மயில் வாகனம்
மயில்வாகனம் என்பது இந்து சமயப் புராணங்களின்படி இறைவன் முருகனின் வாகனமாகும். இதனால் முருகனை வணங்குவோர் தங்கள் பிள்ளைகளுக்கு மயில்வாகனம் என பெயர் சூட்டும் வழக்கம் உள்ளது. இந்துக்கோயில்களில் திருவிழாக்களின் பொழுது அந்தந்த கோயில் உற்சவமூர்த்திகள் ஊர்வலத்தில் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாக மயில்வாகனமும் உள்ளது. தமிழ்நாட்டின். கிருட்டிணகிரி மாவட்டம், ஒசூர் சந்திர சூடேசுவரர் கோயில் மாசி மாதம் நடக்கும் தேர் திருவாழாவின்போது தேர்த் திருவிழாவுக்கு முந்தைய நாட்களில் நடக்கும் உற்சவங்களில் மயில்வாகன உற்சவமும் ஒன்று. [1] இவ்வாறு மயில்வாகனத்தில் கடவுளர் ஊர்வலம் வருதலை மயில்வாகன சேவை என்று அழைக்கின்றனர். வாகன அமைப்புதொகுமயில்வாகனமானது மரத்தால் செய்யப்படுகிறது. வாயில் ஒரு பாம்பைக் கவ்வியபடி உள்ளவாறு மயில் நின்ற நிலையிலும், தோகைகளை விரிக்காமல் சாதாரணமாக தொங்கவிட்ட நிலையில் இருப்பது போலும் செய்யப்படுகிறது. மயில்மீது உற்சவரை அமர்த்த ஏதுவாக தாங்கு பலகைகள் கூடுதலாக அமைக்கப்படுகின்றன. இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |