியுடன் இருந்த ஏழு இளம் புலிகளுக்கு தன்னையே உணவாக அர்பணித்தமையைப் பாரட்டும் விதமாக இத்தூபி எழுப்பப்பட்டது. [1]
அமைவிடம்
தொகுபாகிஸ்தான் தலைநகரமான இசுலாமாபாத் நகரத்திற்கு தென்கிழக்கே 36 கிமீ தொலைவில் உள்ள மன்கியாலா எனும் கிராமத்தில் இத்தூபி உள்ளது.
தூபியின் காலம்
தொகுமன்கியாலா தூபி பேரரசர் கனிஷ்கர் ஆட்சியின் போது கிபி 128 -151க்கும் இடையே நிறுவப்பட்டதாகும்.[2] மௌரியப் பேரரசர் அசோகர் நிறுவிய 84 தூபிகளில் இதுவும் ஒன்று எனக் கூறுகின்றனர்.[2]
அகழாய்வு
தொகுஇத்தூபியை பிரித்தானியரான எல்பின்சுடோன் என்பவர், கிபி 1808 அகழாய்வின் போது கண்டுபிடித்தார். [2]1891ல் இத்தூபி மறுசீரமைக்கப்பட்டது.
தொல்பொருட்கள்
தொகுகிபி 1830ல் ஜீன் - பாப்டிஸ்ட் வென்சுரா என்பவர் இவ்விடத்தை மீண்டும் அகழாய்வு செய்த போது கிடைத்த தொல்பொருட்களை பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைகக்கப்பட்டுள்ளது.[3] 1891க்குப் பின்னர் மன்கியாலா தூபி மறுசீரமைக்கப்படவில்லை என்பதால் மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. [2]
படக்காட்சிகள்
தொகு-
1897ல் மன்கியாலா தூபி
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Bernstein, Richard (2001). Ultimate Journey: Retracing the Path of an Ancient Buddhist Monk who Crossed Asia in Search of Enlightenment. A.A. Knopf. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780375400094. பார்க்கப்பட்ட நாள் 16 June 2017.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "The forgotten Mankiala Stupa". Dawn. 26 October 2014. https://www.dawn.com/news/1140468. பார்த்த நாள்: 16 June 2017.
- ↑ The British Museum Collection