எல்பின்சுடோன்

எல்பின்சுடோன்(ஆங்கிலம்:Elphinstone, Mount stuart) (6 அக்டோபர் 1779 - 20 நவம்பர் 1859) எடின்பரோவில் கல்வி பயின்றார். 1795 இல் வங்காளச் சிவில் அதிகார வர்க்கத்தில் வேலையை எற்றுப் பிறகு, 1804 இல் நாகபுரியிலும், 1811 இல் பூனாவிலும் சுதானிகராகா நியமிக்கப் பட்டார். 1817 இல் பேசுவா ஆங்கிலேயரோடு போர் தொடங்கியபோது, கர்க்கீ(Kirkee) என்னும் இடத்தில், இவர் தலைமை ஏற்று, அப்போரை நடத்தி, வெற்றி பெற்றார். ஆங்கிலேயர் பேசுவாவை பதவியில் இருந்து விலக்கி, 'பேசுவா' ஆட்சி புரிந்த பகுதிகளைக் கைப்பற்றினர். பின்னர், எல்பின்சுடோன் ஆணையராக இருந்து, அப்பகுதிகளைச் செம்மையாக ஆண்டார்.

எல்பின்சுடோன்
மும்பையின் ஆளுநர்
பதவியில்
1 நவம்பர் 1819 – 1 நவம்பர் 1827
தலைமை ஆளுநர் Francis Rawdon-Hastings
William Amherst
முன்னவர் சர் இவான் நேப்பியன்
பின்வந்தவர் Sir John Malcolm
தனிநபர் தகவல்
பிறப்பு 6 அக்டோபர் 1779
Dumbarton, Dumbartonshire, இசுக்கொட்லாந்து
இறப்பு 20 நவம்பர் 1859(1859-11-20) (அகவை 80)
Hookwood, இங்கிலாந்து
தேசியம் பிரித்தானியர்
படித்த கல்வி நிறுவனங்கள் இராயல் உயர்நிலைப் பள்ளி
பணி இராஜதந்திரி, வரலாற்று ஆய்வாளர்
1856 இல் தொடங்கப்பட்ட, எல்பின்சுடோன் கல்லூரி, மும்பை.

1819 முதல் 1827 வரை மும்பையின் துணைநிலை ஆளுநர்(lieutenant governer) பதவியில் திறம்பட செயலாற்றினார். அக்காலத்தில் இவர், எல்பின்சுடன் சட்டத்தை (Elphinstone code) வகுத்தார். இவர் இந்தியாவில் அரசாங்கக் கல்வி வளர்ச்சியை நன்கு திட்டமிட்டு வளர்த்தார். இந்தியர் இவரைப் பாராட்டி, இவர் பெயரால்உ ஒரு கல்லூரியை நிறுவினர். ஐரோப்பியர் இவரது உருவச்சிலையை மும்பையில் அமைத்தனர். 1829 இல் இவர் இங்கிலாந்து திரும்பினர். இம்முறை, இவர் பொதுஆளுநர் (Governer general) பதவியை மறுத்தார். காபுல் இராச்சிய வரலாறு, இந்திய வரலாறு, கிழக்கில் பிரித்தானிய செல்வாக்கு எழுச்சி என்பன இவர் எழுதிய நூல்கள் ஆகும். இவர் எழுதிய இந்திய வரலாறு சிறந்த ஆவாண நூல்களாகக் கருதப்படுகிறது.

இவர் பெயரால் ஆசுத்திரேலியா நாட்டில் ஒரு நகரம் உருவாக்கப்பட்டது. இலண்டனில் புனிதர் பவுல் தேவாலயத்தில்( St Paul's Cathedral) ஒரு சிலை இவருக்கு வைத்துள்ளனர்.[1]

ஊடகங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்பின்சுடோன்&oldid=2712267" இருந்து மீள்விக்கப்பட்டது