மம்தா சங்கர்
மம்தா சங்கர் (Mamata Shankar) (பிறப்பு 7 ஜனவரி 1955) ஒரு இந்திய நடிகையும், நடனக் கலைஞருமாவார். மேற்கு வங்காளத் திரைப்படத்துறையில் பணியாற்றியதற்காக அறியப்பட்டவர். இவர், சத்யஜித் ராய், மிருணாள் சென், ரிதுபர்னோ கோஷ், புத்ததேவ் தாஸ்குப்தா, கவுதம் கோஷ் போன்றவர்கள் உட்பட பல இயக்குநர்களின் படங்களில் நடித்துள்ளார். ஒரு நடிகையாக இருப்பதைத் தவிர, இவர் ஒரு நடனக் கலைஞராகவும், நடன இயக்குனராகவும் அறியப்படுகிறார்.[1]
மம்தா சங்கர் | |
---|---|
মমতা শঙ্কর | |
தாய்மொழியில் பெயர் | মমতা শঙ্কর |
பிறப்பு | 7 சனவரி 1955 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
தேசியம் | இந்தியா |
பணி | நடனக் கலைஞர், நடன இயக்குநர், நடிகை |
அறியப்படுவது | நடிப்பு, நடனம், உதயன் கலாகேந்திரா |
வாழ்க்கைத் துணை | சந்திரதோய் கோஷ் |
பிள்ளைகள் | இராத்துல் சங்கர், இரஜீத் சங்கர் கோஷ் |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஉதய் சங்கர் மற்றும் அமலா சங்கர் ஆகிய நடனக் கலைஞர்களுக்கு 1955ஆம் ஆண்டில் மம்தா பிறந்தார்.[2] இவர் இசைக்கலைஞர் பண்டிட் ரவிசங்கரின் மருமகள். இவரது சகோதரர் ஆனந்த சங்கர், இந்திய-மேற்கத்திய இசையின் இணைவு இசைக்கலைஞராவார்.
கொல்கத்தாவின் 'உதய் சங்கர் இந்தியா கலாச்சார மைய'த்தில் தனது தாய் அமலா சங்கரிடம் நடனத்தில் பயிற்சி பெற்றார்.[3]
தொழில்
தொகுஇயக்குநர் மிருணாள் சென்னின் இயக்கத்தில் 1976ஆம் ஆண்டில் வெளியான மிருகாயா என்ற படத்துடன் திரைப்படங்களில் அறிமுகமானார். இந்த படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.
திருமணத்துக்குப் பின்னர், 1986 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உதயன் - மம்தா சங்கர் நடன நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் இது உலகெங்கிலும் பரவலாகப் பயணிக்கிறது. இந்த குழு 1978 இல் நிறுவப்பட்டது. 1979 ஆம் ஆண்டில் இரவீந்திரநாத் தாகூரின் சந்தாலிகா என்ற படைப்பை தனது முதல் தயாரிப்பாகக் கொண்டிருந்தது.[4] அதைத் தொடர்ந்து ஹோரிகேலா, ஆஜ்கர் ஏகலபியா, மிலாப், ஷிகார், மதர் எர்த், அமிர்தஸ்யபுத்ரா , சபாரி போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்தியது.[5][6][7][8]
சொந்த வாழ்க்கை
தொகுசந்திரதேவ் கோஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. இதன்மூலம் இவர்களுக்கு இரத்துல் சங்கர் மற்றும் இரஜீத் சங்கர் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
விருதுகள்
தொகு- 1992: தேசியத் திரைப்பட விருது - சிறப்பு நடுவர் விருது (சிறப்புத் திரைப்படம்) : அகந்துக்
- 1993: "சகா பிரசகா" படத்துக்கான பி.எஃப்.ஜே.ஏ விருது-சிறந்த துணை நடிகை விருது
- 2000: பி.எஃப்.ஜே.ஏ விருது - "உத்சாப்" படத்திற்கான சிறந்த துணை நடிகைக்கான விருது
மேற்கோள்கள்
தொகு- ↑ Mamata Shankar enthralls Amdavadis தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 11 November 2001.
- ↑ Jul 25, Shamayita Chakraborty / TNN /; 2020; Ist, 12:49. "Ma's dance moves had a message: Mamata Shankar | Kolkata News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-31.
{{cite web}}
:|last2=
has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link) - ↑ Milestones Official biography.
- ↑ Dialogues in dance discourse: creating dance in Asia Pacific, by Mohd. Anis Md. Nor, World Dance Alliance, Universiti Malaya. Pusat Kebudayaan. Published by Cultural Centre, University of Malaya, 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 983-2085-85-3. Page 63.
- ↑ She enjoys the reputation of a classic ‘modern’ dancer The Tribune, 27 March 2006.
- ↑ Quoting , Jennifer Dunnings of New York Times :- "A vibrant theatrical experience. What distinguished the work was its way of telling a story so that the most jaded dance goers in the audience were lulled into rapt absorption." This was in 1983 , while she reviewed ; "Aajker Ekalabya" ; a ballet on the theme of Guru-Disciple relationship as prevalent in the present day society.
- ↑ "SNA: Events 2001-2002::". sangeetnatak.gov.in. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 1 September 2015.
- ↑ "Mamata Shankar". mamatashankardancecompany.org. பார்க்கப்பட்ட நாள் 1 September 2015.